சொல்லி விட வேண்டியே
நிறைவேற்றிய தீர்மானம்
நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று
வார்த்தைகளை அடைகாத்துக்
கிடக்கும் என் மெளனம் !

இன்று... நாளை... என்று
ஒத்தி வைத்து..
நிறைவேற்றிய‌ தீர்மானம்
நீர்த்துப் போன‌து!

ம‌றைந்து ந‌க‌ரும் மேக‌ங்க‌ளைக்
காண்கை‌யில்..
க‌ண்ணைக் க‌வ‌ரும்
விண்மீன் இர‌வுக‌ளில்
காத‌ல் க‌ல‌ந்திருக்கும்
நிலா வேளைக‌ளில்...

நீய‌ற்ற தனிமை..
மிக‌ நீள‌மாக‌வும்... க‌ன‌மாக‌வும்..!

- தண்மதி

Pin It