school children 600

கதை கூறி குழந்தைகளை மகிழ்விப்பது என்பது சங்ககாலங்களிலிருந்தே இருந்து வரும் பழக்கம். கதை கூறல் எனும் சக்தி மிக்க உத்தி குழந்தைகளை நல்வழிப்படுத்த உதவும் ஒரு கருவி. இந்த சக்திமிக்க உத்தி பெரியவர்களையும் நல்வழிப்படுத்தியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக உலகப் புகழ்பெற்ற அரபுக் கதைகள் என்னும் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட கதைகள், சாமர்கண்ட பேரரசர் ஷாரியரின் ஆர்வத்தை தூண்டவென்றே கூறப்பட்டவை. பெண்ணினத்தின் மேல் அவநம்பிக்கை கொண்ட மன்னர் நாள்தோறும் ஒரு பெண்ணை மணந்து, அடுத்த நாள் அதிகாலையில் அவளுக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றுவிடும் கொடிய வழக்கத்தைக் கொண்டிருந்தார். யாராலும் அவரை மாற்ற முடியவில்லை.

நாட்டில் கன்னிப்பெண்களே கிடைக்காத நிலை உருவாக, அமைச்சர் கவலை கொள்ள, அமைச்சரின் புத்திசாலியான மூத்த மகள் ஷகர்ஜத் தந்தைக்கு உதவ முன் வருகிறாள். மன்னனை மணக்கிறாள். கொலை தண்டனையை ஒத்திப் போட வைக்கத் திட்டமிடுகிறாள். கதை கூறும்படி தன்னிடம் கேட்குமாறு தன் தங்கை துணியாஜத்தை வரவழைக்கிறாள். கதை கூறும்படி தன்னிடம் கேட்குமாறு தன் தங்கையிடம் சொல்கிறாள். கதை கேட்பதில் ஆர்வம் கொண்ட மன்னர், மைத்துனி யோடு தாமும் கதை கேட்கிறார். திட்டமிட்டபடி விடியும்போது கதையை முடிக்காமல் இருக்கிறாள் புத்திசாலி ஷகர்ஜத். மீதிக் கதையை கேட்கும் ஆர்வத்தில் மன்னர் கொலைத் தண்டனையை மறுநாளுக்கு ஒத்திப்போட, அதே நிலை தினமும் தொடர்ந்து, ஆயிரத்து ஓர் இரவு வரை நீள்கிறது. இறுதியில் மன்னரைத் தம் கொலைத் தண்டனை உத்தரவை நீக்கும்படி செய்து, மன்னரின் அசுர குணத்தையே மாற்றி நல்வழிப்படுத்தி பெண் குலத்திற்கே பெருமை சேர்க்கிறாள் ஷகர்ஜத்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் நம் நாட்டுக் குழந்தைகளை மட்டு மல்லாமல் உலக நாட்டில் உள்ள எல்லா குழந்தை களையும் மகிழ்வித்து வருகின்றன. இவை குழந்தை களை மட்டும் மனதில் கொண்டு எழுதப்பட வில்லை. ஆளுமையற்ற இளவரசர்களுக்கு உலக அறிவும், அரசாளும் திறமையும், ராஜதந்திரமும் வாய்ப்பதற்காக குருகுலவாசத்தின் போது கூறப் பட்டவை. இப்படிப் பெரிவர்களையே கதைகள் மூலம் நல்வழிப்படுத்தி சிறந்த குடிமக்களாக மாற்றி யதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இப்படிப் பட்ட கதை கூறல் எனும் சக்திமிக்க உத்தி தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையையும், மண்ணில் பிறந்து தவழும் குழந்தைகளையும் அறிஞனாகவும், வீரனாகவும், சுதந்திரப் போராட்ட வீரனாகவும் மாற்றியதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

இந்திய நூலகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் திரு.டாக்டர்.எஸ்.ஆர்.ரங்கநாதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தை திரு.ராமாமிர்தம் சொன்ன இராமாயணக் கதையை தன் தாயின் கருவறையில் இருந்தபோதே கேட்டதால், அவர் ஒரு ராமபக்தராகவும், உலகமே போற்றும் நூலக அறிஞராகவும், நல்ல பண்பாடு உள்ளவராகவும் வாழ்ந்தார் என வரலாறு கூறுகிறது.

