தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) பாவை பப்ளிகேஷன்ஸ், நெல்லை ஆய்வுக்குழு இணைந்து நடத்திய நூல் வெளி யீட்டு விழா, 17-9-2011 அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. வரலாற்றுத் துறைத் தலை வர் டோர்காஸ் சாந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

திரு.எஸ்.அருணாச்சலம் அவர்கள் எழுதிய “The History of Pearl Fishery Coast of the Tamil Coast” என்ற நூலை கோரமண்டல் இயக்குநர் திரு.நெவில் கற்றார் அவர்கள் வெளியிட திரு.பிரான்சிஸ் அமல் ஜார்ஜ் (தணிக்கையாளர், தூய மரியன்னை கல்லூரி) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

திரு.அருணாச்சலம் எழுதிய நூலைத் ‘தமிழகக் கடலோரத்தில் முத்துக்குளித்தல் வரலாறு’ என திரு.சா.ஜெயராஜ் அவர்கள் தமிழாக்கம் செய் துள்ளார்கள். அந்நூலைத் தொழிலதிபர் P.S.S. கணேசன் சோமசங்கர் அவர்கள் வெளியிட, எழுத் தாளர் திரு.நேவிஸ் விக்டோரியா அவர்கள் பெற் றுக் கொண்டார்கள். இந்நூலைப் பற்றி, தஞ்சா வூர் தமிழ்ப் பல்கலைக் கழக முனைவர் இரா. காம ராசு அவர்கள் அறிமுகம் செய்ய, திரு.சா.ஜெய ராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.

மரியன்னை கல்லூரி முதல்வர், முனைவர் அருட் சகோதரி டெக்லாவும், வ.உ.சி கல்லூரி, ஆங்கிலப் பேராசிரியர் ரகு அந்தோணியும் தொகுத்தளித்த, “History of Thoothukudi” என்ற நூலை, புனித தோமையார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருள் திரு. குமார்ராஜா அவர்கள் வெளியிட, தூய மரி யன்னை கல்லூரி துணை முதல்வர் அருட் சகோ தரி முனைவர் மரிய எலிசபெத் விஜிலி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் முதன் மைச் செயன்மையர் சண்முகம் சரவணன், முது நிலை மேலாளர் அ.கந்தசாமி, மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, சேலம் மண்டல மேலாளர் அ.கணேசன், திண்டுக்கல் கிளை மேலா ளர் எத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நூலைப் பற்றி அருட்சகோதரி டெக்லா அறிமுகம் செய்ய, பேரா.ரகு அந்தோணி ஏற்புரை வழங்கினார்கள். முனைவர் நா.இராமச்சந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

Pin It