புகைப்பட கண்கள் வழியாக
பார்க்கிறார்கள்
பாலிதீன் பை வழியாக
உண்கிறார்கள்
பிளாஸ்டிக் கோப்பை வழியாக
குடிக்கிறார்கள்
நெரிசல் மிகுந்த வழியாக
சுவாசிக்கிறார்கள்
வாகன இரைச்சல் வழியாக
பேசிக் கொள்கிறார்கள்
மரத்தின் வழியாக
சிறுநீர்க்கிறார்கள்
கிடைத்த வழியெல்லாம்
மதுக்கிறார்கள்
அடுத்த நாள் காலையில்
சிவந்த கண்களுடன் நா கூசாமல்
கூறுகிறார்கள்
"ஊட்டி போயிருந்தோம்
செம என்ஜாய்"

- கவிஜி

Pin It