தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நவம்பர் 21-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதன் படி ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல இந்துக் கோவில்களின் வாசல்களில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக் காட்டி  அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வர வேண்டும். ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தாவும் பெண்கள் புடவை ரவிக்கை, சுடிதார், தாவணி ரவிக்கை அணிந்து வரவேண்டும் என்றும், குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

 கோடிக்கணக்கான வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளபோது தாமாகவே முன்வந்து ஒரு வழக்கைப் பதிவுசெய்து அதற்காக இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத் துறையை எதிர்மனுதாரராக சேர்த்து இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுக்க வேண்டிய அவசியம் எஸ்.வைத்தியநாதனுக்கு ஏன் ஏற்பட்டது? யார் இந்த வைத்தியநாதன்? காஞ்சிபுரம் தேவநாதன், ஆவின்பால் திருடன் வைத்தியநாதன், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் தனது பத்திரிக்கையில் வாந்தி எடுக்கும் தினமணி வைத்தியநாதன் போன்ற நாதன்களைப் போன்றே இந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கும் ஒரு வரலாறு உண்டு. அது என்னா வரலாறுன்னா……

 திருச்சி சட்டக் கல்லூரி மாணவிகள் விடுதியில்  மாணவிகள் செல்போன் வைத்துள்ளார்களா என விடுதி வார்டனும் உதவிப் பேராசிரியருமான கிருஷ்ணலீலா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடத்தினார். இதைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நிர்வாகம் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்கள் நான்கு பேரை சட்டக் கல்லூரியில் இருந்து நீக்கி உத்திரவிட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் போன மார்ச் மாதம் நம்ம எஸ்.வைத்தி மாமா தான் ஒரு தீர்ப்பு கொடுத்தார். அதில் அந்த மாணவர்களை நீக்கியது செல்லும் என்று கூறியதோடு நிற்காமல் இந்துமத நூல்கள், குரான், பைபிள் போன்றவற்றில் பெண்களை உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். மாணவர்கள் விடுதி வார்டனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொல்லப்படுகின்றது. அது உண்மையா, பொய்யா என்று  நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்துமத நூல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக கூறப்பட்டுள்ளது என ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகின்றார் என்றால், ஒன்று அவர் உண்மையில் இந்துமத நூல்களை படிக்காதவராக இருக்க வேண்டும், இல்லை கருப்பு அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் காரராக இருக்க வேண்டும்.

    சென்ற ஆண்டு நிலமோசடி வழக்கு ஒன்றில் தீர்ப்பு கூறிய வைத்திமாமா இஸ்லாமியா நாடுகளில் உள்ளது போன்றே குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கைகள், விரல்கள் போன்றவற்றை வெட்டும் கடுமையான சட்டங்கள் இந்தியாவில் இல்லையே என மனம் குமுறி இருந்தார். ஒரு வேலை அப்படி ஒரு சட்டம் இருந்திருந்தால் இந்தப் பாவியிடம் மாட்டி பல பேர் மாற்றுத் திறனாளிகளாக மாறியிருப்பார்கள். இந்த இரண்டு வழக்கையும் சேர்த்துப் பார்த்தாலே இந்த வைத்தி ஒரு பக்கா ஆர்.எஸ்.எஸ் காரர் என்பது புலப்படும்.

  யாராவது சம்மந்தமில்லாமல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அவர்கள் மீது அபராதம் விதிக்கும் நீதிபதிகள், தம்மிடம் வரும் வழக்கு தொடர்பாக மட்டும் தீர்ப்பு வழங்காமல் தங்களுடைய அபிலாசைகளையும் தீர்த்துக் கொள்ள அதைப் பயன்படுத்தும்போது அதை ஏன் நீதிமன்றங்கள் கண்டுகொள்வதில்லை? ஜாமீன் கேட்டு தத்துவிடம் போனால் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்திரவிடுவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தால் அனைத்துக் கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதும் என்ன வகையான நீதி மைலாட் அவர்களே! 

