1860

ஆங்கிலேய அரசு தனது காலனிகளில் (இந்தியா உட்பட) ஓரினப்புணர்ச்சிக்கு எதிராக, குறிப்பாக ஆசனவாய் புணர்ச்சிக்கு (sodomy) எதிரான குற்றவியல் சட்டம் பிரிவு 377-ஐ அமுலுக்குக் கொண்டு வந்தது.

1941

உருது மொழி எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் அவர்களின் "லிஹாஃப்" சிறுகதை பிரசுரமாகி மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இரு பெண்களுக்கிடையிலான பாலியல் உறவைப் பற்றி இருந்ததால் மிகுந்த கண்டனத்திற்கு ஆளானது.

1978

கணித மேதை சகுந்தலா தேவி தன் திருமணம் மற்றும் கணவர் பற்றிய அனுபவங்களிலிருந்து "The World of Homosexuality" என்ற நூலை எழுதினார்

1986

இந்தியாவின் முதல் எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டது

பிப்ரவரி - அசோக் ராவ் கவி தனது ஒருபாலீர்ப்பு பற்றி "சாவி" (Savvy) மாத இதழில் கூறியிருந்தார்.

ஏப்ரல் - போபாலில் ஹிஜ்ரா சமூகத்தினருக்காக மாநாடு நடைபெற்றது

1987 ஜனவரி

பெங்களூரில் "சிநேக சங்கம்" அமைப்பு தொடங்கப்பட்டது.

"த்ரிகோன்" என்பது அமெரிக்காவில் உள்ள மாற்றுப் பாலியல் கொண்ட தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் அமைப்பாகும். இந்தியாவில் "சொசய்டி" மாத இதழ் இந்த அமைப்பு குறித்த பத்தி ஒன்றை வெளியிட்டது.

ஜூலை - கனடாவில் டொரான்டோ நகரில் "குஷ்" அமைப்பு தொடங்கப்பட்டது

திசம்பர் - போப்பாலைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் லீலாவும் ஊர்மிலாவும் திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

1989

எச்.ஐ.வி தொற்று இருப்பதாகத் தெரிய வந்ததால் கோவாவைச் சேர்ந்த டாமினிக் டிசூசா என்பவர் கைது செய்யப்பட்டுத் தனி சிறையில் வைக்கப்பட்டார்

1990

தில்லியில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்காக "ரெட் ரோஸஸ்" குழுமத்தின் சந்திப்புகள் தொடங்கின.

ஏப்ரல் - லீலா சாவ்டா என்ற பெண்ணின் தந்தை அவரது துணைவரான தாருலதா என்பவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 377ன் கீழ் வழக்குப் பதிவு செய்தார்

ஜூன் - "பாம்பே தோஸ்த்" இதழ் வெளிவந்தது

செப்டம்பர் - குல்பர்காவில் "ஃப்ன்£டம்" செய்தியிதழ் வெளிவந்தது

திசம்பர் - கொல்கத்தாவில் மாற்றுப் பாலியல் கொண்டோரின் சந்திப்புகளுக்காக "ஃபன் கிளப்" தொடங்கப்பட்டது

ஃபிர்தௌஸ் காங்கா என்பவர் தனது இருபாலீர்ப்பு மற்றும் மாற்று உடல் திறன் குறித்த "Trying to Grow" என்ற நூலை வெளியிட்டார். இது பின்னர் திரைப்படமாக்கப்பட்டது.

1991

திசம்பர் - கொல்கத்தாவில் "பிரவர்தக்" இதழ் வெளியிடப் பட்டது

ஜூலை - தில்லியில் "சகி" பெண்கள் அமைப்பு தொடங்கப் பட்டது

நவம்பர் - இந்தியாவில் ஒருபாலீர்ப்பு குறித்த முதல் குடிமக்கள் அறிக்கையான "Less than Gay" "எய்ட்ஸ் பேத்பாவ் விரோதி ஆந்தோலன்" (எய்ட்ஸ் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம்) என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது

