இரவை எப்பொழுதும்
தென்றலைக் கொண்டு
முடைகின்றன
தென்னங்கீற்றுகள்
மாலைப் பொழுதானது
ஏதோ ஒரு பூக்காரனின்
அழுக்குப் படிந்த
வெள்ளை உறைப்பையில்
மலர்களோடு வண்டாடுகின்றது
ஒவ்வொரு முறையும்
ஒரு கல் இடறி
யாரோ ஒருவரின்
தூக்கத்தைக் கலைத்துவிடும்
மிதிவண்டியின் சங்கிலியில்
துருத்திக் கொள்ளக்கூடியது
மதியமெனச் சுளித்தபோது
எங்கள் ஊரில்
மயில்கள் அகவித் தான்
தோகை விரிக்கும்
கிழக்கு...
எல்லாம் கழிந்து
பின்னிரவில்
சாளரத்தை உரசிச் செல்லும்
ஆந்தையின் அலறலை
என்றாவது கேட்டுத்தான்
உறங்கியதே தெரிகின்றது.....!
- புலமி
கீற்றில் தேட...
நீண்ட நாள்...!
- விவரங்கள்
- புலமி
- பிரிவு: கவிதைகள்