தொலைபேசி உரையாடலையே ஒரு கதைச்சொல்லியாக நகர்த்தும் விஜய் மகேந்திரனின் குரல் நடையும், இக்கதைகளின் நடையும் வெவ்வேறு விதமானவை அல்ல. நவீனம் சார்ந்து இயங்குகிற நட்புகளையும் அது தொடர்பான விவரணைகளும் கதைகளில் ஒரு மெல்லிய இழையாய் மின்னுகிறது. அந்த மின்னுதலில் உறுத்தல் இல்லாததும் கவனிப்பு பெறுகிறது. நகரத்து மக்களின் வாழ்க்கையை சொல்கிற நகரத்திற்கு வெளியேகதையாகட்டும், இன்றைய காதலின் நிஜத்தைக் காட்டும் மழை புயல் சின்னம்கதையாகட்டும், ஜரிகை கனவின் உலகத்தைக் காட்டும் ஆசியா மேன்ஷன்ஆகட்டும், ஒரு மனிதனின் அனுபவத்திற்கு மிக நெருக்கமாய் அமர்ந்து எழுதியிருப்பது போலவே, கதைகள் உணர்த்துகின்றன.

நவீனம் என்றாலே மதுவும், கசிவு, மிதத்தல் என்ற சொற்களும் இல்லாத எழுத்துக்கள் மிக மிக குறைவு. விஜய் மகேந்திரனும் விட்டு வைக்கவில்லை. அல்லது அந்த நவீனம் அவரையும் விட்டு வைக்கவில்லை என்றும் சொல்லலாம்.

அண்மைத்தீவில் மக்கள் செத்தொழிந்தாலும் என பொங்குகிற கோபம், தொகுப்பில் நிறைய இடங்களில் தன் பிம்பத்தைக் காட்டுகிறது. இந்த பிம்பம் மழை புயல் சின்னம்கதையிலும் இருக்கிறது. சென்னை மாநகராட்சிதமிழ்ச் சமூகம். அதற்கு புயல் ஒன்றும் பொருட்டல்ல. அருகாமைஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்றே வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்பதாய் சுடுகிறது பிம்பம். இந்த வெப்பம் அதே கதையில் புகை.. புகை சங்கமம் மனித சேகரம்என்றும் காற்றில் மிதக்கிறது. காலத்திற்கு மனிதனை விட்டு வைக்காத நிலைகளை கதைகளாக தந்து இருப்பதால், தொகுப்பும் பயணப்படும் நூலாகவே அமைந்து இருக்கிறது. நகரத்திற்கு வெளியேகதை பெண்களின் நிலையை சொல்கிறதா..? ஆண்களின் அடிமன அழுக்கைச் சொல்கிறதா என்கிற கேள்வியோடுதான் விவரிக்க நேர்ந்தது.

கதைகள் பல்வேறு தளங்களில் பயணம் செய்தாலும் பிறந்த மண்ணை மறக்காத தன்மை கதைகள் முழுவதும் பதிவாகி இருக்கிறது. மதுரைஎன வராத கதை ஒன்றே ஒன்றுதான். அது மண்வாசனை என்றும் சொல்லலாம். மண்ணை மறக்காத ஒரு மனதின் வாசனை என்றும் கொள்ளலாம். விதைநெல்என்பது வயல் அளவு அல்ல கையளவு என்பதை நகரத்திற்கு வெளியேசிறுகதை தொகுப்பு விதை நெல்.

Pin It