எதேச்சையாய்
அந்தக் கொலைவாள்
என் கைக்குக் கிடைத்தது.
அதன்
கூர்மை...
பளபளப்பு...
கொடுவசீகரம்....
யாவும் பிரமிப்பூட்டின.
மேலும் -
கொஞ்சம் பயமும்கூட ;
என் மீது பாய்ந்துவிட்டால்...?
எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தேன்.
எளிதாகத்தான் இருந்தது.
ஒன்று...
இரண்டு...
நூறு...
ஆயிரம்....
நண்பர்கள்...
எதிரிகள்...
யாரெனவும் தெரியாதவர்கள்...
எதிர்ப்பட்ட தலைகள்
யாவும் வீழ்ந்தன.
கைப்பிடியைத் தளர்த்தாதவரை
வாளின் கூர்முனை
என் தலைக்குத் திரும்பாது.
- ம.ஜெயப்பிரகாஷ்வேல்