தற்போது இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

காந்தி குல்லாப் போட்ட ஒரு இந்துத்துவா சாத்தான்!

அந்த சாத்தானை தேவலோகத்திலிருந்து அவ தரித்த தேவ தூதன் என்று நினைத்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள், அப்பாவி பொதுமக்கள். என்ன செய்வது?

இன்று இந்தியாவை ஊழல் என்ற பெருச்சாளி எல்லாக் கட்சிகளிலும் வேறுபாடின்றி எங்கும் நிறைந்துள்ளது. அன்னா அசாரே என்ற ஏமாற்றுப் புனிதர் நாறிப்போன இந்த ஊழல் அமைப்பை மாற்றுகிற வழி காட்டும் முறை நமக்கு நகைப்புதான் வருகிறது.

சரி, இவர் சொல்கிற லோக்பால், ஜன லோபால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்!

லோக்பால் என்றால் மக்களின் பாதுகாவலன் என்று பொருள்.

அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.

இதனால் மக்களின் நலனும் நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.

இப்போதுள்ள சட்டங்கள் வலுவாக இல்லை. விசாரணை விரைவாக நடப்பதில்லை. எனவே ஊழல் புகார்களை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க ஒரு அமைப்பு தேவை. அதுதான் லோக்பால் என்று மத்திய அரசு அறிவித்தது. அதில் சில வரைவு (மசோதா) திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. 1. பொது மக்கள் புகார் மீது தன்னிச்சையாக லோக்பால் நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை. மக்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவை தலைவர் பரிந்துரை செய்யும் புகார் மீதுதான் விசாரணை நடத்த முடியும்.

*      புகாரை விசாரித்து அறிக்கை கொடுப்பதுடன் லோக்பால் பணி முடிந்தது.

*      போலீஸ் அதிகாரம், முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) அல்லது கிரிமினல் புலனாய்வுக்கு உத்தரவிடும் அதிகாரம் எதுவும் லோக்பாலுக்குக் கிடையாது.

*      சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட முடியாது.

*      ஊழல் நிரூபணம் ஆனால் குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

*      பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை லோக்பால் விசாரிக்க முடியாது.

*      லோக்பால் உறுப்பினர்களை அரசு நியமிக்கும்.

*      லோக்பால் கீழ்தான் சிபிஐயின் ஊழல் ஒழிப்பு பிரிவு செயல்படும்.

இதுதான் லோக்பால். 

அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா வேஸ்ட் என்கிறார் அன்னா ஹசாரே.

அன்னாவும், அவர் நண்பர்களும் ஒரு அறிக்கை எழுதியுள்ளார். அதற்கு ஜன லோக்பால் என்று பெயர். ஜன் என்றால் ஜனம் மக்கள்.

இந்த அறிக்கைத்தான் நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா அணி கூறுகிறது.

ஜன்லோக்பால் அறிக்கை 

*      மக்களிடம் புகார்களைப் பெறவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு.

*      குற்றம் சாட்டப்பட்டவர் மீது லோக்பால் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு.

*      எப்.ஐ.ஆர். பதிவு செய்வது உள்ளிட்ட போலீஸ் அதிகாரமும் இதற்கு உண்டு.

*      குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனைவ பத்தாண்டு சிறை. அதிகபட்சம் ஆயுள் சிறை.

*      பிரதமர், நீதிபதிகள் ஆகியோரையும் விசாரிக்க அதிகாரம் வேண்டும்.

*      லோக்பால் உறுப்பினர்களை அரசு நியமிக்கக் கூடாது என பல திட்டங்களை வைத்துள்ளனர் இக்குழுவினர்.

முன் கதையும் கேள்விகளும்:

லோக்பால் உண்மையில் பழைய ஐடியா, அதற்காக ஒரு மசோதாவை முதலில் 1968ல் சாந்தி பூஷன் தாக்கல் செய்தார். 1969ல் அது நிறைவேற் றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து 1971, 1977, 1985, 1989, 1995, 1998, 2001, 2005, 2008 ஆண்டுகளில் லோக்பால் மசோதா தாக்கல் ஆனது. ஆனால், நிறைவேறவில்லை.

