அறிவைவிட ஒழுக்கமே உயர்ந்தது என்று சொல்லும் அண்ணல் அம்பேத்கர், பார்ப்பனர்கள் படித்தவர்களே ஒழிய ஒழுக்கமானர்கள் அல்ல என்றும் சொல்கிறார், பல வரலாற்றுச் சான்றுகளுடன். இன்றும் இக்கூற்றை அவர்கள் உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவரும், பா.ஜ.கவின் நிழல் செய்தித் தொடர் பாளருமான எஸ்.குருமூர்த்தியின் அண்மைப் பேச்சு இதற்கு ஒரு சான்று.இந்தியாவில் முப்பது விழுக்காடு பெண்கள் மட்டுமே `பெண்மை' உடையவர்கள், அவர்கள் மட்டுமே தெய்வத்திற்கு இணையாக வணங்கக் கூடியவர்கள் என்று பேசியிருக்கிறார் குருமூர்த்தி.பெண்ணை உருவாக்க முடியும் ஆனால் பெண்மையை உருவாக்க முடியாது என்றும் ஒரு பார்ப்பனியத் தத்துவத்தை`அருளியிருக்கிறார்'.
குருமூர்த்தி சொல்லும் பெண்மை என்றால் என்ன? அது ஒரு பெண்ணின் உடலில் எங்கே இருக்கிறது என்று அவரால் சொல்ல முடியுமா?
எஸ்.வி.சேகர் பெண்கள் பதவி உயர்வு பெறுவதற்குப் பிறரின் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நாக்கொழுப் பேறப் பேசியது உலகறியும்.
காஞ்சி சங்கரமடத்தின் மறைந்த சங்கராச்சாரி பெண்கள் பிள்ளை பெறவதும், சமையல் செய்து வீட்டு வேலைக்காரியாக இருப்பதுமே அவர்களின் தர்மம் என்று சொல்லியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒழுக்கங் கெட்ட மனுதர்மம் சொல்லும் பார்ப்பன ஆணாதிக்கத் திமிர்.
பெண்பிள்ளை பெறும் இயந்திரமில்லை, வேலைக்காரியுமில்லை. பார்ப்பன ஆணாதிக்க அடக்கு முறையிலிருந்து இவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற சமூகநீதிக் குரலை ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.
குருமூர்த்தி மற்றும் அவரின் சகாக்களின் ஒழுக்கங் கெட்ட பேச்சுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை