இறக்கும் தருணமறிந்து பிறந்திருப்போமேயானால்
இருக்கும் தருணங்களில்
இயல்பு மாறாமல்
இருந்திருப்போம்
மனிதனாய்.......

***

man 226கடவுளின் பிம்பங்கள்
அழகானது
அரக்கனின் பிம்பங்கள்
அகோரமானது
மனிதன் அணிவித்த
முகமூடியில்..........

***

உதிர்ந்த இறகுகள்
ஒருபோதும்
உறைய வைப்பதில்லை
உயரே பறக்கும்
பறவையை.........

***

ஆலயங்களில்
தேடுவதை விட
அனாதை
இல்லங்களில்
தேடுங்கள் மலடி
பட்டங்களுக்கான
தீர்வை......

***

வானை அளந்தோம்
கடல் மீனை அளந்தோம்
கோளை அறிந்தோம்
நிலவின் கோலமறிந்தோம்!

ஏவுகணை அறிந்தோம்
ஏவும் விதம் அறிந்தோம்
வரும் புயலும் அறிந்தோம் !

வறுமைக்கோட்டை
தகர்த்தெறியும் அஸ்திரமும்
வயற்காட்டை வறட்சியாக்காத
ஆயுதமும் என்று அறிவோம்.......

- மு.கௌந்தி, சென்னை

Pin It