★அப்பா வைவார்

 அனிச்சையாய் நீளுமென் கை

 கூரைவழி வடியும் மழைநீர் !

 

 ★விழுந்த பனைமட்டை

 நெடுநேரம் சத்தமிட்டபடி

 பயந்த அணில் !

 

 ★சாப்பிட்ட தட்டு

 கழுவிக் கொண்டிருக்கிறாள்

 பசியுடன் வேலைக்காரி !

 

 ★வைக்கோல் போர்

 சரிய சரிய ஏறி விளையாடும்

 ஆட்டுக் குட்டிகள் !

 

 ★காவல் தெய்வம்

    விழிகள் வெறித்தபடி

    பலியாட்டின் தலை !

 

 ★குறுக்கே நடக்க நடக்க

     நேரானது பாதை...

     அறுவடை முடிந்த வயல் !

 

 ★அணைந்த அடுப்பு

     எரிந்து கொண்டிருக்கிறது

     பசியால் ஏழையின் வயிறு !

 

 ★திரும்பி நடக்கிறான்

     பூப்பறிக்க வந்தவன்...

     தேனருந்தும் பட்டாம்பூச்சி !

 

 - மகிழ்நன் மறைக்காடு

★அப்பா வைவார்
அனிச்சையாய் நீளுமென் கை
கூரைவழி வடியும் மழைநீர் !

★விழுந்த பனைமட்டை
நெடுநேரம் சத்தமிட்டபடி
பயந்த அணில் !

★சாப்பிட்ட தட்டு
கழுவிக் கொண்டிருக்கிறாள்
பசியுடன் வேலைக்காரி !

★வைக்கோல் போர்
சரிய சரிய ஏறி விளையாடும்
ஆட்டுக் குட்டிகள் !

★காவல் தெய்வம்
   விழிகள் வெறித்தபடி
   பலியாட்டின் தலை !

★குறுக்கே நடக்க நடக்க
    நேரானது பாதை...
    அறுவடை முடிந்த வயல் !

★அணைந்த அடுப்பு
    எரிந்து கொண்டிருக்கிறது
    பசியால் ஏழையின் வயிறு !

★திரும்பி நடக்கிறான்
    பூப்பறிக்க வந்தவன்...
    தேனருந்தும் பட்டாம்பூச்சி !

- மகிழ்நன் மறைக்காடு
Pin It