மூலை

மூலை சேர்ந்தாயிற்று
எல்லாம் ஒதுக்கியபின்
தேவையானவற்றைத் தேடி
அலுப்பாயிற்று.
கிடைப்பவையெல்லாம் எதுவோ ஆக,
வராதவை, வந்தவை
எல்லாம் பட்டியலில் இடம்பெற
பெயர்ந்தானது மனசை
உனக்குள் வைத்திருப்பவற்றை
கொடுக்க மனசில்லையென்றும்
தவிர்க்க எத்தனையோ இருக்க
விலகியிருக்கிறேன் எனக்குள்.

வருபவை விலகிப்போக
வராதவையெல்லாம் தூரத்திலிருக்கிறது
என்றாலும்
எல்லாமே
வானத்தின் கீழ்
சகஜமாயிருக்கிறது. (1999)

2

இந்த மரம் என்னை திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்
என் நன்றியை தெரிவிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
என் உணர்வுகளின் வெளிச்சங்களாய்
இந்த மரங்களின் மௌனம்
எனக்குள்
எதற்குமே கவலைப்படாமல்
உயிரை வளர்க்கும். (1999)

3

மொத்தமாய் வாங்கலாம்
கடையில் விற்கும் காய்கறிகயை
சமையலுக்கு முன்னேற்பாடாக
சமையல் அறையில் ஜன்னல் கைதியாய்
சூரியனை நண்பனாக்கிப் பழக
முடியவில்லை இன்னும்
எனக்காக வேலையும் எப்போதும்
எண்ணப்டாமலே நீடிக்கும்
மௌனம் தான் உண்மையா
உதவத் தெரியாமல்
வண்ணங்களை தெளித்து என்ன பிரயோசனம்
ஒவ்வொரு கண்ணும்
வேதனையின் உச்சகட்டமாய்
ரணமாய் நான் மாற வேண்டும்
எப்பொழுதும் மௌனம் கூடவே
நான் வேண்டும் எனக்கு
மீதியுள்ள சகாப்தமும்
மின்விசிறியாய் சுழலும்
நான் எதிர்பார்த்திருப்பேன்
அம்மா உன் அன்பான சொல் குறித்து (2000)

4

உழைத்தது பாதி
அலுத்தது மீதி
எதிரொலியில் தவித்து இயங்கும்
அச்சத்தின் நொடிகள்
சூரிய வெளிச்சத்தில் நாம்
மற்றொருவர் முன்னே
அடையாளம் தெரிகிறது
அதிர்ச்சியாகி நிற்கிறோம்
எப்போதாவது மழைவருமா என்ற ஏக்கத்தில்
எதிரொலிக்கும் கண்ணாடி சில்லுகள்
எப்போது காலை முதல் இரவு வரை
ஒருவகை உணவிற்காய்
உழைத்து வாழும் மனித வாழ்க்கை
இயந்திரமா எனக் கேட்க வைக்கிறது
வேறு வழியில்லாது நமது முகங்களில் நாமே
பார்த்துக் கொள்வதில்
சுயதரிசனங்களில்
குரூர அதிர்ச்சிகள்
நாம் அடையாளம் காண்கிறபோது
மீண்டும் மீண்டும் அழுகையும் சிரிப்புமாக
நமது மனித இயல்புகள் (2004)

5

அடுப்புக்கு வேலை அவசரமாம்
அபாயம் பறந்து போகக் கிடைக்கணும்
யுகங்களின் மத்தியில் கொஞ்சம் கிணறு
இடிதாங்கும் வானம் மழை கொடுக்கும்
எரிகின்ற நெருப்பு எனது எல்லாம்
ஏக்கங்கள் தீரும் மௌன மரணம்
உணர்ந்தவுடன் யோகி அவரசமா?
எல்லோரும் வேண்டும் எனக்கு
நான் யார் இந்த உதவிக்கு
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் (2006)

6

பசி தீர்ந்து போகணும்
போராட்டமாய் இருக்கிறது
இந்திய நதிகள்...
பசிக்கு சாக்கடை
தெருவுக்கு ஏசி
செலவுக்கு பந்த்
நான்...
சாக்கடை நாத்தம்
உடம்பு துடைப்பம்
நீங்கள் கோவில்
எங்களுக்கு டாய்லெட்
சமையல் இல்லை அவ்வளவுதான்
உடம்பு முழுக்க சாக்கடை நாத்தம்
திருட்டு சாக்கடை தரித்திரங்கள்
ஓநாய்கள்
பீ
பன்னி பீ மேடுகள். (2007)

7

எளிமையில்
என் உரிமை கண்டேன்
இரக்கத்தில்
என் அழுகையை எதிர்பார்த்தாய்
எப்போதும் மௌனமாய்
சவமாகிக் கிடக்கும்
பிணங்களின் முகவரிகள்
பெண் விடுதலைன்னா என்ன?
நாங்க டி.வி. பாக்கணும்
சமூகத்தைப் பற்றி
கவிதை தெரியுமா?
நாங்க டி.வி. பாக்கணும்
செரி ...
உரிமை ...
அழுகை ...
தூங்கிப்போதல். (2008)

8

காலைக்குள் கதவுகள்
எனக்குள் வெளி
இதயத்தில் தேடல்
வெளி நரண்
முரண் அறிந்தது
திக்விஜயம்
இங்கே எது எது வீடு தேடும் விதம்
புது ஆக்கிய புது ஞாண்
அரற்றும் அரு விதை
சொல் தேடல் கொலை நன்று
போதும் முடிக்கிறேன்
இசைதலில் ஒரு விழா
திவ்ய நாடகம்
தணிங்தினத்தோம்.
(2009)

Pin It