எல்லாம் துவக்கி வைக்கப்படுகிறது
பின் யாராலோ நடத்தப்படுகிறது
பலவும் பாதியில் நிறுத்தப்படுகிறது
ஆனாலும் நடத்தப்படுவதாய் நிருவப்படுகிறது
துவக்கம் எளிதானது.......
ஒரு நட்பை, ஒரு காதலை
ஒரு கணக்கை, ஒரு பணியை
ஒரு வாழ்க்கையை ஏன் ஒரு உயிரை கூட ...
கடினம் அதை நடத்துவதும்
அதை செய்து முடிப்பதும் தான்
நடத்துவது மாயையாகவும்
முடிப்பது புதிரானதும் கூட
துவக்கி வைத்ததை முடிக்க முடிவதில்லை
எல்லாம் முற்றுபெறாத செயலாகவே உள்ளது
முடிச்சுகளில் முடிக்கப்படாத கேள்விகளும்
தீர்க்க முடியாத சந்தேகங்களும்
பிரபஞ்சத்தை போல
அது எங்கு தொடங்கியது
எங்கு முடியும் ...
சட்டென கழுத்து நரம்பு அறுபடும் இருட்டிலும்
ஆயிரமாயிரம் முடிக்கப்படாத ........

Pin It