1992

ஜனவரி - இலங்கையில் "Companions on a Journey" அமைப்பு தொடங்கப்பட்டது

சமூக ஆர்வலர் சித்தார்த்தா கௌதம் புது தில்லியில் மரணமடைந்தார்

பிப்ரவரி - "ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்" மத்தியில் எச்.ஐ.வி தடுப்புப் பணிக்காக "உடான்" அமைப்பு பம்பாயில் தொடங்கப்பட்டது

மே - எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படவர்களின் உரிமைக்காகப் பணி செய்த டாமினிக் டிசூசா மரணமடைந்தார்

அரவிந்த் கால என்பவர் எழுதிய "The Unknown World of the Indian Homosexual" என்ற நூல் வெளிவந்தது

1993

ஜனவரி - "சித்தார்த கௌதமின் நண்பர்கள்" குழு அவரது நினைவில் தில்லியில் மாற்றுப் பாலியல் குறித்த திரையிடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. சுமார் 400 பேர் பங்குகொண்டனர்.

ஆகஸ்ட் - கொல்கத்தாவில் "Counsel Club" தொடங்கப்பட்டது

செப்டம்பர் - புது தில்லில் "ஆரம்ப்" இதழ் வெளியிடப்பட்டது

திசம்பர் - "நாஸ்" மற்றும் "சகி" அமைப்புகள் இணைந்து புது தில்லியில் மாற்றுப் பாலியல் குறித்த கருத்தரங்கை ஒழுங்கு செய்தன.

எய்ட்ஸ் தடுப்புப் பணிக்கென பெங்களூரில் "சம்ரக்ஷ£" அமைப்பு தொடங்கப்பட்டது

1994

பிப்ரவரி - பெங்களூரில் Good As You (G.A.Y.) குழுவின் சந்திப்புகள் தொடங்கின

ஏப்ரல் - இந்தியாவில் ஹம்சஃபர் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது

ஜூன் - தில்லி திஹார் சிறைச்சாலையில் ஆணுறை விநியோகிக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ABVA அமைப்பு ஐ.பி.சி. பிரிவு 377ஐ எதிர்த்து வழக்குப் பதிவு செய்தது.

திசம்பர் - நாஸ் மற்றும் ஹம்சஃபர் அமைப்புகள் இணைந்து பம்பாயில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்தன

1996

நாஸ் இந்தியா அறக்கட்டளை தனது தொலைபேசி உதவி சேவையைத் தொடங்கியது: பெண்களுக்கென "சங்கினி" சேவையும் ஆண்களுக்கென "ஹம்ராஸ்" சேவையும் இதில் அடங்கும்.

ஏப்ரல் - பீஹாரைச் சேர்ந்த காளி என்பவர் தேர்தலில் போட்டியிட்ட (Judicial Reforms Party) முதல் ஹிஜ்ரா ஆனார்.

ஜூன் - மும்பையில் "ஸ்த்னா சங்கம்" அமைப்பு பெண்களை நேசிக்கும் பெண்களுக்கான முதல் தேசிய அளவிலான ஒன்றுகூடலினை ஒழுங்கு செய்தது

அக்டோபர் - லக்னோ நகரில் தான் இந்தியாவிலேயே அதிகமான ஓரினச்சேர்க்கை நடப்பதாக ளிutறீஷீஷீளீ இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டது

ராஜ் ராவ் அவர்களின் கவிதைகளைத் தழுவிய "பாம்கே" என்ற திரைப்படத்தை ரியாத் வாடியா என்பவர் வெளியிட்டார்

கீதி தடானி அவர்களின் "சகியானி: பண்டைய மற்றும் நவீன இந்தியாவில் லெஸ்பியன் விழைவு" என்ற நூல் வெளியானது

தீபா மெஹ்தாவின் மிகுந்த சர்ச்சைக்குள்ளான திரைப்படமான திவீக்ஷீமீ வெளிவந்தது.

1997

ஃ தர்பன் என்னும் இதழ் தில்லியில் வெளயிடப்பட்டது.

கல்கத்தாவின் மஹிலா சமன்வாய் சமிதி ஆண் பாலியல் தொழிலாளிகளைத் தமது இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவெடுத்தது.

