மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
உலகத்து மக்கட்கு வேண்டிய பொருளெலாம்
நலமாய்ப் படைத்திடும் உழைக்கும் வர்க்கம்
இல்லை என்றால் உயிர்வாழ் நிலையே
நில்லா தொழியும் என்பத னாலே
ஒற்றுமையாக விடுதலை வேண்டின்
வெற்றியின் ஊற்று வற்றமாட் டாதே
 
(புலி சீறினால் எதிரே நிற்கும் மானினம் உளதோ? ஞாயிறு எழுமாயின் ஓடாது நிற்கும் இருளும் வானில் உளதோ? (அது போல) உலகத்து மக்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் நல்லபடியாக உற்பத்தி செய்து தரும் உழைக்கும் வர்க்கம் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விடும்; ஆகவே (உழைக்கும் வர்க்கத்தைப் புறக்கணிக்க முடியாத நிலையில்) அவர்கள் ஒற்றுமையாக சுதந்திரம் (அதாவது சமதர்மம்) வேண்டும் என்று போராடினால் வெற்றியின் ஊற்று வற்ற மாட்டாது.)

- இராமியா

Pin It