நண்பா...
எவற்றில் நாம் வேறுபடுகிறோம்?
நாம் பேசும் மொழியில்?
 ஆனால் அதன் அர்த்தத்தில் அல்ல
நம் சீருடையில்?-
 ஆனால் அதன் பாதுகாப்பற்ற அடையாளத்தில் அல்ல
நம் அதிகாரத்தின் வடிவில் ?
         ஆனால் அதன் குரூரமான உள்ளடகத்தில் அல்ல

நம் வறண்ட நிலத்தின்
நீரூற்றுகளான நம் குழந்தைகளுக்கு
நாம் எதை விட்டுச்செல்கிறோம் ?
         சிதைந்த உடல்களுடன்
         வெளிறிய பார்வை கலந்த அரிய புகைப்படங்கள்;
         தூசு படியும் வரலாற்று பொக்கிஷங்கள்;
இவை தவிர
         அதிகாரத்தால் முடுக்கப்பட்டு
         ஓயாது அசையும் தலைகள்..
நண்பா..
         இனி நம் யுத்தம் எதிர்முகமானது..
         நம்மை ஓயாது செதுக்கிய
         உளிகளுக்கு எதிரானது…
         நம் திரும்புதலின் கலகம்
         வெறும் அதிகார மீட்பு அல்ல..
         அதுவே நம் மனசாட்சியின் வடிவம்.

- சுரேசுகுமாரன் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It