இன்றைய நுகர்வு கலாச்சார உலகில் உடம்பு என்பது குறிப்பாக பெண்களின் உடம்பு என்பது நுகர்வுப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும் மாறிவிட்டது இதில் ஆண் உடலை அவ்வாறு ஆக்குவது என்பது பல நவீன உலக விசயங்களில் சாதாரணமாகி விட்டது. அதில் ஒன்று ஆண்களை பெண்கள் பயன்படுத்தும் விபச்சாரம். அப்படித்தான் ஆண் உடலை குறிப்பாக முதுகை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்தும் ஒரு சமூகம், ஓவிய குழு பற்றிய சர்ச்சையை இதை படம் எழுப்பியிருக்கிறது. சாம் அலி ஒரு பணக்கார பெண்ணைக் காதலிக்கிறான். அப்போது அங்கு சிரியாவில் நடக்கும் போரில் இருந்து தப்பிக்க தனது நாட்டைவிட்டு தப்பித்துப் போகிறான். அங்கே அவன் வேலை இல்லாமல் சிரமப்படுகிறான். அவன் முதுகை ஒரு ஓவியர் விளம்பரத்துக்காக பயன்படுத்த கேட்கிறார்.

The Man Who Sold His Skinஅவனும் ஒத்துக்கொண்டு அதைச் செய்கிறான். அவனின் முதுகில் செங்கண் விசா சின்னத்தை சர்ச்சைக்குரிய ஓவியர்களால் பச்சை குத்தப்பட்டு விளம்பரப் படுத்தப் படுகிறான். அவனின் உடம்பு ஓவிய கண்காட்சி போல ஆகிவிடுகிறது. அவனை ஒரு மியூசியத்தில் உட்காரவைத்து அதை வேடிக்கைப் பொருளாகப் பார்க்கிறார்கள் அவனின் உடம்பின் வேறு வடிவங்களாக படங்களாகவும், சிற்பங்களாகவும் முதுகும் பலரின் பார்வையாளர்களுக்கு விருந்தாகிறது. அதனால் அவனுக்கு நிறைய பணம் சன்மானமாய் வருகிறது. சிரியாவில் இருக்கிற தனது அம்மா மற்றும் சகோதரிகளுக்கு அந்த பணத்தை அனுப்புவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் தன் உடம்பை இப்படி ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் மாற்றி இருப்பது அவனுக்கு பல சமயங்களில் உறுத்தலாக இருக்கிறது.

அதை அவன் புறந்தள்ளிவிட வில்லை அதனால் அவனுக்கு கிடைத்திருக்கிற சொகுசான வாழ்க்கையும் பணமும் அவனை அதற்குள்ளேயே இருக்க வைக்கிறது சிரியாவில் இருக்கிற அவன் காதலியை வேறொரு பணக்காரனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். அவளும் திருமணம் செய்து கொள்கிறாள். அவள் கணவனுடன் சென்று விடுகிறாள். ஆனால் இவனின் இந்த சர்ச்சைக்குரிய ஓவிய முதுகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் கணவன் அங்கு வந்து சந்திக்கிறான்.

அவளின் காதல் உணர்வுகள் மீண்டும் அடிபடுகின்றன இந்த சூழலில் கோபத்தில் அங்கிருக்கிற ஓவியங்களை சேதம் விடுகிறான் காவல்துறையால் கைது செய்யப்படுகிறான். கணவனை விடுவிக்க காதலி அவனிடம் கேட்கிறாள். அவனை விடுவிக்க நீ படுக்க வர வேண்டுமா என்று கேட்டாலும் கணவனை விடுவிக்க முயற்சிகள் எடுத்து அவனை விடுதலை செய்ய வைக்கிறான். அவனின் உடம்பு பச்சை குத்துதல் போன்றவற்றால் கேன்சர் போன்ற வியாதிகள் வரக்கூடும் என்று பயமும் இருக்கிறது. அதை இன்சூரன்ஸ் செய்து பாதுகாக்கும் மருத்துவர்களும் ஓவிய குழுமமும் இருக்கிறார்கள் சரியாகவே கண்காணிக்கப்படுகிறது பல சமயங்களில் அவன் தன்னிலை மறந்து சுகபோக வாழ்வை குறைத்துக் கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனின் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது எதிர்பார்த்தபடி முதுகில் சீழ் பிடிக்கிறது.

அதை அறுவை சிகிச்சை மூலமாக சரிசெய்து கொள்கிறான். அவன் உடம்பு ஏலத்திற்குப் போகிறது பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் கேட்கிறார்கள். அப்போது அவன் எரிச்சலாகி தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான் இது அவனின் உடம்பு சார்ந்து ஒப்பந்தங்கள் போட்டவர்களுக்கு எரிச்சலாகி விடுகிறது. காவல்துறையும் இதில் இடையீடு செய்து அவனை காவலில் வைக்கிறார்கள் நீதிமன்றத்திற்கும் வழக்கு செல்கிறது அப்போதுதான் அவனின் விசா முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருப்பது தெரிந்து அவனை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு சொல்கிறார்கள் நீதிபதிகள்.

அவன் மகிழ்ச்சியுடன் சிரியா நாட்டிற்கு செல்கிறான் பழைய காதலியோடு சேர்ந்து கொண்டு சேர்ந்து கொள்கிறான் ஆனால் அவன் முன்பு மியூசியத்தில் இருக்கும்போது அவன் ஒரு சிரியா அகதி என்ற வகையில் அவன் துன்புறுத்தப்படுகிறான். பல மனித உரிமை வழக்குகள் வருகின்றன. இந்த நிலைமையில் சிரியாவிற்கு செல்லுகிற போது அந்நாட்டின் தீவிரவாத குழுவொன்றால் அவனுடைய உடம்பை நுகர்வு ஆக்கியது குறித்த சர்ச்சையில் அவனை சுட்டுக் கொள்வதாக ஒரு வீடியோவை காணொளியை தயார் செய்து லெபனானில் இருக்கும் ஓவியர்களுக்கும் அவனை ஒப்பந்தம் செய்தவர்களுக்கும் தன்னைப் பற்றி விளக்கமாக அனுப்புகிறான் ஆனால் அது கட்டமைக்கப்பட்டு, பொய்யான காணொளி.

அவன் தன் காதலியுடன் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதை படத்தின் இறுதி கட்ட காட்சிகள் சொல்கின்றன உடம்பு விளம்பரப் பொருள் ஆகிற இந்த விஷயத்தை சில மலையாள மொழிக் கதைகளில் படித்து இருக்கிறேன் இந்த கதை கூட பெல்ஜியம் சார்ந்த வில் டெல்லி அவர்களின் பிம் என்ற ஒரு படைப்பின் மூலமாக இருந்திருக்கிறது. உடம்பு நுகர்வு பொருள் ஆகிற விளம்பரப்புகள் ஆகிற சர்ச்சையை மனித உரிமை பிரச்சினையாக இந்த படம் முன் வைத்திருக்கிறது.

- ஆல்பா

Pin It