இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்ப தாக, ஆவணங்களில் குறிப் பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை. இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட் டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர் களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள் ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இது போன்ற இறக்குமதிகள் அவ்வப் போது நடைபெறுவதும், அவை பறிமுதல் செய்யப்படும்போது மட் டும் செய்தியாவதும் தொடர்கிறது. வெளிநாடுகளிலிருந்து இத்த கைய மோசமான கழிவுகள் தனி நபர்களால் இறக்குமதி செய்யப் பட்டு அவைகளை இயன்றவரை பணமாக்கி விட்டு மீதி குப்பை களை தமிழகத்தின் ஏதேனும் ஓரிடத்தில் கொட்டுகின்றனர். இப்படி வெளிநாட்டு குப்பை களை கொட்டுவதற்கு இடமுள்ள தமிழகத்தில், பழம் பெரும் ஊரான கீழக் கரை மக்களின் குப்பை களை கொட்ட மட்டும் அரசு நிர்வாகத்திற்கு இடமில்லை என்பது அதிசயமே. கீழக்கரை நகரசபை யில் சேரும் குப்பைகள் தில்லையேந்தல் பகுதி அருகே கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை உத்தரவு பெற் றுள்ளனர். இதன்காரணமாக கீழக்கரை தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக மாக குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு கும்பிடுமதுரை பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதைதொடர்ந்து கீழக்கரை நகரசபை தலைவர் பசீர் அகமது தலைமையில் அனைத்துகட்சி பிரமுகர்கள் கலெக்டர் அருண் ராயை சந்தித்து முறையிட்டதைய டுத்து, கும்பிடு மதுரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பை கள் கொட்டப்படுகிறது. எனினும் கும்பிடு மதுரை மக்களின் எதிர்ப் பும் தொடர்கிறது.

குடிமக்கள் மீதான ஒரு அரசின் தலையாய கடமை என்பது அம் மக்களின் சுகாதாரமான வாழ்க் கைக்கு உறுதியளிப்பதாகும். ஆனால் ஒரு பாராம்பரியமிக்க ஊரை குப்பை மேடாக காட்சிய ளிக்க செய்வதும், மக்கள் எதிர்ப்பு கிளம்பினால் தற்காலிகமாக தீர்வு காண்பதும் அரசுக்கு அழகல்ல. எனவே கீழக்கரையின் சுகாதா ரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் சுற்றுப்புறகிராம மக்களும் பாதிக்காத வகையில் சுற்றுப்புற கிராம மக்கள் உள்ள டக்கிய ஆய்வுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி அவைக ளுக்கு தீ வைப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துவதோடு, போக்குவரத்திற்கு இடையூறையும், மக்களுக்கு நோயையும் ஏற்படுத்து வதை தவிர்க்க, வெளிநாடுகள் போல், குடியிருப்புகளுக்கு வெகு தூரத்தில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி அதை மண்ணைப் போட்டு மூடுவதன் மூலம் சுகாதா ரத்தை பேணும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ளலாமே!

Pin It