குஜராத் மாநிலம் குல்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைச் சம்பவத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட 62 பேர் இக்கலவரத்தை தூண்டி விட்டதாகவும், அவர்களை விசாரிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியான சகியா ஜாஃப்ரி.

இம்மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சிறப் புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணையை மேற் கொள்ளச் சொன்னது. இதன்படி விசாரணை மேற்கொண்ட புல னாய்வுக் குழு அதன் இறுதிக் கட்ட அறிக்கையை கடந்த 8ம் தேதி சமர்ப்பித்தது.

புலனாய்வுக்குழு தனது அறிக் கையை சமர்ப்பித்த மறுநாள் 9ம் தேதி புலனாய்வுக்குழுவின் முழு அறிக்கையின் ஒரு நகலை தங்க ளுக்குத் தர வேண்டும் என கேட் டிருக்கிறார்கள் சகியா ஜாஃப்ரி யும், மனித உரிமை போராளியு மான தீஸ்தா செட்டில்வாட்டும்.

குஜராத் கலவரத்தில் சகியா விற்கு ஆதரவாக போராடி வரும் இன்னொரு மனித உரிமை போராளியான முகுல் சின்ஹா வும் புலனாய்வுக் குழுவின் அறிக் கையின் நகலைக் கேட்டிருக்கி றார். தீஸ்தா செட்டில் வாட்டும், முகுல் சின்ஹாவும் அறிக்கையின் நகல் கேட்டு மனு செய்ததை அடுத்து, புலனாய்வுக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்.

இதற்கிடையில் மீடியாக்களி டம் பேசிய தீஸ்தா செட்டில் வாட், புலனாய்வுக் குழுவின் அறிக்கையின் நகலை எங்களுக்கு தரவில்லையென்றால் அல்லது அந்த அறிக்கை ரகசிய அறிக்கை என்று சொல்லி கொடுக்க மறுத் தால் அதை எதிர்த்து புகார் மனு தாக்கல் செய்வோம் என தெரி வித்திருக்கிறார்.

புலனாய்வுக் குழுவின் அறிக் கையில், மோடி குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரி வித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, “இந்த அறிக்கையில் மோடி குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மையானால் இந்தப் பிரச் சினை குறித்து மூன்றாவது முறை யாக விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை இனி கைவிட வேண் டும்...'' எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கை முதலில் குஜராத் போலீஸ் விசாரித்தது. அது மோடியை குற்றமற்றவர் எனத் தெரிவித்தது. அதன் பின்னர் காவல்துறை அதிகாரியான கீதா ஜோஹரி தலைமையிலான டீம் விசாரித்தது. அதுவும் மோடி யைத் தப்ப விட்டது. இப்போது மூன்றாவது முறையாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையும் குல்பர்க் சொஸை ட்டி படுகொலை சம்பவத்தில் மோடி நிரபராதி என்று குறிப் பிட்டிருப்பதாக சொல்லப்படுகி றது. இந்த மூன்று விசாரணைக ளில், கீதா ஜோஹாரி விசாரணை குழுவும், புலனாய்வுக் குழுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டு தல்படி அமைக்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புலனாய்வுக் குழுவின் ஒட்டுமொத்த அறிக்கை யின் நகலும் தமக்கு வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன் புலனாய்வுக் குழுவின் அறிக் கையின் நகல் வழங்கப்பட்டால் புலனாய்வுக் குழுவிடம் தாங்கள் சமர்பித்த ஆதாரங்கள் விசார ணையில் எடுத்துக் கொள்ளப்பட் டிருக்கிறதா? அல்லது நானாவதி கமிஷன் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தங்களின் ஆதாரங் களை நிராகரித்ததைப் போன்றே சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நிராகரித்திருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை முன் கூட்டியே அறிந்து கொண்டு இந்த வழக்கில் அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்ளலாம் என நினைக்கிறார்கள் தீஸ்தா செட்டில் வாட்டும், முகுல் சின் ஹாவும்.

இதற்காகத்தான் புலனாய்வுக் குழு தனது இறுதிகட்ட அறிக் கையை சமர்ப்பித்த உடனே அதன் நகல் தங்களுக்கு தரப்பட வேண்டும் என அவர்கள் போராடுகிறார்கள்.

Pin It