Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் நிலையில், மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலையை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் மாநில முதல்வர் ஜெயலலிதா. மேலும் போராடும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் ''போராடும் மக்களில் ஒருத்தியாக இருப்பேன் " என்றும் சொன்னார். ஆனால் இப்போது சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த மறு நாளே ஆயிரக்கணக்கான போலீசாரை அந்தப் பகுதியில் குவித்து அணு உலையை இயக்க நடவடிக்கை எடுத்திருக்கும் மாநில அரசின் நடவடிக்கை கடும் ஏமாற்றமளிக்கிறது. முதல்வரின் வாக்குப்படியும் , சட்டமன்ற தீர்மானத்தின் படியும் மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அச்சத்தைப் போக்க வேண்டியவர்கள் மக்களைச் சந்திக்காத நிலையில் தமிழக அரசின் இந்நடவடிக்கையை படைப்பாளிகள், பத்திரிகையாளர்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.

கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் கிராமங்களை உள்ளூரிலிருந்து துண்டித்து போராடும் மக்களை தனிமைப்படுத்தும் இப்போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அஹிம்சை வழியில் போராடும் மக்களை ஆயுதங்களைக் கொண்டு அடக்க முயல்வதும் மக்களை ஏனைய பிற சமூங்களிடமிருந்து தனித்துப் பிரித்து வன்முறை மூலம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்க முயல்வதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்கு பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் எங்கள் கருத்தை பொதுமக்கள் முன்பும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கவனத்துக்கும் இந்த அறிக்கையின் வாயிலாக வைக்க விரும்புகிறோம்.

தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்க்க கூடங்குளம் அணு உலை உதவும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. இது உண்மையல்ல. நமது மின்பற்றாக்குறையை தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ளவேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்கு சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல் குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்கின்ற பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலை நோக்குப் பார்வையில் பார்க்கும்போது மின் கடத்துவதில் விரயமாகும் 40 சதவிகிதத்தை பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்கு தேவைப்படாது. சூரியசக்தி, காற்று போன்ற இதர வழிகளும் உள்ளன. இவற்றையெல்லாம் மேற்கொள்ள வசதியாக, தமிழக முதலமைச்சர் அவர்கள் போராடும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தார்கள். மாநில அரசு அமைத்த குழுவினர் திட்டமிட்டபடி அணு உலைக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியதும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அணு உலையை திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதும் ஏமாற்றமளிக்கின்றது.

அணுசக்தி என்பது பல தலைமுறைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்தானதும், மனிதர்களால் இன்னமும் தீர்வு கண்டுபிடிக்கப்படாததுமான ஒரு தொழில்நுட்பமாகும். அதற்காகும் மிக அதிகப் பொருட்செலவில் அது தருவது மிகக் குறைந்த மின்சாரம்தான் என்பதும் புள்ளிவிவரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத் தலைமுறைகளுக்கெல்லாம் தலைவலியாக இருக்கக்கூடிய அணு உலைகள், நமக்கு வேண்டவே வேண்டாம் என்பதே எங்கள் கருத்தாகும். இருக்கும் அணு உலைகளையும் படிப்படியாக் மூடிவிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்த எங்கள் கருத்துக்கு ஆதாரமாக எண்ணற்ற அறிஞர்கள் இந்தியாவிலும் உலகெங்கும் பல தகவல்களைக் கடந்த 50 வருடங்களாக அளித்தவண்ணம் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று பல வருடங்கள் முன்பே எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களைக் கோருகிறோம். அணு உலைகளால் உலகெங்கிலும் ஏற்பட்ட பேரழிவுகளை எண்ணிப் பார்த்து அழிவின் விழிம்பில் சிக்கியுள்ள கூடங்குளம் மக்களை காப்பாற்றுமாறு கோருகிறோம். அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக விலக்கி மக்களை நேரடியாக தமிழக முதல்வர் சென்று சந்திக்க வேண்டும் எனக் கோருகிறோம். 

ஒருங்கிணைப்புக் குழு

பத்திரிகையாளர் - அருள் எழிலன், எழுத்தாளர் -சந்திரா, கார்டூனிஸ்ட் பாலா, பத்திரிகையாளர் - கவின் மலர்.

