தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்ச திசையில் இருந்தபோது நம் எதிரிகள் படையின் கொடுஞ் செயல்களைத் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலை கண்டு தமிழீழத் தமிழ் மக்களின் படுகொலையை தடுத்து நிறுத்த போராடியதற்காக தன் உயிரை ஆயுதமாக ஏந்தியவன் தோழன் முத்துக்குமார். இன்று நம்மிடையே தலைவனாக வாழ்ந்து கொண்டிருப்பவன்.

எந்த நோக்கத்திற்காக தோழன் முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினானோ அந்த காரணம் இன்னும் அப்படியே உள்ளது. தமிழர் தலைவர்களும் இந்தியத் தமிழர் களும் உலகத் தமிழினக் காவலர் களும் ஒரு துரும்பைக் கூட அசைக்காத சூழலில் இந்திய அரசை அதிர வைத்தவன் தமிழகத் தலைமகன் முத்துக்குமார்.

முத்துக்குமரனின் ஈகத்துக்குப் பின்னரும் தமிழகத் தமிழர்கள் படுகொலை செய்யப்படு வதையோ, அல்லது தமிழ்நாடு கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை செய்யும் சிங்களப் படையை தட்டிக் கேட்க முடியவில்லை. இந்திய சீன சிங்கள அரசுகள் தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மீனவர்களுக்கும் தமிழ்த் தேசத்திற்கும் எதிராக உள்ளனர். கூப்பிடும் தொலைவில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் நாதியற்ற இனமாக தமிழீழத் தமிழர் இனம் இருந்ததை தாய் தமிழகம் வேடிக்கை பார்க்க நயவஞ்சகர்கள் துணை போயினர். ஆனால், தமிழ் நாட்டில் நமது கடலில் மீன் பிடிக்க தடைசெய்யப் பட்டபோது சிங்களப் படை மீன்களை அள்ளிச் சென்றும் இந்திய கப்பல் படையை அடித்து துரத்திய போதும் வலைகளை அறுத்தும், தமிழர்களின் உதிரத்தைக் குடித்தபோதும் இருமாந்த இந்தியம் பேசியது. நீங்கள் ஏன் எல்லை தாண்டினீர்கள் என்று.. கேட்க தாய் தமிழகத்தின் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் சொந்தநாட்டில் அகதிகளாக தமிழக மீனவர் மக்கள்.

ஓட்டுப் பொறுக்க இலவசங்களை வாரி வழங்குவது... பசியால் துடிக்கும் ஏழை மக்களுக்கு எலும்புத்துண்டை வீசுவது. இவர்கள் தமிழக மக்களை மனிதர்களாக மதிப்பதோ மனிதாபிமானத்துடன் நடத்துவதோ கிடையாது. சொந்த நாட்டின் வளங்களை அன்னியர் கொள்ளை அடிப்பதோ சொந்த இன மக்களை கொன்றொழிக்க ஆயுதம் வழங்குவதற்கோ இவர்களை எவரும் மிஞ்சிடக் கூடாதுஎன்பதெல்õலம் இந்தியப் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி யாகும். 450க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றாலும், இவர் களுக்கு கவலை இல்லை. இராசீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்து அவமானப் படுத்தினாலும் கவலை இல்லை. தமிழன் தன்மானத்துடன் வாழக் கூடாது, தமிழ்ப் பெண் நளினி விடுதலை யாகக் கூடாது. காந்தியைக் கொன்ற கோட்சே விடுதலையாகலாம். பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களும் தோழர் பொழிலனும் சிறைக் கொட்டடியில்தான் இருக்க வேண்டும்.

இதுமட்டு மல்ல, தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, தனியார் மயம், தாராள மயம், பன்னாட்டுக் கொள்ளை சொந்தமக்களுக்கு கொலைக் களமாக கூடங்குளம், நச்சு ஆலை ஸ்டெர்லைடு எதைப் பற்றியும் கவலை இல்லை. ஏனென்றால இறையாண்மை மிக்க அரசு நமக்கு இல்லை. அதனால்தான் நாதியற்று நடுத் தெருவில் நிற்கிறோம். எத்தனை காலமாக இன்னும் அடிமைகளாக வாய் பேசா ஊமைகளாக இந்தியச் சிறைக்குள் அடைந்து கிடப்பது, இதற்காகத்தானே முத்துக்குமாரும் அவருடன் ஈகம் செய்த தமிழக மக்களும் போராடி னார்கள். அந்தபோராட்டத்தை ஈகங்களை நாம் மதிக்க வேண்டாமா? முத்துக்குமரன் இறக்கும் போது அவன் கண் முன் தோன்றிய விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் நாம் ஒன்று கூட வேண்டும். முத்துக்குமாரின் கனவுநனவாக குரல் கொடுக்க வேண்டும். அந்த மாவீரன் இம் மண்ணில் தன்உயிரை ஆயுதமாக்கி ஈகம் செய்த நாளில் தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிங்கள அரசையும் துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து குரல் கொடுப்பதே முத்துக்குமாருக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்.

Pin It