தமிழக மீனவர்களை இனிமேலும்  கொலைசெய்ய நடக்கும் சதிகள்

கருத்தரங்கம் – சென்னை  

தமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம்

காலச்சுவடு பத்திரிக்கை ஆழசிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் தமிழக மீனவர் படுகொலை பற்றிய சூரியநாரயணன் பேட்டி மீனவர் படுகொலைக்கான அடிப்படை நீதித்தேடல் என்பதில் இருந்து நழுவி பிரச்சனையின் மையம் என ஒரு பொய்யான திரிபு கதை முன்வைக்கப்படுகிறது. இதை எந்தவித கேள்வியுமின்றி, முரணுமின்றி காலச்சுவடு பேட்டியை நடத்திச்சென்றுள்ளது அதிர்ச்சிகரமானதாகவும், வருந்தத்தக்கதாகவும் உள்ளது. இதில் வெளியாகி இருக்கும் புரட்டை உடைக்கும் விதமாகவும், உண்மை நிலையையும், படுகொலையாளிகளை கைது செய்து தண்டிக்க நடக்கும் வழக்கு பற்றியும் விரிவாகப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 25 ஆண்டுகளாக இலங்கைக் கடற்படை 539 தமிழக மீனவர்களைக் கொன்றிருக்கிறது.  ஆனால் கொலை செய்த இலங்கைக் கடற்படை கொலைகாரர்களைக் கைது செய்யவோ கண்டிக்கவோ முற்படவில்லை.  தமிழக மீனவனைக் காக்க இந்திய கடலோரக் காவல் படையை பலப்படுத்த, நவீனப்படுத்த வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, இலங்கைக்கு கடற்படைக்கு கப்பலும் பயிற்சியும் ஆயுதமும் ஆதரவும் இந்தியா வழங்குகிறது.  கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றவுடன், மீனவப் படுகொலையை திசைதிருப்பும் முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் இல்லாமல் இழுவைப் படகு பயன்படுத்துவதாலே இக்கொலைகள் நடப்பதாக திசைதிருப்பப்படுகிறது. ஆனால் இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித்தலை செய்பவர்களே. இத்திசைதிருப்பலை செய்பவர்கள் சென்னையைச் சார்ந்த உயர்சாதி குழுவினரான முன்னாள் அரசு அதிகாரிகளும் மற்றும் “இந்து” பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்ட சில முன்ணனிப் பத்திரிக்கையாளர்களுமே. 

இவ்வாறு செய்வதன் மூலமாக இந்த மீனவர்கள்  படுகொலை விசாரணையிலிருந்து இந்திய, இலங்கை அரசுகளை காப்பாற்றுவதுடன் இனிமேலும் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதில் நியாயம் உள்ளது என்கிற பேச்சை முன்வைக்கின்றனர்.

இந்த உயர்சாதிக் குழுக்களை, பத்திரிக்கையாளர்களை - பொய் செய்திகளை பரப்புவதிலிருந்து தடுக்காவிட்டால் நமது மீனவர்களை படுகொலை செய்வது அதிகரிக்கும்.

கடல் எல்லை கடந்து மீன் பிடிப்பது உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.  தமிழக மீனவனைத் தவிர உலகில் எந்த மீனவனும் இதற்காக கொலை செய்யப்பட்டது இல்லை. கட்சத்தீவு இலங்கைக்கு அளித்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மாபெரும் குற்றமாகும், இதை மக்களிடத்தில் மறைத்து  மக்களை திசை திருப்பும்  சதியைப்பற்றி மேலும் விரிவாக விளக்க அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். இந்த கருத்தரங்கை தமிழக மக்கள் உரிமை கழகமும், மே பதினேழு இயக்கமும் ஒருங்கிணைக்கிறார்கள்  

 வழக்கறிஞர் பா. புகழேந்தி

கா. அய்யாநாதன்

சீதையின் மைந்தன் – கட்சதீவு மீட்பு இயக்கம்

மகேஷ் – பாரம்பரிய மீனவர் சங்கம்

திருமுருகன் காந்தி

இதற்கான கருத்தரங்கு சென்னை தி.நகர்.  செ.தெ. நாயகம் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.3.2011)அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.  சதிகளை தகர்க்க வாரீர்.

தமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம்

7871167265 - 9884877487

Pin It