கடக்க முடியாத
மதில்கள் நிற்கின்றன
இரவின் எல்லைகளில்
துயரின் ஆழ்கருமை
நீர்நிற ஓவியக்கரைசலாய்
படிந்து கிடக்கிறது
ஓவியச் சட்டகத்தின் வெளியே.
நுழைவாயிலிலும்
புழைக்கடை வேலிப்படலிலும்
நிலவொளியின் புழுதியாய்
சூரியனின் செதில்களாய்
உறுத்திக்கொண்டிருக்கிறது
உன் முகம்
வெளியேறுதல் சாத்தியமற்ற
நினைவுச்சிக்கில்
கடந்து போகின்றன இரவுகள்
உன் வலது முலையின் மேல்
விழும் நட்சத்திர ஒளியின்
பிரதிபலிப்பில்
உறக்கமற்று மூடிய விழிகளுக்குள்
வெறிபிடித்து அலைந்துகொண்டிருக்கிறது
விடியலுக்கான ஒரு கனவு.

Pin It