எழுத்தாளர்கள் 

இந்திரா பார்த்தசாரதி

பிரபஞ்சன்

பொன்னீலன்

நாஞ்சில் நாடன்

பா.செயப்பிரகாசம்

ஞாநி

கோணங்கி

அம்பை

பாமா

எஸ்.ராமகிருஷ்ணன்

அ.மார்க்ஸ்

பாஸ்கர் சக்தி

அழகிய பெரியவன்

யூமா வாசுகி

அஜயன் பாலா

முத்துகிருஷ்ணன்

குறும்பனை பெர்லின்

சந்திரா

யுவபாரதி மணிகண்டன்

ஸ்டாலின் ராஜாங்கம்

லட்சுமி சரவணகுமார்

கணேசகுமாரன்

யாழினி மூனுசாமி

சுபகுணராஜன்

முருகபூபதி, மணல் மகுடி நாடகக் குழுவினர்

ஆலூர் ஷானவாஷ்

சிறில் அலெக்ஸ்

பவுத்த அய்யனார்

முத்து மீனாள்

பூவுலகு - சுந்தர்ராஜன்

தி.க. சிவசங்கரன்

தொ.பரமசிவன்

லேனா.குமார்

கொற்றவை

விஷ்ணுபுரம் சரவணன்

மீனாகந்தசாமி

லிவிங்க் ஸ்மைல் வித்யா

பாமரன்

பர்வீன் சுல்தானா

பாரதி கிருஷ்ணகுமார்

ப்ரேமா ரேவதி

ஜமாலன்

யமுனா ராஜேந்திரன்.

 கவிஞர்கள்

இன்குலாப்

அறிவுமதி

மாலதி மைத்ரி

குட்டி ரேவதி

கலாப்ரியா

சுகிர்தராணி

யாழன் ஆதி

மனுஷ்யபுத்திரன்

தாமரை

யுகபாரதி

தேவதேவன்

ஷங்கர் ராம சுப்ரமணியன்

ஜெயபாஸ்கரன்

செல்மா பிரியதர்ஸன்

வெளி ரங்கராஜன்

ச.விஜயலட்சுமி

தி.பரமேசுவரி

யவனிகா ஸ்ரீராம்

வசுமித்ர

நேசமித்திரன்

அரங்க மல்லிகா

திரைத்துறையினர்

இயக்குநர்- வெற்றிமாறன்

இயக்குநர் - அமீர்

இயக்குநர் - ஜனநாதன்

இயக்குநர் – ராம்

இயக்குநர்- சீனு ராமசாமி

இயக்குநர் - செந்தமிழன்

இயக்குநர் - ஆர்.ஆர் .சீனிவாசன்

இயக்குநர் - ஆர். பி. அமுதன்

பத்திரிகையாளர்கள்

பாபு ஜெயக்குமார்

அ.தா.பாலசுப்ரமணியன்

பாரதி தம்பி

ராஜுமுருகன்

அருள் எழிலன்

கார்டூனிஸ்ட் பாலா

புனிதப் பாண்டியன்

பாலச்சந்திரன்

பால பாரதி

தமிழ் கனல்

கவிதா முரளீதரன்

முரளீதரன்

 ஆர்.பகத்சிங்

திருவண்ணாமலை ராஜா

ப்ரியா தம்பி

சுகுணா திவாகர்

சுந்தரபுத்தன்

யுவகிருஷ்ணா

ந.வினோத் குமார்

அதிஷா

கவின் மலர்

திருவட்டாறு சிந்துகுமார்

ஆரா

என்.அசோகன்

ஜெயராணி

தளவாய் சுந்தரம்

மகாலிங்கம் பொன்னுசாமி

அருள் செழியன்

எம்.பி.உதயசூரியன்

நீயா நானா - ஆண்டனி

வினி ஷர்ப்பனா

கீற்று ரமேஷ்

கவிதா சொர்ணவள்ளி

ஓவியர்கள்

ட்ராஸ்கி மருது

வீரசந்தானம்

ரோகிணி மணி

மணி வர்மா

முகிலன்

சந்துரு

 நட்ராஜ்

அரஸ்

ஹாசிப்கான்

தமிழரசு

புகழேந்தி

வெங்கட்

அமிர்தலிங்கம்

பாலாஜி

ஷ்யாம்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ram 2012-03-23 20:58
வழக்கம்போல வந்துவிட்டார்கள ் அறிக்கை புலி அறிவுஜீவிகள். இவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த அவர்களின் வரிகளிலிருந்து ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.

"தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்க்க கூடங்குளம் அணு உலை உதவும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது . இது உண்மையல்ல. நமது மின்பற்றாக்குறை யை தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ளவேண்டும்.".

இந்த மாற்றுவழிகளை கடைபிடிப்பதற்கு இவர்களில் ஒருவராவது தயாரா? நான் கேட்பது சொந்த வாழ்க்கையில். அப்படியான மாற்றுவழி மின்சாரம் அல்லது இயற்கைக்கு பாதகமில்லாத எரிசக்தியை மட்டுமே பயன்படுத்தி இவர்கள் வாழத்தயாரா? போக்குவரத்துக்க ு நடை அல்லது சைக்கிள் பயன்படுத்த வேண்டும். வீட்டில் காடாவிளக்கு அல்லது அரிக்கன் விளக்கு பயன்படுத்த வேண்டும். பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அலோபதியை நாடவே கூடாது. பக்கவிளைவுகளற்ற சித்த மருத்துவத்தை மட்டுமே இவர்கள் கடைபிடிக்கவேண்ட ும். அப்படி செய்யாமல், இயற்கைக்கும் சுற்றுச்சுழலுக் கும் பெரும் கேடுபயக்கிற பெட்ரோலை குடிக்கும் ஸ்கூட்டரில் துவங்கி, கார் வரை பயன்படுத்திக்கொ ண்டு, கோடை வெய்யிலுக்கு மின்சாரத்தை உறிஞ்சும் ஏசிக்களை ஓடவிட்டுக்கொண்ட ிருக்கும் இவர்களைப்போன்றவ ர்களின் பொல்லி பரப்புரைகள் தான் கூடங்குளம் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்துகொண்டிரு க்கிறது. அவரவர் சார்ந்த நிறுவனங்களிலோ, அல்லது சொந்த வாழ்க்கையிலோ நொடிக்கு நொடி விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வரும் சொகுசுகளை அனுபவித்துக்கொண ்டு, அணூமின்சாரம் ஆபத்து என்கிற அரைவேக்காட்டு வாதத்தை முன் நிறுத்தி பரப்புரை செய்யும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்க முடியும்.

உடனே, அணு மின்சாரம் ஆபத்தற்றதா என்று கேட்காதீர்கள். ஆபத்தானதுதான். ஆனால் அந்த ஆபத்தை பெருமளவு குறைக்க விஞ்ஞானம் இதுவரை உதவியே வந்திருக்கிறது. இனியும் உதவும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. காரணம் இந்த துறை சார் வல்லுநர்கள் பெரும்பாலானவர்க ளின் கருத்துப்படி, இந்த ஆபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். முடிந்திருக்கிற து. விஞ்ஞானத்தை நம்பும் எவரும் இதை ஒப்புக்கொள்வார் கள். எனக்கு விஞ்ஞானத்தில் நம்பிக்கை இருக்கிறது அதனால் நான் இதை ஆதரிக்கிறேன். உதாரணமாக பென்சிலின் மருந்தை எடுத்துக்கொள்ளு ங்கள். இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளிலேயே மிகவும் வீரியமானது இது. இதை தவறாக பயன்படுத்தினால் மரணம் நிச்சயம். ஆனால் அந்த பென்சிலின் மருந்து இல்லாமல் ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு இல்லை என்பது தான் மருத்துவ சரித்திரம். இன்றளவும் லட்சக்கணக்கானவர ்களின் உயிரை அது காத்தே வந்திருக்கிறது. அலோபதி மருத்துவ உலகின் உயிர் காக்கும் மருந்துகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. இவற்றில் கணிசமானவை தவறாக பயன்படுத்தினாலோ , தவறானவர்களுக்கு அளித்தாலோ இவை உயிர் பரிப்பு மருந்தாக மாறும் ஆபத்திருக்கிறது . இது தான் விஞ்னா யதார்த்தம். அது அணுமின்சாரத்துக ்கும் பொருந்தும். அதனாலேயே அதை நான் ஆதரிக்கிறேன்.

