வேட்டை யாடியும் காய்கனி பறித்தும்

காட்டு வாழ்க்கை வாழ்ந்த மனிதன்

நாக ரிகத்தின் உயர்வாழ் நிலைக்கு

ஈகம் செய்த அறிவியல் அறிஞரே

சந்தை வழியில் புவிவெப்பம் உயர்வதால்

அந்திமப் பயணம் நோக்கிச் செல்லும்

உலகைக் காத்திடும் ஒற்றைத் தீர்வாய்த்

துலங்கிடும் சமதர்ம வழியை ஈங்கு

மக்க ளிடையே ஒருமித்த கருத்தாய்

இக்கண மேவர முயன்றிடு வீரே

(வேட்டையாடியும், காய் கனிகளைப் பறித்தும் காட்டு வாழ்க்கை வாழ்ந்த மனிதன், நாகரிகத்தின் உயர்ந்த வாழ்நிலை பெறுவதற்கு அறிவுசால் தியாகங்கள் செய்த அறிவியல் அறிஞர்களே! (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களையே உற்த்தி செய்ய வற்புறுத்தும்) சந்தைப் பொருளாதார வழியில் புவி வெப்பம் உயர்வதால், அழிவுப் பயணத்தை நோக்கிச் செல்லும் உலகைக் காப்பாற்றுவதற்கு ஒரே தீர்வாக விளங்கும் (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களை உற்பத்தி செய்யாமலும், புவியைக் குளிர்விக்கும் பொருட்களை உற்பத்தி செய்யவும் கூடிய உள்ளாற்றல் கொண்ட) சோஷலிச அமைப்பு இக்கணமே வர வேண்டும் என்று மக்களிடையே ஒருமித்த கருத்து உருவாக முயலுங்கள்.)

- இராமியா

Pin It