நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்;
தகுதி யிலாரென உளையக் கூறினும்
உழைப்பவர் அரசே உரிமையை அளித்தது
பழைய கொடுமைகள் இல்லா தொழித்தது
ஆதலின் சமதர்மச் சமூகம் அமைக்க
சேதப் படுத்துவோம் முதலிகள் அரசை
வஞ்சினம் ஏதும் தேவை இல்லை
செஞ்செயல் ஒன்றே வழியாய்க் கொள்வோம்

(தொழிலாளர்கள் அரசாட்சி செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று உள்ளம் புண்படும்படியாகக் கூறினாலும், உழைப்பவர்களின் அரசாட்சி தான் மக்களுக்குச் சுதந்திரத்தை அளித்தது; பழைய கொடுமைகள் இல்லாது ஒழித்தது. ஆகவே (மீண்டும்) சோஷலிச சமூகத்தை அமைக்க, முதலாளித்துவ அரசை அழித்து ஒழிப்போம். (இதைச் செய்வதற்கு) வஞ்சினம் செய்யத் தேவையில்லை; (அதாவது வீரியம் பேசி நம் ஆற்றலை வீணடிக்க மாட்டோம்) நமது செம்மையான செயல்களையே (நிதானமான) வழியாகக் கொள்வோம்.)

- இராமியா

Pin It