இந்திய நாட்டின் தலைநகருக்கு, மகளான கனிமொழியையும் தமிழகத்தின் தலைநகருக்கு, மகனான ஸ்டாலினையும் தமிழகத்தின் மத்தியத் தலைநகராம் மல்லிகை மணக்கும் நகருக்கு, மற்றொரு மகனான அழகிரியையும் அதிகார பீடத்தில் வைத்து அழகு பார்த்தார் திமுக தலைவர் கருணாநிதி.

இவர்களில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் எக்கசக்க பிரியம் இருப்பதாக காட்டிக் கொண்டா லும், கருவாட்டு நாற்றத்தை போர்வை போட்டு மூடி மறைத்து விடமுடியாது என்பதைப் போல், இவ்விருவரின் பனிப்போரும் பட் டவர்த்தனமாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் பதிவாகிவிடு கின்றது.

மதுரைக்கு திமுக தலைவரே செல்லவேண்டும் என்றாலும் அழகிரியின் கண்னசைவின்றி மதுரை எல்லைக்குள் நுழைய முடியாது என்று கூறப்படும் அள வுக்கு தென்மாவட்டத்தின் ஏக போக அதிகார மையமாக திகழ்ந் தார் அழகிரி.

தென் மண்டல அமைப்புச் செயலாளராக கட்சியில் முடி சூடிய அழகிரி, தென் மாவட்ட முக் கிய கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி, முன்னால் அமைச்சர்கள்வரை அத்தனை பேரும் தனது கட்ட ளைக்கு கீழ் செயல்படும் வகை யில் பார்த்துக் கொண்டார்.

இந்நிலையில் கட்சித் தலைவர் பதவி தந்தால் ஏற்றுக் கொள் வேன் என்று அழகிரி வெளிப்ப டையாக சொல்லியும் கூட, கட்சி அவருக்கு மாநில அரசியலில் முக் கிய பதவியை வழங்காமல், மத் திய அமைச்சராக்கி டெல்லிக்கு விரட்டியது திமுக தலைமை.

இதில் கருணாநிதியின் வாரிசு களில் முதல் மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அதிகாரத்தில் ஸ்டாலி னுக்கு போட்டியாக அழகிரி உரு வாகி விடக் கூடாது என்பதற்கா கவே அவரை டெல்லிக்கு தள்ளி விட்டதாக அரசி யல் அரங்கில் பேசப்பட் டது.

இதை உண்மைப்ப டுத்தும் வகையில் அழகிரியும் தான் ஏற் றுக் கொண்ட மத்திய அமைச்சர் பதவி யில் ஈடுபாடு காட் டாமலும், நாடாளு மன்ற கூட்டத் தொட ரில் பெரும்பாலும் பங் கேற்காமலும் காலம் கடத்தி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, திமுக பொருளாளரும், இளைஞரணிச் செயல ருமான ஸ்டாலின், மதுரை மாநகர் மாவ ட்ட மற்றும் புறநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற் கான நேர்காணலை ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடத்தினார்.

ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அர சைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்திலும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்து விட்டனர்.

இளைஞரணி நேர்காணலுக் கான அழைப்பிதழில் அழகிரியின் பெயர் இடம் பெறவில்லை, பொதுக்கூட்டம் குறித்து அவரி டம் ஆலோசனை நடத்தவில்லை எனக் கூறி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதர வாளர்கள் புறக்க ணித்தனர்.

அழகிரி கூறிய தால்தான் அவ ரது ஆதரவாளர் கள் நிகழ்ச்சிக ளைப் புறக்க ணித்ததாக

வும் கூறப் பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகி கள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சி நிர்வாகிகள் யாராவது வந்தால் அவரைச் சென்று வரவேற்க வேண்டும் என்று திமுகவில் எந்த விதிமு றையும் இல்லை. நான் கூறியதால் தான் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச் சிகளை எனது ஆதரவாளர்கள் புறக்கணித்தார்களா எனக் கேட்கி றீர்கள். அந்த நிகழ்ச்சிகள் நடை பெறும்போது நான் சீனாவில் இருந்தேன். மதுரைக்கு ஸ்டாலின் வருவது பற்றி எனக்கு முன்கூட் டியே தகவல் இல்லை. அவர் வந்ததும் தெரியாது; சென்றதும் தெரியாது'' என்று கூறியுள்ளார்.

கட்சியின் மாநிலப் பொருளாள ரும் இளைஞர் அணிச் செயலா ளருமான ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது தவறுதான் என்றா லும், எங்கள் அண்ணன் அழகி ரியை அவர்கள் அவமதித்தது தான் எங்கள் புறக்கணிப்புக் கார ணம் என்று நோட்டீஸ் அனுப் பப்படுள்ள சிலரே ஒப்புக் கொண்ட நிலையில், ஒரு முக்கிய நிர்வாகி வந்தால் கூட அவரை வரவேற்க வேண்டும் என்று அவசியமில்லை என்று அழகிரி சொல்லியுள்ளது ஸ்டாலினுக்கு நெத்தியடிதான்.

இப்படி மல்லிகை நகராம் மதுரையில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு புயல் வீசி வரும் நிலையில், மாங்கனி நகராம் சேலத்தில் வீரபாண்டியார் ஒருபக்கம் ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடிக்கிறார். ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்த இளைஞர் அணி நிர்வாகிகளில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகிப்பதாக அசகாய குண்டை வீசியுள்ளார்.

 ஏற்கனவே கட்சியின் மாநிலப் பொதுக்குழுவில் வீரபாண்டியாருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து கூச்சல் போட்டனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என் பது வாசகர்களுக்கு நினைவிருக்க லாம். அதற்கு முன்பு ஸ்டாலி னுக்கு எதிராக பாய்ச்சல் காட்டிய பரிதி இளம்வழுதி பம்மியிருக்கி றார்.

ஆக திமுகவின் வாரிசுரிமைப் போர் தொடங்கிவிட்டது. இதில் ஜெயிக்கப்போவது யார்? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி யாக உள்ளது.

- முகவை அப்பாஸ்

Pin It