கூலி உயர்வைக் கோரும் போரும்
கேலி அல்ல வர்க்கப் போரே
என்றே மார்க்சும் கூறினார் என்று
என்றும் வெளியே வாரா திருப்பது
முதலிகள் தமக்குச் சேவை செய்யும்
அதர்மம் ஆகும் என்பத னாலே
பொருள்முதல் வழியில் வினைஞர் திரள
கருத்தியல் போரைத் தொடங்கவே எழுவீர்

(ஒவ்வொரு கூலி உயர்வுப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்று கார்ல் மார்க்ஸ் கூறினார் என்பதற்காக, கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே வராமலேயே இருப்பது முதலாளிகளுக்குச் சேவை செய்யும் அதர்மம் ஆகும். ஆகவே இயக்கவியல் பொருள் முதல் வாதத் தத்துவத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒன்று திரள, தத்துவப் போரை முன்னெடுக்க எழுவீர்.)

- இராமியா

Pin It