இந்திய கிரிக்கெட் பார்வையாளர்கள் இந்தியப் பெரு முதலாளி களின் கொள்ளைகள், சமூக அநீதிகள் எதுவுமே கண்ணில் படுவதில்லை.  இதையெல்லாம் விடுங்கள்.  கிரிக்கெட்டில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்களும் சூதாட்டங்களும்கூட கிரிக்கெட் பார்வையாளர்களின் கண்ணில் படுவதில்லை.

கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியின் மதமதப்பு சற்றும் குறையாதிருக்கும் போதே ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் இந்த ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப் பையைத் தட்டிக் கொண்டுவந்துவிட்டது. இதனால் கிரிக்கெட் பார்வையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது நாட்டில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.  அவை எவையும் இந்திய கிரிக்கெட் பார்வையாளர்களின் கவனத்தில் படவே இல்லை. இந்த இடத்தில் ஒரு விளக்கம்.  மிகப் பெரும்பான்மையான கிரிக்கெட் போதைக்குஅடிமையாகியுள்ள மக்களை - சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நகரம் முதல் கிராமம் வரை உள்ள ஊடகத்தின் கரங்களில் அகப்பட்டுள்ள மக்களை கிரிக்கெட் பார்வையாளர்கள் என்று குறிப்பிடுகிறேன்.  உலகில் 100 கோடி மக்கள் கிரிக்கெட் பார்வையாளர்கள்.  அவர்களில் எழுபது சதம் பேர் இந்தியர்கள். 

கிரிக்கெட்டைப் பார்ப்பது, இரசிப்பது எல்லாம் தேசப் பற்றின் வெளிப்பாடு என்று கருதுகின்றார்கள்.  இவர்கள் இப்படிக் கருதுவதை இலாபவெறி கொண்ட ஊடகங்கள் முதல் இந்தியாவின் பிரதமர் வரை ஊக்கப்படுத்துகிறார்கள்.  இதனால் உண்மையாக நாட்டில் நடப்பவை எல்லாம் கிரிக்கெட் பார்வை யாளர்களின் கண்ணில் படுவதில்லை.  அரசியல் வாதிகளின் மெகா ஊழல்கள், நாட்டின் சொத்துக்களை அந்நியர்கள் திருடிச் செல்லல், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகள், பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்கிவிட்டன. கிரிக்கெட் பார்வையாளர்களின் ஒவ்வொரு மாலைப் பொழுதையும் இந்திய கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கடிக்க முடிவெடுத்ததன் பின்னரே இந்த ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப் பட்டன சொல்கின்றனர்.  இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கும் அணிகள் ஏலம் போட்டு வாங்கப்பட்டவை.  அணிகளில் பங்கேற்கும் வீரர்களும் ஏலம் எடுக்கப்பட்டவர்கள்.  இந்த ஏலப் பேரத்தில் புழங்கிய தொகை ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.  முன்பு சட்டவிரோதமாக இருந்த கிரிக்கெட் பெட்டிங்ஸ்என்னும் சூதாட்டம் இப்போது சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டது.  அத்துடன் பண்டைய அடிமைக் காலத்தைப் போன்று மனிதர்கள் (கிரிக்கெட் வீரர்கள்) ஏலம் விடப்படுகின்றனர்.  இதைவிட கிரிக்கெட் விளையாட்டில் புழங்கும் ஒட்டுமொத்த தொகை பன்மடங்கானவை. 

ஒரு போட்டியில் ஒரு வீரரின் ஒரு நாள் ஊதியம் நாற்பத்தெட்டு இலட்சம்.  ஒரு பெப்சி விளம்பரத்திற்கு ஒரு வீரர் பெறும் ஊதியம் ஒரு கோடி. ஒரு போட்டியின் ஒரு நாள் விளம்பர வருவாய் நானூற்று எழுபது கோடி ரூபாய்க்கு மேல். இப்படிப் பார்த்துக் கொண்டே போனால் எண்ண முடியாத அளவுக்குப் பணம் கிரிக்கெட் விளையாட்டில் புழங்குகின்றது. இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வந்தவை. கிரிக்கெட் பார்வையாளர்களின் பணம்.  அவர்களின் தேசப்பற்றுப் போதையை முதலாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியக் கொள்ளைக்காரர்களும், ஊடகக் கொள்ளைக்காரர்களும் சூறையாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தத் தகவல்களைப் படிக்கும் வாசகர்கள் கிரிக்கெட் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டதே என்று வருத்தப்படலாம். கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி விக்கிப்பிடியாவில் இருக்கும் இரண்டு கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு கிரிக்கெட் எப்போதுமே ஒரு சூதாட்டம்தான் என்று தெரிய வரும். கிரிக்கெட் இடைக்காலத்தில் இங்கிலாந்தின் வேல்ட் சமவெளிப் பகுதிகளில் சிறுவர்கள் விளையாடிய ஒரு விளையாட்டு. 

இவ்விளையாட்டை அங்கு எப்போது பெரியவர்கள் விளையாடத் தொடங்கினார்களோ அப் போதே சூதாட்டமாக மாறிவிட்டது.  ஒரு சூதாட்ட மாகவே வளர்ச்சி யடைந்தது.  1800-களுக்குப் பின் இங்கிலாந்தின் மேட்டுக்குடி மக்கள் இந்தச் சூதாட்டத்தைத் தங்கள் பொழுதுபோக்கு விளையாட்டாக எடுத்துக் கொண்டார்கள்.  பின்பு தங்கள் அடிமை நாடுகளில் அறிமுகப்படுத்தினார்கள்.  இன்று வெறும் பதினாறு அல்லது பதினான்கு நாடுகள் (இந்த நாடுகள் அனைத்துமே இங்கிலாந்தின் முன்னாள் அடிமைகள்) விளையாடும் விளையாட்டுக்கு ஒரு உலகக் கோப்பைப் போட்டி நடத்துவதும், அதை உலகமே கண்டு களிப்பது போலவும் இந்திய ஊடகங்கள் ஒரு பொய்மையைக் கட்டமைக்கின்றன. 

அப்படியென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளையும், கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் நாடுகளைப் போன்று இரண்டு, மூன்று மடங்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியையும், ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியையும் என்ன சொல்வது. தருக்கப்பூர்வமாக யோசிக்கும் அளவுக்கு இந்தியாவில் விளையாட்டுப் பார்வையாளர்கள் ஆரோக்கியமானவர் களாக இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Pin It