நகரின்
உறங்காத சாலைகளாகிவிட்டன
எனது கனவுகள்....
இரவின் வழியெங்கும்
வளைவுகளோடும்.. திருப்பங்களோடும்.

திறந்திருக்கும் காலத்தின்
அச்சுறுத்தும் கதவுகளை மூடிவிட்டு...
நிகழ் வாழ்வை...
மூடியிருக்கும் காலத்தின் கதவு திறந்து
கை பிடித்து அழைத்துச் செல்கிறது கனவு.

பாம்பென
எனைச் சுற்றி
பிளவுபட்ட நாக்குகளால் தீண்டும்
காலத்தின் நாக்குகளை நறுக்கியபடி...
வழுவழுப்பாய் வளைந்து செல்கிறது என்கனவு...
என் மேல் வழுக்கியபடி.

புன்சிரிப்பாய்
பூவென விரியும்
குழந்தைகளின் கனவுகளைத் தவிர்த்தபடி..
என் பாவம் விழுங்கி...
என் மேல் திரியும் இந்தக் கனவை...
லயித்தபடி...
இரவை இழந்து...
பகலைத் துவங்குகிறேன்...
என்னைத் தின்னும் காலத்திற்கு...
இரையாகியபடி.

Pin It