லோக்பால் மசோதா தேவை என்று அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், அரசு மசோதாவை குப்பை என அன்னா அணி சொல்வது சரியா? நாங்கள் தருவதை நிறைவேற்று என நாடாளுமன்றத்தை மிரட்டுவது போல் பேசுவது முறையா? அன்னாதான் இந்தியா; இந்தியாதான் அன்னா என்ற கோஷம் சரியா? லஞ்சம் மட்டும்தான் ஊழலா? லோக்பால் மசோதா சட்டமானால் ஊழல் ஒழிந்து விடுமா? லோக்பால் பொறுப்புக்கு வருபவர்களுக்கு யாரும் தலையிட முடியாத சர்வ அதிகாரம் வழங்குவது முறையா?

பல்வேறு கேள்விகளை பல்வேறு அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். ஊழல் ஒழிந்தால் நமக்கும் நல்லதுதான். "முதலாளித்துவத்தின் இரு கண்கள் ஊழலும், லஞ்சமும்தான்' ஏன் பார்க்க மறுக்கிறார்கள். அதனால் அன்னா அசாரே யார்? அவர் பின்னால் நிற்பவர்கள் யார் என்பதையும் அவரின் கொள்கையையும் நாம் கொஞ்சம் விளங்கிக் கொள்ள முயல்வோம்.

அன்னா அசாரே நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் சக்திகள் யார்? அவர்கள் வகுப்பு (வர்க்கம்) பின்னணியை பார்த்தால் தெரியும்.

மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், நடுத்தர மக்கள் மற்றும் நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பவர்கள். இவர்கள்தான் இப்போது அன்னா அசாரே பின்னால் நிற்கிறார்கள்.

தமிழகத்தில் அன்னா அசாரேக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் பார்ப்பன மற்றும் நடுத்தர வகுப்பினர். அடுத்து, இவரின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள், கருப்புப் பணத்தில் மிதக்கும் நடிகர், நடிகைகள், அவருக்குப் பின்னால் இருப்பதில் இருந்து அவரின் கொள்கைகளை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

அமீர்கான், சல்மான்கான், ரசினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அன்னா அசாரேவின் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் இவர்கள் நோக்கம் என்ன என்பது விளங்கிக் கொள்ள முடியும்.

அதேபோல் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் முழக்கம் "வந்தே மாதரம்', "பாரத அன்னைக்கு ஜே', "அன்னா என்றால் இந்தியா" "இந்தியாவுக்கு ஜே!' என்ற முழக்கங்களை மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியானால் இதன் நோக்கம், இதன் பின்னணி அனைத்தும் இந்துத்துவாதான் என்பதையும், இவர்களை நேரடியாக "ராம்பரன் யாதவ், ரவிசங்கர் போன்ற சாமியார்கள் இவருக்கு ஆதரவு கை நீட்டுகிறார்கள். பா.ச.க. போன்ற கட்சிகள் நாடாளு மன்றத்தை முடக்கும் அளவிற்கு செல்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததிராய் சொல்வது போல் அவர் பின்னால் நிற்பவர்கள் யார் என்பதை வெளிப்படை யாக கூறியுள்ளார். அவரின் எழுத்தை அப்படியே...

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் இருந்தும் தாராளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்து பவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த் கெஜிர்வாலும், மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம் போர்ட் பௌண்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா'" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்களும், பௌண்டேசன்கள் பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்கள், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக் கணக்கில் நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர்ஊழலில் ஈடுபட்டதற்கான கண்காணிப்பில் இருப்பவர்களாகவும், மற்றும் பலவித கிரிமினல் செயல்களில் ஈடுபட்டவர் களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

என்ற கேள்வியை அருந்ததிராய் எழுப்புகிறார்.

இப்படிப்பட்டவர்கள்தான் அன்னா அசராவின் நண்பர்கள் மற்றும் கொள்கையாளர்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாந்திபூசன், அவரின் மகன் பிரசாந்த் பூசன் ஆகிய இருவரின் மேல் ஊழல் வழக்குகள் உள்ளன. ஆனால் இவர்கள் அன்னா அசரேவின் முக்கியமான தளபதிகள் போல் செயல்படுகிறார்கள்.

சாந்திபூசன் மற்றும் பிரசாந்த் பூசன் அவர்கள் உ.பி. முதல்வர் மாயாவதிக்கு வழக்கு நடத்தியதால் அவர்கள் இருவருக்கும் (ஊழல் வழக்கு) பண்ணை வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது குறித்து இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

அருந்ததிராய் மேலும் இந்த அன்னா அசாரே யார், இவரை மக்களின் குரலாக எப்படிப் பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்.

