பரமக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு மற்றும் பிறந்த தினம் குரு பூஜையாக தேவர் சமூக மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 30ம் தேதி இந்த வருட குரு பூஜைக்காக அரசியல் கட்சித் தலைவர் கள் பாதுகாப்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்ற பின் னர், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குரு பூஜைக்காக பசும்பொன் செல்ல காவல்துறை வகுத்துக் கொடுத்த பாதை வழியாக செல்லாமல் தலித்து கள் வாழும் பாம்பு விழுந்தான் என்ற ஊர் வழியாகச் சென்றதில் ஏற்பட்ட கல வரத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் குரு பூஜைக்கு போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தேவர் சமுதாயத்தவரின் வாகனம் ஒன்றை மதுரை சிந்தாமணி அருகே வழி மறித்த கும்பல் அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இச்சம்பவங்களுக்கு பழிக்குப்பழி நடவடிக்கை யாக தலித்துகள் பகுதிக்குள் நுழைந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே பரமக்குடியில் இம்மானு வேல் சேகரனின் நினைவு நாளையொட்டி நடந்த சாதிக் கலவரத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி அமைதியாகவே நடந்து முடிந்தது. ஆனால் தேவர் குரு பூஜையில் சாதி மோதல் ஏற்பட்டு விலைமதிப்பில்லா மனித உயிர் கள் பலியாகியுள்ளன.

கடந்த முறை பரமக்குடி வன்முறையில் பலியா னவர்கள் தலித்துகள். இந்த முறை பலியாகியிருப்ப வர்கள் தேவர் சாதியினர் என்று அடையாளப்படுத் தப்பட்டாலும் அவை மனித உயிர்கள் என்பதில் சமமானவைதான்.

தேவர் குரு பூஜையை முன்னிட்டு வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்த்தே பசும்பொன் செல்லும் பாதையைத் தீர்மானித்திருந்த காவல் துறை அந்தப் பாதையில்தான் வாகனம் செல்ல, வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாற் றுப் பாதையில் செல்லும் வாகனங்களை தடுப்ப தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றுதான் குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது.

பாம்பு விழுந்தான் கிராமத்திற்குள் தேவர் சாதி யினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை அங்கிருந்த கிராம அலுவலர்தான் தடுத்து, இந்த வழியாகப் போக வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கி றார். ஆனால் அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றிருக்கின்றனர். அங்கே காவல்துறையினர் நிறுத்தப்படவில்லை.

இரண்டு தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி யென்பது இரு சமூகத்தவர்களின் வன்முறை தினங் களாகவே நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின் றன. தலைவர்களை நினைவு கூறுகிறோம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக் கொள்கின்றனர்.

தேவன் பெரியவனா? பள்ளன் பெரியவனா? என்கிற எண்ணம்தான் இரு தரப்பு இளைஞர்களின் உள்ளத்தில் விரவிக் கிடக்கிறது என்பதற்கு ஆதா ரங்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் இரு தலைவர்களின் நினைவேந்தல் தினங்களை பரமக்குடி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்க ளின் நிம் மதியைக் கெடுக்கும் தினங்களாக இரு தரப்பினரும் மாற்றி வைத்துள்ளனர்.

இரு தரப்பினருக்குமிடையேயான போட்டிகள் ப்ளக்ஸ் பேனரில் இருந்தே துவங்குகின்றன. தேவர் குரு பூஜைக்கு அந்த சமூக மக்கள் 300 ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்கு 305 பேனர்களாவது வைத்து முன்டா தட்டுகின்றனர் தலித் இளைஞர்கள்.

தலித்துகள் 300 பால் குடங்கள் எடுத்தால், தேவர்கள் 301 பால் குடங்கள் எடுத்து முஷ்டிûயை உயர்த்துகின்றனர். இப்படி துவங்கும் போட்டி மனப்பான்மை உயிர் பலியில் போய் முடிகிறது.

எத்தனை பாதுகாப்புகள் போட்டாலும், இரு தரப்பினரின் மனதிலுள்ள வெறுப்பும், கோபமும், பழி வாங்கும் எண்ணமும் மாறி - அவர்களுக்கி டையே சகோதரத்துவம் தழைக்காதவரை வன் முறை நெருப்பு பற்றிக் கொண்டுதான் இருக்கும். இந்த வன்முறைகளுக்கெல்லாம் திராவிட இயக்கங் கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசியல் ஆதாயங்களுக்காக சாதிய அடிப்ப டையில் ஓட்டுக்களை கவர மணி மண்டபங்களும், சிலைகளும் நிறுவிய பெருமை திராவிட கட்சிக ளுக்கே உண்டு. பறவைகள் எச்சங்கள் இடுவதற்கே பயன்படும் இந்தச் சிலைகளால் சம்மந்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடுவதில்லை.

அந்தத் தலைவர்களைப் புகழ வேண்டுமானால் அவர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள், நூலகங் கள், வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட் டால் - அந்த தலைவர்களின் நல்ல கருத்துகள் மக் களை சென்றடைய வழிவகை செய்தால் அது அந்த தலைவர்களையும், அவர் சார்ந்த சமூகத்தையும் போற்றுவதாக அமையும்.

திராவிடக் கட்சிகள் இதுபோன்று அறிவுப்பூர்வமாக செயல்பட்டிருந்தால் அப்பாவி மக்களின் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

யாரோ ஒரு சமூக விரோதி ஒரு தலைவரின் சிலையை அவமதித்து விட்டால் அதனால் ஏற்ப டும் வன்முறைகளும், சூறையாடல்களும், பலியா கும் மனித உயிர்களும் மக்களின் வாழ்வில் துயரத் தைத்தான் கொடுக்கின்றன.

சிலைகள் நிறுவுவதால் வரும் கேடுகளை நன்றாக அறிந்திருந்தும் சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, வேலு நாச்சியாருக்கு சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எங்கே போய் முட்டிக் கொள்வது?

உயிரற்ற சிலைகளுக்காக உயிருள்ள மனிதன் பலியாவதைப் பற்றி அரசுக்கு என்ன கவலை. மக்கள் நல ஆட்சியாக அவை இல்லையே!

Pin It