மற்றபடி, ஜெயலலிதா அரசு தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியா என்றால், கண்டிப்பாக தவறு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை கண்டிப்பதோடு இவர்கள் நின்றால் அது சரியான அணுகுமுறையாக இருக்கும்,. இவர்கள் அதையும் அணு உலை எதிர்ப்பையும் குழ்ப்பியடிப்பத ு தான் பிரச்சினை.

அத்துடன் கூட, இதில் உதயகுமார் வகையறாக்கள் ஜெயலலிதாவை விம்சிப்பது சரியா என்கிற தனிக்கேள்வியும் இருக்கிறது. இதுவரை காலமும் ஜெயலலிதா அரசுக்கு போற்றி பாடிய உதயகுமார் அவர்கள், ஜெயலலிதா அரசின் மற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டுகொள்ளவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. முல்லைப்பெரியாற ு அணை பிரச்சினையில் போராடிய மதுரை விவசாயிகள் மீது இதே ஜெயலலிதாவின் இதே அடியாள் காவல்படை காட்டுமிராண்டித ்தாக்குதலை நடத்தியபோது உதயகுமாரும் அவர் தம் ஆதரவாளர்களும் மவுனம் காக்கலாம் என்றால், உதயகுமாரால் "புரட்சித்தலைவி அம்மா" என்று கடந்த ஆறுமாத காலமாக வாயாற பாரட்டப்பட்ட "அம்மாவின் கருணை" மழையில் அவர் குளிப்பதை என்னைப்போன்றவர் கள் எதற்காக கண்டிக்கவேண்டும ். அனுதாபப்படுவதை தவிர அடியேனுக்கு வேறு வசி தெரியவில்லை பராபரமே!
Report to administrator
0 #2 natarajan 2012-03-25 14:05
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இன்று போர் படைகலன்கள் அறிவியல் ஆராய்ச்சிக்குதா ன் அதிகம் செலவு செய்கின்றன. அதை அறிவியல் வளர்ச்சி என்று சொல்ல முடியுமா? நமது இந்த அண்டத்தில் உயிர் வாழ தகுதியானது பூமி கோளம் மட்டும்தான். அறிவியல், வளர்ச்சி என்று அதை அழித்து விட்டு எங்கு போய் வாழ்வது
Report to administrator
0 #3 durai ilamurugu 2012-03-27 01:06
அய்யோ பாவம் உ குஅமாருக்கு அரசைப்பற்றிய அடிப்படை உண்மை இப்பொழுதுதான் தெரிந்தது போலும் தொலைகாட்சியில் செவ்வி அளிப்பது, விமானத்தில் அரசு செலவில் பயணம் செய்து பியரதமரைச் சந்திப்பது , மாற்றி மாற்றி சொகுசு உந்துகளில் பயனிப்பது இவைதான் போராட்டம் என்று எண்ணீவிட்டார் போலூம்/ புரட்சி வெடிக்கும் என்று அவர் அடிகடி சொல்லிய போது புரட்சி என்பது நளினமான தையல் வேலையோ அல்லது மாலை நேர விருந்தோ அல்ல என்று அவரும் அவருடைய ?? நகசலைட்டு நண்பர்களும் உண்ர்ந்து இருப்பார்கள் என்று நினைத்தோம் 2 மணி சாலை மறியலுக்கே 10 பேரை சுட்டுக் கொன்ற அரசு (பரமக்குடி) நமக்கு இந்த அளவு உரிமை கொடுத்து இருக்கிறெதே? ஏன் ? என்று எண்ணீப்பார்த்தி ருக்க வேண்டமா?இது அறப்போராட்டமும் அன்று, மக்களுக்கானபோரா ட்டமும் அன்று. அறிவியலுக்கு எதிரான மதவாதப்போராட்டம ் இதை அவர் இப்பொழுதாவது உணர்வாரா?
Report to administrator

Add comment


Security code
Refresh