புழுவைச் சுவைக்க

தூண்டிலில் சிக்கிய மீன்களின்

வயிற்றில் இருக்கும்

புழுக்கள் அதற்கும் இரையாகாமல்

வீணாகின்றன.

தக்கையின் ஆட்டத்தில்

இழுக்கும் வேகத்தில்

மீன்களுக்குப் பதில்

சில நேரங்களில்

பாம்புகள் சிக்குகின்றன

லஞ்சப்பணம் வாங்கி சிக்கிய

தாசில்தார் அலுவலக பியூன் போல.

ஆனாலும்

பாம்புகளின் நடவடிக்கைகள்

குறையவில்லை.

தூண்டில் முள்ளுக்குத் தெரிவதில்லை

பாம்புகள் வயிற்றுக்குள்

இருக்கும் மீன் குஞ்சுகளின் இறப்பு.

ஆனாலும்

வாழ்தலுக்கான

தேடலுடன்

நீரில் அலைகின்றன

பாம்புகளும், மீன்களும். . .

- ப.கவிதா குமார்

 

Pin It