எனது சாபங்களை
கரையேற்ற
எனது கண்ணீரை
பிழிந்தெறிய
எனது வன்மத்தை
பனிக்கட்டி கொண்டு கரைக்க
தண்ணீர்த் தொட்டியில்
மூச்சுவிட்டு
முகம் புதைக்கும்
ஒரு நீர்க்குமிழாக
அறுந்து விழுந்தும்
என் கனவுகளை பலிபீடத்தில்
தெளிக்க
இந்தப் பெரும் சாலையை
தெரிவு செய்துள்ளேன்
எதேச்சையாக இல்லாமல்
நம்பிக்கையோடு
இந்த சாலை கடக்குமுன்
ஒரு நண்பன்
என்னை சந்திக்கக்கூடும்
என்ற முற்பதிவுடன்...
- ஜெ.ஈழநிலவன்