CamScanner -Phone PDF Creator

உங்கள் உள்ளங்கையில் அருமையான ஸ்கேனர் ஒன்று வைத்துள்ளீர் தெரியுமா..?

நாம் அலுவலகத்திலிருந்து பல ஆவணங்களை மற்ற இடங்களுக்கு அலுவல் நிமித்தமாக பகிர்கிறோம்.

அப்போது நமக்குள்ள பெரிய இடர்பாடு

தமிழ் எழுத்துரு போகுமா?

கோப்பின் அளவு பெரியதாக இருக்கிறதே எப்படி அனுப்புவது?

நம் அலுவலகத்தில் நல்ல ஸ்கேனர் இல்லையே என்ன செய்ய?

ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம், மங்கிய தாளில் தெளிவாக இல்லாமல் இருக்கிறதே என்ன செய்ய?

- போன்ற பிரச்சனைகள் எழலாம். இனிமேல் கவலை ஏதுமில்லை. ஆம் தரமான ஸ்கேனர் நம் கைகளிலேயே இருக்கிறது.

ஆம். Play Store சென்று CamSanner - Phone PDF Creator எனும் செயலியை நிறுவுங்கள். நீங்கள் எந்த Document ä Scan செய்ய வேண்டுமோ அதனைப் படமெடுங்கள். படத்தினை மிகத்தெளிவாக அதன் எல்லைகளை நாமே நிர்ணயித்து மிகத் தெளிவாக எடுக்கலாம்.

நமக்கு Gray Scale வேண்டுமானாலும் சரி, கருப்பு வெள்ளையில் வேண்டுமானாலும் சரி. இப்போது ஆவணம் தயாராகிவிட்டது. இப்போது இதனை PDF ஆக மின்னஞ்சல், வாட்ஸ் ஆப், டெலிகிராம் என அனைத்து செயலி வாயிலாக அனுப்பலாம். இது நேராக கேமரா மூலம் படம் பிடிக்கும் தரத்தை விடத் தெளிவாக இருக்கும். மிகச்சிறிய இடத்தை மட்டுமே கொள்ளும். PDF ஆக அனுப்புவதால் எழுத்துரு பிரச்சனை ஒருபோதும் இல்லை.

அது மட்டுமல்ல அவ்வப்போது ATM, Super Market-ல் நாம் வாங்கும் பட்டியல் ஓரிரு நாட்களில் மங்கிவிடும். இதனை உடனடியாக பாதுகாக்க நாம் இந்த செயலியில் பாதுகாத்தால் எப்போதும் நம்முடனே இருக்கும். தேவையான நேரத்தில் எடுத்து பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு தொடர்பற்ற பகுதியில் இருக்கும் போது கூட நகல் பெருக்கியும், அச்சு இயந்திரத்தையும் தேடாமல் நம் கைகளில் உள்ள திறன் பேசி மூலம் மிக எளிதாக அனைத்துவகை ஆவணங்களையும் கையாளலாம்.

தொழில் நுட்பத்தின் மூலம் நமது பணியினை எளிதாக்குவோம்.

TamilPulavar

எந்த ஒரு புரியாத சொல்லுக்கும் பொருள் தேடித்தான் அலைகிறோம். தொழில் நுட்பம் வளர்ந்து வரும் போதே நமக்குச் சோம்பலும் சேர்ந்தே வளர்ந்து வருவதும் உண்மைதான். புதியன புகுதலும் பழையன கழிதலும் இயல்புதானே.

அவ்வாறு சொற்களுக்குப் பொருள் தேடி அலையும் போது மிக நல்ல செயலி ஒன்று கண்ணில் பட்டது. பொதுவாக இணையத்தில் நாம் தேடும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் மற்றும் ஆங்கிலத்தில் அதன் பொருள் தேடிப்பெறலாம்.

அது போலவே ஆங்கிலத்தில் இருந்தால் தமிழில் சொற்களை அறியலாம். சில அகர முதலி (Dictionary) களில் பொதுவான சொற்கள் மட்டுமே இருக்கும். துறை சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை. மருத்துவம், பொருளாதாரம், உயிரியில், சட்டம் தொடர்பான பொருள்கள் நாம் எளிதில் பெறலாம்.

Google Play Store செல்லுங்கள் அங்கே TamilPulavar என தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு செயலி தரவிரக்கம் ஆகும். இனி நீங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழிலோ எளிதில் சொற்களைப் பெறலாம்.

David McAlpin - A Core vocabulary for Tamil

கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதி

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

இசையினி தமிழ் அகராதி

சங்கச் சொல்லடைவு அகராதி

J.P.Fabricius Tamil and English Dictionary

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி

கழகத் தமிழ் அகராதி

தமிழ் தமிழ் அகரமுதலி

பால்ஸ் அகராதி

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி

11 வகையான அகராதியில் இருந்து பொருள், எதிர்ச்சொல், இணைச்சொல், விக்சனரி, விக்கிபீடியா, யாப்பு, சந்தம், அசை எனத் தேடித்தருகிறது. அது மட்டுமல்ல மேலொரு வியப்பு. நாம் உள்ளீடு செய்யும் சொல்லுக்கேற்ற பழமொழியினையும் நாம் தேட முடியும். இந்த செயலி இணையத்திலும் கிடைக்கிறது. கணினியில் கூடுதல் வசதிகள் அளித்துள்ளனர். மொழியை கசடறக் கற்க விரும்புவோருக்கும் ஆய்வுப்பணியில் உள்ளவர்களுக்கும் மொழி பெயர்ப்பாளர் மற்றும் கல்வி கற்போருக்கும் அருமருந்தென இச்செயலி அமையும் என்பதில் ஐயமில்லை. தோழர்களே உடனே உங்கள் திறன் பேசிகளில் நிறுவி மெய்ப்பொருள்கள் காண்போம்

Pin It