விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் என்ற சண்முகநாதன் என்ற சிவசங்கரன் ஆகிய இருவரின் பெயர்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த இருவர் மீதான எல்லா வழக்குகளும் கைவிடப்படுகின்றன என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினரால் அமைக்கப் பட்ட MMDA (Multi-Disciplinary Monitioring Agency) அறிக்கையின் பெயரால் இன்று. இந்த சிறப்பு அமைப்பை 1988ல் அமைத்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. பின்பு 1991 அன்று ராஜீவ் படுகொலை நடந்தவுடன் இந்த சிறப்பு அமைப்பை அப்படியே புலிகள் குறித்த விசயங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சிறப்பு அமைப்பு கூறகிறது இந்திய இந்திய தண்டனை சட்டப்படி இறந்துபோனவர்கள் மீது எந்த வித வழக்குகளும் இருக்கக் கூடாது என்று இருப்பதால், இந்த இருவரின் பெயர்களும் நீக்கப்படு கினறன என்று தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு களை தற்பொழுது விசாரித்து வரும் நீதிபதி கே. தக்சிணாமூர்த்தி அவர்கள் அறிவித்துள்ளார் என்று உறுதியாக நம்மால் கூற முடியவில்லை. மேலும் இந்த MMDA வினால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இலங்கை காவல் துறையிடம் இருந்து இறப்பு சான்றிதழை அதாவது செய்தியை? பெற்று விட்டோம் என்று கூறு கிறார்கள். கடந்த வருடம் 2009 மே 11 அன்று திரு. பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை என்றும் பொட்டு அம்மன் அவர்களும் பிறகு கொல்லப்பட்டார் என்பதும் உண்மை என்று இலங்கை காவல் துறை உறுதி செய்துள்ளது என்று இந்த இருவரின் மீதான குற்றங்களில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது இந்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)

மேலும் இலங்கை அரசும், காவல் துறையும் சொல்வதை எந்த காலத்திலும் நம்ப முடியாதவை. அவர்கள் உலக நாடுகளுக்கு பொய்களை சொல்வதில் நம்பர் ஒன் என்று பெயர் எடுத்தவர்கள். எதற்கெடுத்தாலும் பொய் வாயைத் திறந்தால் பொய், எழுதினால் பொய் என்று இருப்பவர்கள் இலங்கை அரசும் இந்திய அரசும் பொய் சொல்வதில் யார் வல்லவர்கள் என்று போட்டி வைத்தால் இந்திய அரசுக்கு ஆறுதல் பரிசும், இலங்கை அரசுக்கு தங்க மெடலும் கிடைக்கும். போகட்டும் இவையெல்லாம் தேசியத் தலைவர் தலைமையின் கீழ் ஐந்தாம் கட்ட ஈழப் போர் துவங்கும். எல்லோரும் நினைப்பதைப் போல் பழைய வடிவங்களில் இல்லை. புதிய வடிவங்களில் பல புதிய பொட்டு அம்மன்கள் சூசை கள் என்று இருப்பார்கள் அந்த ஐந்தாம் ஈழப் போரில்.

இன்று காலையில் இருந்து எந்த தினசரிகளும், தொலைக்காட்சிகளும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை சொல்லவில்லை. விண் டி.வி.யில் செய்தி தொகுப்பாளர் திரு. மணி அரவ்கள் தவிர. ஆறு மாதங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார்கள் இந்த இருவரும் இறந்தது உண்மை என்று இறப்பு சான்றிதழ் பெற்று விட்டோம் என்று அவரின் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் சொன்னார்கள். அப்படியெல்லாம் கிடையாது என்று மிகவும் வெளிப்படையாக தற்பொழுது சிபிஐ அறிவிப்பு மட்டும் அல்ல, வழக்கில் இருந்து பெயரை நீக்கி விட்டார்கள். இந்த ஆறு மாதங்களில் என்ன பெரிய மாற்றம் நடந்துள்ளது!

இலங்கை போர்க் குற்ற விசாரணைகளில் முழுக்க அம்பலப்பட்டு போயிருக்கும் நிலையில், இந்திய அரசு தடை நீட்டிப்பு தீர்ப்பாயத்தில் முதன் முறையாக வைகோ மற்றும் நெடுமாறன் (தமிழக மக்கள் உரிமைக் கழகம்) அவர்களை சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை நீடிக்குமா? அல்லது பெயரளவிற்குத் தடை நீட்டிப்புக் கொடுத்துவிட்டு, அகதிகள் விசயத்தில் கண்டு கொள்ளாமை என்ற போக்கு தொடருமா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரிய வரும்.

மறுபுறம் இந்திய சீன அயலுறவுக் கொள்கைகள் பெரும் மாற்றம் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூட்டணி ஏற்பட்ட பிறகு ஒருவரையொருவர் உரசிக் கொள்வதும் அனுசரணையும் என்று மேற்குலக நாடுகள் கிழக்காசியப் பகுதியில் இந்த இருவரையும் ஒருபோதும் பின்னிப் பிணைய விட மாட்டார்கள். அதுபோல ஒருபோதும் இருக்க முடியாது என்பது வேறு செய்தி. உதாரணமாக இலங்கையில் நடந்து வரும் வேகமான சீனாவின் வளர்ச்சியும், அதிகாரமும் இந்திய அரசை குழப்ப நிலையிலேயே தொடர்ந்து வைத்துள்ளன. சிறு விஷயங்களுக்குக் கூட மற்றவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல்.

அதேசமயம் சீன அரசுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை. முன்பை விட தற்பொழுது நாலு கால் பாய்ச்சலில் மிக வேகமாக முன்னேறி சென்ற வண்ணம் உள்ளது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது புலிகள் விஷயத்தில் இந்தியா வெளியுறவுக் கொள்கையில் வேண்டிய அளவிற்கு சில பல மாற்றங் களை உருவாக்கும் என்றே கருதலாம். காலம்தான் பதில் சொல்லும். பல புதிய மாற்றங்களுக்கு என்று கூறுகின்றனர் அரசியல் வல்லுனர்கள்!

Pin It