butitiscomநீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. தமிழர்களின் அரசியலை, தமிழர்களின் பார்வையில் இந்திய அரசியலை, உலக அரசியலை எடுத்துரைக்கும் வகையில் ஆங்கிலத்தில் ஓர் இணையதளத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதற்கான பெயராக ‘but it is’ என்பதைப் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கீற்று வேலைகள், சொந்த வேலைகளில் காரணமாக, இதற்கான வடிவமைப்பு தள்ளிக் கொண்டே போனது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்று கடந்த ஒரு வாரமாக இதற்கான வேலைகளில் ஈடுபட்டு, தற்போது ‘www.butitis.com’ இணையதளம் தயாராகி உள்ளது.

கீற்றில் வருவதுபோன்று, தமிழக அமைப்புகளிடேயேயான விவாதங்கள், விமர்சனங்கள் butitis.com-ல் இடம்பெறாது. தலித், சிறுபான்மையினர் நலன், சுற்றுச்சூழல், தேசிய இனப் போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலகமய எதிர்ப்பு குறித்த நேர்மறையான கட்டுரைகள், விவாதங்கள் இடம்பெறும். நேரடிக் கட்டுரைகள் மட்டுமின்றி, கீற்றில் வெளிவரும் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இத்தளத்தில் வெளியிடப்படும்.

கீற்றினைப் போலவே, இதனையும் வாசகர்களாகிய நீங்கள் தான் வெற்றி பெறச்செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் எழுதுபவர்களும், மொழிபெயர்க்கும் திறன் உள்ளவர்களும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.-ல் தொடர்பு கொள்ளவும்.

நன்றி!

என்றும் அன்புடன்

கீற்று நந்தன்

Pin It