 கோவில்களில் தெய்வீக சூழலை உருவாக்கத்தான் இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள். இப்போது கோவிலில் தெய்வீகச்சூழலை உருவாக்கி இந்த வைத்தி மாமா என்ன செய்யப் போகின்றார்? தமிழ்நாடே மதுவால் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது, தினம், தினம் குழந்தைகளின் மீதும், பெண்களின் மீதும் பாலியல் வன்முறைகள் நடந்துகொண்டு இருக்கின்றது, நாடே நிதி நெருக்கடியில் திவாலாகிக் கொண்டு இருக்கின்றது. மக்கள் தங்களின் வறுமைக்கும், வாழ்வாதார நெருக்கடிக்கும் என்ன காரணம், யார் காரணம் என புரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் உங்களது சிந்தனை ஆடைகளுக்குள் புகுந்து அலசுகின்றதே மைலாட் அவர்களே!

 ஒரு வேளை  வைத்தியநாதனின் கனவில் வந்த கடவுள் தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் ஆபாசமாக ஆடை அணிந்து வருவதைப் பார்த்து தான் மனம் வெதும்பி பல நாட்கள் கண்ணீர் விட்டு கோவென அழுததாகவும், அதிலும் குறிப்பாக குழந்தைகள் உடல்முழுவதும் மூடாத ஆடை அணிந்து வருவது தன்னை தர்மசங்கடப்படுத்துவதாகவும், எனவே என்னை குசி படுத்தவதற்காகவே இந்தப் பிறவி எடுத்த எஸ்.வைத்தியநாதனாகிய நீ உன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருப்பார் என்று நினைக்கின்றேன்.

   ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதிகள் நீதித்துறையில் நுழைந்தால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதற்கு இந்த வைத்தி மாமாவே ஒரு நல்ல சாட்சி. இது போன்றவர்களை அனைத்து நீதிமன்றங்களிலும் நியமிக்கவே மோடி அரசு தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்தைக் கொண்டுவர துடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ்-சின் அனைத்தையும் இந்து மயமாக்கவேண்டும் என்ற கொள்கையின் நீதிபதி வடிவமே வைத்தியநாதன். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி காலிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் இந்த வைத்திமாமாவால் நிறைவேற்றி வைத்திருக்க முடிகின்றது.

 ஆனால் நம்முடைய பக்தகோடிகளுக்குத் தான் எப்போதும் வெட்க மானமே இருப்பது கிடையாதே! சாமியைக் கும்பிட வேண்டும் என்றால் சட்டையைக் கழட்டச் சொன்னாலும் கழட்டுவான், வேட்டியைக் கழட்டச் சொன்னாலும் கழட்டுவான். அவனுக்குத் தேவை கடவுளின் அருள். அதற்காக தன்வீட்டுப் பெண்களை சிவலிங்கத்தைத் தொட்டு தரிசனம் செய்யவும் கற்றுக் கொடுப்பான். பார்ப்பனன் எந்தக் கருமத்தை தீர்த்தம் என்றும், பிரசாதம் என்றும் கொடுத்தாலும் அதை வாங்கி நக்கித் தின்பான். “என்னைப் பார்த்து வேட்டியும், சட்டையும், சேலையும் ரவிக்கையும் அணிந்துவர வேண்டும் என்று சொல்லும் நீ ஏன்டா நாயே, எப்போதும் அரை நிர்வாணமாக தொந்தியைக் காட்டிக்கொண்டு நிற்கின்றாய்” என்று எவனும் கேட்கமாட்டான். போதாத குறைக்கு மனு நமக்கு எல்லாம் கொடுத்த தேவிடியாப்பயல் பட்டத்தையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு எஸ்.வைத்தியநாத மாமாவின் தீர்ப்பை செம்மையாக கடைபிடிப்பான்.

 கருவறைக்குள் நம்மை விடவில்லை என்றால் என்ன, நம்முடைய மொழியில் அர்ச்சனை செய்யவில்லை என்றால் என்ன, நம்மை கோவிலுக்கு உள்ளேயே வர விடவில்லை என்றாலும் என்ன, இல்லை நம்மை அவன் தேவடியாப்பயல் என்று சொன்னால்தான் என்ன, கோவிலில் பார்ப்பனன் கையால் செய்த பொங்கலும், சுண்டலும் கொடுக்கின்றார்களே.. அந்த ருசிக்கு இந்த உலகில் ஈடு இணை இருக்குமா?

- செ.கார்கி