மக்களின் குரலாக ஒலிக்கும் இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட, உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து அவருக்கு எந்த அபிப்பிராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி'யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும் மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகை யாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள் ளார்கள். ஆர்.எஸ்.எஸ்.சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள் தற்போது அம்பலத்துக்கு இப்பத்திரிகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம்.

அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்துத் தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம். "இந்த மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு "சமார்', ஒரு "சுனார்' ஒரு "கும்ஹர்' இருக்க வேண்டும்.

அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.' இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள் "சமத்துவத்திற் கான இளைஞர்கள்' என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது? என தன் எதிர் கேள்விகளை முன் வைக்கிறார் அருந்ததிராய்.

அடுத்து, இந்தியாவில் உண்ணாவிரதப் போராட்டங்கள் வேறு எதுவும் நடக்கவில்லையா? இதில் என்ன உன்னதமான போராட்டம் அடங்கி யுள்ளது. தமிழீழ மக்களுக் ஆதரவாக செயல்படும் தமிழருவி மணியன் முதல் பார்ப்பன சோ போன்றவர்கள் வரை ஆதரிக்க என்ன காரணம் என்பதையும், அவர்களின் அரசியல் நிலைப்பாட் டையும் நாம் அய்யம் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்னா அசாரே மீது சொல்ல முடியும்.

10 ஆண்டுகள் தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்தி வரும் மணிப்பூர் இரும்பு மங்கை, ஜராம் சார்மிளாவின் போராட்டம் எத்தகையது. மணிப்பூர் மக்கள் மீது இந்தியா அரசு தொடுத்துள்ள இராணுவச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற அப்பெண்ணின் உறுதியான போராட்டத்தை மணிப்பூர் மக்கள் தொடர்ந்து ஆதரித்து வருவதையும் நாம் பார்க்க முடியும். அப்பெண்ணின் உண்மையான போராட்டத்தை ஆதரிப்பதற்கு எந்த அரசியல் கட்சிகளும் துணை நிற்பதில்லை. ஊடகங்களும் அதை பெரிய செய்தியாகப் பார்ப்பதில்லை.

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக போராடும் பழங்குடி மக்களின் போராட்டங்களையும் சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை பறித்துக் கொடுக்கும் அரசைக் கண்டித்து போராடும் பழங்குடி மக்களை "பச்சை வேட்டை' என்ற வேட்டையாடும் மன்மோகன் சிங், சிதம்பரம் போன்றவர் அடாவடித்தனத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களின் போராட்டத்திற்கு இதுவரை யாரும் ஆதரவு கொடுப்பதில்லை.

நடிகர், நடிகைகள் மற்றும் இந்தியாவைக் காப்போம் என்று வெறி கூச்சல் போடுபவர்கள் மணிப்பூர் சர்மிளாவிற்கும் ஒரிசா, ஜார்கண்ட், சத்திஸ்கர், பழங்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டியதுதானே? ஏன் நிற்கவில்லை?

ஆதரிக்க மாட்டார்கள். இந்த அன்ன அசரேவின் குருவாகச் சொல்லப்படுகிற காந்தி அவர்கள் தன் போராட்டங்கள் அனைத்தையும் திட்டமிடும் இடம் "பிர்லாவின் மாளிகை'. அந்த மகானின் சீடன் எப்படி இருப்பார் என்பதையும், அவரைப் பின்பற்றும் நபர்கள், இயக்கங்கள், அனைத்தும் இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் ஊழலில் தனக்கான பங்கு கிடைக்கவில்லை என்பது மட்டும் அல்லாமல், இன்று அரசியலில் எளிய சாதியில் பிறந்த ஆ.ராசா, மதுகோட, எடியூரப்பா போன்றவர் ஊழலில் திளைப்பதும் இவர்களுக்கு இன்னும் ஒரு காரணம்.

அரசியல் படித்தவர்கள், மேல் தட்டு சமூகம் சேர்ந்தவர்கள் விலகி நிற்பதும் இதற்கு காரணம் என்று சொல்லி தன் பார்ப்பன பனியா வெறித்தனத்தை நேரடியாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அன்னா அசரேவின் கொள்கைகள் யாவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பார்ப்பன பனியாவின் கும்பல்களுக்கு ஆதரவாகத் தான் செயல்படுகிறார்கள் என்பது திண்ணம். இதை மக்கள் முன் கொண்டு செல்வது அனைத்தும் சனநாயக ஆற்றல்களின் கடமையாகும்.

Pin It