அறுந்துகிடந்த
செருப்புகளுக்கு நடுவே
இருக்கையிட்டு அமர்ந்திருந்த 
தாடிக்காரத் தாத்தா
இறுக்கமாய்த்
தைத்துக் கொண்டிருந்தார்
"என் கிழிந்துபோன மனதை".

       - வான்மதி செந்தில்வாணன்

Pin It