சீன நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஆங்கில சொற்றொடர்ச் சுருக்கம் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.

உலக நல்வாழ்வு நிறுவனத்தை (World Health Organisation)WHO எனக் குறிப்பிடுவதைப் போல பல்வேறு சுருக்க ஆங்கிலச் சொற்களை ஆங்கிலம் அல்லாத வேற்று மொழிகளில் பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.

சீனாவில் இதுபோன்ற ஆங்கில சொற் சுருக்கங்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையைச் சீன நடுவண் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் பெய்சிங் தொலைக்காட்சி உட்பட அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சீன அரசு அனுப்பியுள்ளது. அதில், ஆங்கில சொற் சுருக்கங்களுக்கு இணையான சீனச் சொற்களைப் பயன்படுத்துமாறு ஒளிபரப்பாளர்களையும் செய்தியாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு தமிழுக்கு இவ்வாறு செய்யுமா?

Pin It