ஒரு பறவை பறந்து போக வேண்டுமென நான் விரும்பினேன்,
என் வீட்டருகில் நாளெல்லாம் பாட வேண்டாம் என்று;
கதவருகிலிருந்து அதை நோக்கி என் கைகளைத் தட்டினேன்
இனிமேல் நான் அதைச் சகிக்க முடியாது எனத் தோன்றியபோது.
தவறு பாதி என்னிடமும் இருக்கிறது.
அது பாடுவதற்கு அப்பறவையைக் குறை சொல்லலாகாது.
எந்தப் பாடலுமின்றி சலனமற்று இருக்க
உண்மையில் ஏதோ குறையிருக்க வேண்டும்.   

கவிஞர்: 'ராபெர்ட் ப்ராஸ்ட்'டின் ஒன்பதாவது பாடல்

A Minor Bird, Robert Frost (9)

தமிழாக்கம் வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It