கீற்றில் தேட...

1
சாதியெல்லாம் பார்ப்பதில்லை
யார் போனாலும்
சமமான மதிப்புதான்
பண்ணை வீட்டில்
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரில்
டீ குடித்து பெருமூச்சு விடுகிறான்
காலத்தின் அடிமையாய்
அப்பனுக்குப் பின் மகன்

2

பாட்டனுக்கு
தேங்காய்த் தொட்டியில்
அப்பனுக்கு
கண்ணாடி டம்ளரில்
மகனுக்கு
யூஸ் அன்ட் த்ரோ டம்ளரில்
விரல் ரேகை படிய
மறைந்திருக்கிறது
எல்லாக் காலங்களிலும் சாதி!

3

பெரிய கவுண்டச்சி
கட்டிக் கழித்த சேலை
பாட்டியின் இடுப்பிலிருந்தது.
சின்னக் கவுண்டச்சி
கட்டிக்கழித்த சுடிதார்
பேத்தியின் இடுப்பிலிருக்கிறது