சாதாரண விளையாட்டுச் சிறுவன் மோகன் தாஸ் காந்தி “வாய்மையே வெல்லும்” என்று உறுதியான கொள்கையை கொண்டிருந்தார். ஏன் என்றால் அவர் தம் இளம் வயதில் ‘அரிச்சந்திரன்’ புராண நாடகத்தை பார்த்ததால்தான், கதையை கேட்டதால்தான். அவர்தம் இளம் வயதில் ‘அரிச் சந்திரன்’ புராணத்தைக் கேட்காமல் இருந்திருந் தால், அவர் ஒரு சத்தியச் சுடராக மாறியிருப்பரா என்பது சந்தேகமே? அவர் சிறுவயதில் அந்த கதையைக் கேட்டதால் இன்று நமக்கு ஒரு மகாத்மாவாக என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை அன்பை அறியாத வெறும் சிவாஜியாக இருந்த சிறுவன் வீரசிவாஜியாக மாற அவன் தாய் ஜீஜீபாயும், குருநாதர் தாதாஜிகண்டதேவும் அவனுக்கு இராமாயணக் கதையை கூறி, அவன் மனதை பக்குவப்படுத்தி விடுதலை எழுச்சியையும், வீர உணர்வையும் மனதில் அனலாகக் கனிய வைத்து, சாதாரண சிவாஜியை வரலாற்றுப் புகழ்மிக்க சத்ரபதி சிவாஜியாக மாற்றியது என்பதே வரலாறு.

கதை கூறியே அறநெறிகளையும், தாய்நாட்டுப் பற்றையும், தியாகம் செய்யத் தயாராகும் பக்குவ உணர்வையும், தெய்வ நம்பிக்கையையும், விட்டுக் கொடுத்து வாழ்வதன் அவசியத்தையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கலாம் என்பதை இந்த வரலாற்று உண்மைகள் மூலம் அறியலாம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமை அல்லவா!

குழந்தைகள் கதை கேட்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவர்கள். அவர்கள் தாயின் கருவில் இருக்கும் போதே கதைகளை விரும்பி கேட்பர் என்பதை ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி அவர்களை இலட்சியக் குடி மக்களாக மாற்ற முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய பெருமைக்குரியவர்கள் நம் தாய்க் குலத்தோரே, குறிப்பாக பாட்டியரே. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த காலங்களில் குடும் பத்தில் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பை பெரும்பாலும் தாத்தா - பாட்டியர் ஏற்றிருந்தனர். மின்விளக்கு கண்டுபிடிக்காத காலத்தில் நிலா முற்றத்தில் குழந்தைகள் அவனைவரையும் அரை வட்ட வடிவில் உட்கார வைத்து அவர்கள் கையில் பிசைந்த சோறு போட்டு ஊட்டாமல் உண்ண வைப்பர் பாட்டியர். கையில் சோறு போடுவதோடு உயர்குணங்களின் அருமையும், உண்மையின் உயர் வையும், நேர்மையின் பெருமையையும், தருமமே இறுதியில் வென்றது, தவறு செய்பவர்களுக்கு தண்டனை என்பதையும் வலியுறுத்தும் சுவையான கதைகளைப் பாட்டியர் குழந்தைகளுக்குப் புரியும் பேச்சு நடையில் கூறி, அவர்களது மனத்தைப் பக்குவப்படுத்துவார்கள். அதனால் அவர்கள் குழந்தைகளை தங்கள் வழிக்குக் கொண்டுவந்து சிறந்த குடிமக்களாக்கினர். நம் நாட்டு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதையும் வரையில் பாட்டியரின் ஆதிக்கம் குழந்தைகளையும் பாது காத்து வந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

கூட்டுக் குடும்பச் சிதைவும், அறிவியல் வளர்ச்சியும், பாட்டியர் கதை சொல்லும் பாணியை பறித்துக் கொண்டு விட்டன. மாறி வரும் சமுதாய முறைகளோடு அறிவியல் முன்னேற்றமும் போட்டி போட்டு வளர்ந்துவரும் இன்றைய சூழ்நிலையில் இது தவிர்க்க இயலாததுதான் எனினும், குழந்தை களின் மனத்தைப் பயன்படுத்தி உயர்ந்த நெறிமுறை களை விதைகளாக விதைத்து, உரமிட்டு, வளர்த்து, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்ல முறையில் பயன்படக்கூடிய சிறந்த குடிமக்களாகக் குழந்தை களை உயர்த்தும் ஒப்பற்ற அரிய பொறுப்பை அறிவியல் வளர்ச்சியும் சமுதாய மாற்றமும், பாட்டியரின் கரங்களிலிருந்து பறித்துக் கொண்டு உள்ளது ஈடுசெய்ய இயலாதப் பேரிழப்பே.

