கீற்றில் தேட...

சிக்கிக் கொண்டவொரு பதற்றத்தையும்
சிக்கிக் கொள்ளாமலிருக்கச் சிறகடித்ததின்
மூச்சிரைப்பையும்
துளியும் வெளிப்படுத்தாமல்
உயிர்த்துகள்களால் பிஞ்சு விரல்களுக்கு
வண்ணம் பூசிப்பார்க்கிறதப் பட்டாம்பூச்சி
தான் சிக்கிக்கொண்டதொரு
கோகுலிடமென்பதால்

- பா.ராஜா