நிகழ்வுகளுக்கு
இடையேயுள்ள இடைவெளியில்
கருக்கொண்டது
பலவாகப் பிரியும் பாதையிலுள்ள
ஒற்றைப் பனை மரத்தில்
உருக்கொண்டது
விதை வடிவம்
பெரும் விருட்சத்தை
தன்னுள் அடக்கியது
சின்ன அலைகளெல்லாம்
ஒன்று சேர்ந்து பேரலையாக
எழுந்து கரையை முத்தமிட்டது
வீசும் காற்றில்
உதிரும் பழுத்த இலைகளில்
வாழ்வின் அநித்யம் தெரிந்தது
மழை தான் விழும் இடத்தை
தனது முகவரியாக்கிக் கொண்டது
நகரும் மேகத்தில்
யானையின் உருவம் தெரிந்தது
மொட்டை மாடியில்
நிலா பார்த்துக் கொண்டே
குழந்தைகள் உணவு உட்கொண்டது
பிச்சைக்காரன் தட்டில்
சிதறிக் கிடக்கும் சில்லறையாக
வானில் நட்சத்திரங்கள்
சிதறிக் கிடந்தது.

Pin It