குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மோடி, “குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பீஹாரியைக் கூட நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என தனது பிரச்சாரத்தின் போது கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகாருக்குள் தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடியை அனுமதிக்க மாட்டேன் என்றும், பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக அறிவிக்கக் கூடாது; பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடியவர் மதச்சார்பற்றவ ராக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்றும் பீகார் முதல் வர் நிதிஷ் குமார் முன்னர் கூறியிருந்ததற்கு பதிலடியாக பழிவாங்கும் விதமாகவே பீஹா ரிகளுக்கு எதிராக பேசியிருக்கிறார் மோடி.

மோடியின் பேச்சுக்கு பீஹாரிகள் தரப்பி லிருந்தோ, பாஜக கட்சியிலுள்ள பீஹாரிகளி டமிருந்தோ எவ்வித எதிர்ப்பும் எழாமலிருப் பதை சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடு மையாக ஏளனம் செய்து தனது கட்சிப் பத்தி ரிகை சாம்னாவில் எழுதியிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி லும், மோடியின் தேர்தல் பிரச்சாரம் நிதிஷ் குமாரின் ஜனதா தள் கட்சியில் இருக்கும் முஸ்லிம் வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத் தும் என்று நிதிஷ் குமார் பயப்படுது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் மோடியை பீஹாரில் பிரச்சாரத்திற்கு நிதிஷ் குமார் அனு மதிக்கவில்லை என்று எழுதியிருக்கும் தாக்கரே,

"தற்போது நிதிஷ் குமாரை பழிவாங்கும் வகையில் திருப்பித் தாக்கியிருக்கிறார் நரேந் திர மோடி. அதே சமயம், இந்தப் போட்டி யில் மோடி தனது கட்சியிலிருக்கின்ற - அதாவது பாஜகவில் இருக்கின்ற பீஹாரைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களான குஜராத் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, ராஜீவ் பிரதாப் ரூடி, ரவி ஷங்கர் பிரசாத், ஷான வாஸ் ஹுûஸன் உள்ளிட்டோரை குஜராத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய விடாமல் தள்ளி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் நிதிஷ் குமார் மீது மட்டும் மோடி எரிச்சலடையவில்லை. ஒட்டுமொத்த பீஹாரிகள் மீதும் தனது வெறுப்பை வெளிப் படுத்தியுள்ளார்...” என எழுதி பாஜகவுக்குள் சிண்டு முடியும் வேலை செய்திருப்பதோடு தனது பீஹாரி எதிர்ப்பையும் வெளிப்படுத்தி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும் வம் புக்கு இழுத்திருக்கிறார் பால் தாக்கரே.

மேலும், மோடியின் கருத்துக்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் தொடர்ந்து மௌனமாக இருப்பது என்று இவர்கள் அனைவரும் தீர்மானித்துள்ளனர். அதனால் தான் இது சம்மந்தமாக மோடியிடம் எவ ருமே கேள்வியெழுப்பவில்லை.

இதற்கு காரணம், இது குஜராத் மாநிலத் தின் கண்ணியம் சம்மந்தப்பட்ட விஷயம் என் பதை மேற்கண்ட அனைவரும் (பீஹாரிக ளாக இருந்தும்) அமைதியாக ஒப்புக் கொண் டுள்ளனர்.

தனது கட்சியிலுள்ளவர்கள் உள்பட பீஹா ரிகள் (குஜராத்) தேர்தல் பிரச்சாரத்தை விட்டு வெளியே இருக்க வேண்டும் என மோடி சொன்னதற்கு எதிராக பாட்னாவிலோ, புது டெல்லியிலோ இதற்காக ஆர்ப்பாட்டங் கள் நடைபெறவில்லை. கறுப்புக் கொடி கண்டனங்கள் தெரிவிக்கவில்லை. மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப் பப்படவில்லை.

இதுபோன்று மஹாராஷ்டிராவில் நடந்திருக்குமேயானால் எல்லா பீஹாரி களும் வீதிக்கு வந்து பீஹாரிகளின் கண்ணியத்தை காக்க போராட்டங்களை நடத்தியிருப்பார்கள். மஹாராஷ்டிராவில் உள்ள சிறுபான்மைத் தலைவர்கள், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் இந்தப் பிரச்சி னையை தேசிய சர்ச்சையாக்கி இருப்பார்கள்.

இந்த முறை இந்தப் பிரச்சினை குஜராத் தில் எழுந்திருப்பதால் இவர்கள் அனைவரும் அடங்கிப் போய் தங்கள் வாலை இரு கால்க ளுக்கிடையில் சுருட்டிக் கொண்டிருக்கின்ற னர். இதன் மூலம் குஜராத் விஷயத்தில் மோடியைத் தவிர வேறு யாரையும் நினைத் துப் பார்க்க முடியாது என்பது தெரிகிறது.

அடுத்த மாதம் வருகிற சாத் பூஜையை நர் மதா ஆற்றங்கரையில் பீஹாரிகள் கொண்டா டத் தயாரா?' என்றெல்லாம் சகட்டு மேனிக்கு எழுதியிருக்கும் தாக்கரே.

உலகத்திற்கு முன்னால் தனது மாநிலத் தின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று வந்து விட்டால் எதற்காகவும் அதனை விட்டுத் தர முடியாது என்ற பாடத்தை மஹா ராஷ்டிரா தலைவர்களும், பீஹார் லாபி செய்யும் மீடியாக்களும் கற்றுக் கொள்ள வேண்டும்...” என்றும் சாம்னாவில் எழுதியுள்ளார் இந்த கிழ ரவுடி.

எப்படியிருக்கிறது? இந்த எழுத் துகளின் மூலம் மஹாராஷ்டிரா வில் பீஹாரிகளுக்கு எதிராக தாக் கரேக்கள் நடத்தி வரும் வன்முறைகள் மஹாராஷ்டிராவின் கண் ணியம் காக்க, மானம் காக்கவே தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அம்மாடியோவ், தனது இன வெறிக் கொள்கையை, வன்முறை களை நிலைநிறுத்தி நியாயம் கற் பிக்க எப்படி எல்லாம் கீழ்த்தர மான வாதங்களை வைக்கிறார் இந்த அரசியல் ரவுடி!

ஏற்கெனவே நவநிர்மான்சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பீஹாரிகளை குற்றவாளிகள் என் றும், மஹாராஷ்டிராவை விட்டு அவர்களை விரட்டியடிப்போம் என்றும் பேசியதற்கு - பிரிட்டனில் உள்ள பீஹாரி தொழிலதிபர் ஒருவர் ராஜ் தாக்கரேவை செருப் பால் அடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசும், லண்டன் அல்லது நியூ யார்க்கில் அவரது தகுதிக் கேற்ப வேலையும், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பும் செய்து தருவதாக கூறியிருந்தார்.

இந்த தகவலை தனது மாமா பால் தாக்கரேவிடம் சொல்லாமல் விட்டது மருமகன் ராஜ் தாக்கரே விஹன் தவறுதான்!

- ஃபைஸல்

Pin It