திருவாரூர் - முத்துப் பேட்டை - அதிராம்பட்டினம் குறுகிய ரயில் வழித்தடத்தை அகல பாதையாக மாற்ற கோரி அதி ரையின் தன்னார்வ அமைப் பான சென்னை வாழ் அதி ராம்பட்டிணம் நல்வாழ்வு பேரவை இந்த வழித்தட தேவையை தொடர்ந்து வலி யுறுத்தி வந்ததை கவனத்தில் கொண்டு "அகல ரயில் பாதைக்கு ஏங்கும் அதிரை மக்கள்'' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி யிட்ட மக்கள் ரிப்போர்டில் செய்தி வெளியானது.

இந்த கோரிக்கை அடங்கிய மக்கள் ரிப்போர்ட் பத்திரிகையை மேற்கண்ட அமைப்பி னர் பல்வேறு அரசியல் தலைவர்கள், ரயில்வே இலாகா அலுவலர்கள், மத்திய மாநில அமைச் சர்கள் ஆகியோருக்கு தூதஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர் .

இதனை பெற்றுக் கொண்ட அரசியல் தலை வர்கள் பலரும் உங்கள் கோரிக்கையைதான் எங் களிடம் சொல்லியிருக்கி றீர்களே... பிறகு ஏன் பத்தி ரிகைகளுக்கெல்லாம் செய்தி கொடுகிறீங்க என அவர்களிடம் கேட்டுள்ள னர். இதுபோல் மத்திய துணை நிதிய மைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக் கம் ஒருபடி மேல போய் நல் வாழ்வு பேரவையினரிடம் இதை ஏன் மக்கள் ரிப்போர்டுகெல்லாம் செய்தியா கொடுகிறீங்க? வர்ற பட் ஜெட்குள்ள உங்க பகுதி கோரி க்கை நிறைவேறும் அதுவரை அமைதியா இருங்க என்றாராம்.

இந்நிலையில் கடந்த 24.02.2012 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிறப்பு பரிந்துரையின் பேரில் திருவாரூர் - காரைக் குடி அகல ரயில் பாதை பணிக்கு முதற் கட்டமாக ரூ. 505 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப் பந்தப் புள்ளிகளும் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி அதிரை நல் வாழ்வு பேரவையின் தலை வர் கூறுகையில்...

"எங்களின் நியாயமான கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந் தோம் இதற்கு உள்ளூர் வலை தளமான அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் பிற வலை தளங்க ளும் எங்கள் நியாயக் குரலை வெளிப்படுத்தியதில் முக்கி யப் பங்கு வகித்தன அந்த வரிசையில் சமுதாய மக் கள் ரிப்போர்ட்டும் எங்கள் குரலை ஆட்சியாளர்கள் கேட்கும் வகையில் செய் துள்ளது .

எங்களின் கோரிக்கை நிறை வேற உதவிய அனைத்து ஊடக ளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம்...'' என்றார்.

Pin It