கொட்டும்
மழை இரவில்
துண்டில்
சுடு சோறு கொண்டு வந்த
அப்பாவிடம்
மகள் கேட்டுக்கொண்டே இருந்தாள்
"ஆண்ட வீட்ல
வேற ஏனம் எதுவும்
இல்லயா?" என்று...
"அந்த ஏனத்தைவிட
இந்த துண்டு
சுத்தமா இருந்திச்சி"
சொல்லும் பொழுது
சிரிக்க ஆரம்பித்தாள்.
மழை கூடுதலாக
பெய்து கொண்டிருந்தது.
- பாரிமேகம்