அற்புதத்தைக் கொணர்ந்திடும்
உன் அதிசயப் பார்வையில்
என் நேசத்தின்
கணமும் கானமும்
சேர்த்தே இசைக்கப்பட்டிருக்கிறது....

கடந்த நொடிகளோடு சேர்ந்து
தொடரும் வினாடிகளும்
உனையே கலந்து செய்யும்
யுக்திகளால் நிரப்பப்பட்டிருக்கிறது....

சில அவசர தருணத்தில் நீ
தந்து சென்ற முத்தம் தான்
நம் நேசத்தின் கலங்கரை விளக்கமாய்
மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது...

மேக கூட்டங்களின் விரலிடுக்குகளில்
எனை மழையாகவும் வெம்மையாகவும்
உருமாற்றும் விந்தையும் உனதன்பால் தான்
கலந்தே செய்யப்பட்டிருக்கிறது....

குறைந்தப்பட்சம் உன்
வார்த்தைகளுக்கேனும்
தெரிந்திருக்க வேண்டும்
நீ என்பதற்கு பிறகான
நான் என்பது நீ தான் என.....

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்