குழந்தைகள் மனிதகுலத்தைப் போற்றும் மாபெரும் செல்வங்கள். பெண் கல்வி வளர்ச்சி யால் பாட்டியரும் பணியாற்றி முடிந்து ஓய்வூதியம் பெற்றுவரும் காலம் இது. “இத்தனை நாள்தான் வேலை வேலை என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு ஓட்டியாயிற்று. இனிமேலாவது ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு மீதிக் காலத்தை நிம்மதியாக ஓட்டலாம்” என்று ஓய்வூதியப் பாட்டிகள் பெயரன் பெயர்த்திகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கத் தட்டிக் கழிக்கின்றனர். சில தம்பதிகள் தாய், தந்தையை தனியாகத் தவிக்க விட்டுவிட்டு தனிக் குடித்தனம் நடத்துவதை நாம் இன்றைய உலகில் பார்க்கின்றோம். அதனால் குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே,

அவன் நல்லவனாவதும்

தீயவனாவதும், அன்னை வளர்ப்பினிலே”

-என கவிஞர் புலமைப்பித்தன் தன் பாடல் வரி களில் பெற்றோரின் கடமையை அழகாக வலி யுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தால், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு கதை சொல்லல் என்பது அரிதாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் குழந்தைகளைப் பாதுகாக்க இன்று குழந்தைக் காப்பகங்கள் ஊருக்கு ஒன்று என்று இருந்த நிலை மாறி, தெருவுக்கு ஒன்று என்ற நிலை வந்துவிட்டது. அப்படி காப்பகங்களில் விடப்படும் குழந்தைகள் சண்டை குணம், பகிர்ந்து மகிழ மறுக்கும் அரக்க குணம் கொண்டவராகவும், தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவராகவும், மனிதநேயம், எளிமை போன்ற அடிப்படைப் பண்புகளையெல்லாம் என்னவென்று அறியாத நிலையினராகப் பெரும்பாலான இந்தத் தலை முறைக் குழந்தைகள் வளருகின்ற நிலை உள்ளது என்பதை யாருமே மறுக்க முடியாது. இந்த நிலை நீடித்து வளர்ந்தால் குழந்தைகள் மனநோயாளி களாக மாறும் கொடுமையை வெகு விரைவில் சந்திக்க நேரலாம்!

குழந்தைகள் அதிகம் கேட்க, பேச விரும்பு வார்கள். அவர்களின் இந்த ஆர்வத்தை கதைகூறல் என்ற இந்த கலையால் மட்டுமே நிறைவு செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில், இந்த பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி நம்முள் எழுகிறது! தமிழகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பொறுப்பு இன்று பொது நூலக ஆசிரியர்களிடம் வந்துவிட்டதாக நான் கருது கிறேன். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பொது நூலகங்களில் கதை சொல்லும் நேரம் ஒதுக்கப் பட்டு, குழந்தைகளுக்கு பொது நூலக ஆசிரியர் களால் கதை சொல்லல் நடைபெற்று வருகிறது. நாமும் நம் நாட்டில் பொது நூலகங்களில் கதை சொல்லும் நேரம் ஒதுக்கி, வளரும் குழந்தைகளை பக்குவப்படுத்தி நாட்டிற்குத் தேவையான நல்ல தலைவர்களாகவும், அறிஞர்களாகவும் உருவாக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொது நூலகங்கள்தான் சமுதாய மாற்றத்தினை பிரதிபலிக்கும் கண்ணாடி. பொது நூலகம் மக்கள் பல்கலைக்கழகம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த ஒரு மனிதனையும் நல்வழிப்படுத்தி நாட்டிற்கு கொடுக்கும் கலியுகக் கலைக்கோயில் ஆகும்.

Pin It