தன் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு செம்மையாய் நடைமுறைப்படுத்தப்பட்டுத்,தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகச் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

ஒவ்வொரு நாளும் நாளிதழ்களைப் புரட்டினால் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு இவை இல்லாமல் செய்திகளைப் படிப்பது அரிதாகவே இருக்கிறது.

இவை எல்லாம் தனியார், வெளியாரிடம்தான் நடத்தப்பட்டு இருக்கிறது என்பது போய், இன்று அரசின் பொறுப்பில் இருக்கும் மிக முக்கியத் துவம் வாய்ந்த எழும்பூர் அருங்காட்சி யகத்திலும் கொள்ளை போய் இருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது-.

இந்தியாவின் இரண்டாவது பழைமை வாய்ந்த இவ்வருங்காட்சியகம் 1846ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பண்டைக்கால மன்னர்கள், மக்கள் பயன்படுத்திய பொருள்கள் இங்கே வரலாற்றுச் சான்றுகளாகப் பாதுகாக் கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட வரலாற்றுச் சான்றுகளாக இருக்கும் முகலாயர் காலத்து நாணயங்கள்தான் இங்கிருந்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.

இக்காட்சியகத்தின் முதல் மாடியில் இருந்த பஞ்சலோகச் சிலைகள் இடம்மாறி இருந்ததாகவும், இக்கொள் ளைச் சம்பவத்தை மூடி மறைப்பதனால், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சலோகச் சிலைகள், செம்பு, தாமிரப் பட்டயங்கள் இவைகளில் ஏதேனும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அருங்காட்சியகக் காவல்துறையினர் முகலாயர் காலத்து இரண்டு நாணயங்கள் மட்டுமே காணாமல் போனதாக அருங்காட்சி யகக் காப்பாளர் புகார் கொடுத்துள்ள தாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் அருங்காட்சியக அதிகாரியோ, திருடு போனது உண்மைதான். ஆனால் அது உண்மையான நாணயங் கள் இல்லை, மாதிரி வடிவம்தான் என்று சொல்கிறார்.

இவை இரண்டுமே முரணாக இருக்கின்றன. இந்த நிமிடம்வரை அருங்காட்சியக அல்லது அத்துறை சார்பான அரசின் விளக்கம் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

வாதத்திற்கு அருங்காட்சியக அதிகாரி சொல்வதை ஏற்றுக்கொள்ள முயன்றால் கூட, அந்த ‘மாதிரி’ நாணயங்களும் அதே அருங்காட்சியகத்தில் இருந்துதானே கொள்ளை போயிருக்கின்றன.

மாதிரி வடிவ நாணயம் என்ப தற்காக இந்தக் கொள்ளையைத் திசை திருப்ப முயல்வது சரியான அணுகு முறையாக இருக்காது.

சட்டம் ஒழுங்கைக் காப்பதாக வாய்ச்சொல் வீரம் காட்டுவது அரசின் வேலையன்று. அதை நடைமுறைப் படுத்துவதே அரசின் கடமை.

Pin It