ஆகச்த்: த்ரிகொன் பத்திரிக்கைகள் இந்தியச் சுங்க அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டன.

செப்டம்பர்: பெங்களூரில் சப்ரங் என்னும் குழு தொடங்கப் பட்டது.

செப்டம்பர்: பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் ஒர்பாலினச் சேர்க்கை பற்றியக் கருத்தரங்கம் நடத்தப் பட்டது.

டிசம்பர்: ரான்சியில் நடந்த தேசியப் பெண்கள் மாநாட்டில் பெண்களை விரும்பும் பெண்களுக்கான தனி அரங்கு அமைக்கப்பட்டது.

திரைப்படங்கள்:

தமன்னா- பரெஷ் ராவல்.

தர்மியா- கல்பனா லாஜ்மி

புத்தகங்கள்:

Sex, Longing and Not Belonging- A Gay Muslim's Quest for Love and Meaning - பத்ருதீன் கான்.

1998

நவம்பர்: 'ஃபயர்' திரைப்படம் வெளிவந்து அது ஒடிய திரையரங்குகள் சேதப்படுத்தப்பட்டன.

பிப்ரவரி: சங்க மித்ரா என்னும் இதழ் பெங்கலூரில் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது.

ஏப்ரல்: ஸாரனி என்னும் குழு ' சங்கீதத்துடன் வெளியே வரல்' என்னும் நிகழ்ச்சியை நடத்திப் பாலியல்பு பற்றிய விஷயங்களை வெளிக்கொணர்ந்தது.

சென்னையில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான பாலியல் சுகாதார சேவைக்காகச் "சகோதரன்" அமைப்பு தொடங்கப்பட்டது.

திரைப்படங்கள்:

பாம்பே பாய்ஸ்: கைசாத் குச்தாத்.

புத்தகங்கள்:

‘on a muggy night in mumbai' - மஹெஷ் தத்தானீ.

Neither man nor woman: the hijras of india: செரீனா நந்தா.

1999

இலங்கையில் 'விமென்ச் சப்பொர்ட் க்ருப்' என்னும் குழு உருவாக்கப்பட்டது.

ஜனவரி: 'கெம்பையின் ஃபொர் லெஸ்பியன் ரைட்ஸ்' (கலெரி) என்னும் குழு ஃபயர் திரைப்படத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்க உருவானது.

பிப்ரவரி: ஒர் பாலினச் சேர்க்கை ஆண்கள், பெண்கள் மற்றும் இருபால் சேர்க்கையினரின் உரிமை பற்றிய விவரப்படிவத்தின் முதல் பதிப்பு ஹம்ஜின்சி அமைப்பினால் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி: தேசிய பாலியல்பு பற்றிய மாநாடு- ஹைதெராபாத்.

ஜுன்: கல்கத்தாவில் ஓர்பாலினச் சேர்க்கைப் பெண்களுக்கான சாஃபொ அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட்: 'காமொஷ், எமெர்ஜென்சி ஜாரி ஹை' என்னும் புத்தகம் கலெரியால் வெளியிடப்பட்டது.

திரைப்படங்கள்:

சட்னி அண்ட் பாப்கார்ன்: நிஷா கனாத்ரா.

சம்மர் இன் மை வேஇன்ஸ்: நிஷித் சரன்.

புத்தகங்கள்:

'facing the mirror' - அஷ்வினி சுக்தான்கர்.

'yaarana'- ஹொஷாங் மெர்ச்சண்ட்.

2000

மார்ச்சு: ஷப்னம் மௌசி என்னும் அரவானி மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

ஜனவரி: தில்லியில் முதல் முறையாக வெளிப்படையாக ஒர்பாலினச் சேர்க்கையர் பற்றியத் திரைப்படவிழா நடத்தப் படுகிறது.

பிப்ரவரி: சாதி அமைப்பு சென்னையில் துவங்கப்பட்டு எச்.ஐ.வி பற்றிய பணியில் ஈடுபடுகிறது.

மார்ச்சு: 172ஆவது சட்ட மசோதா இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 பிரிவை அகற்றுமாறு பரிந்துரை அளிக்கிறது.

ஜுன்: இலங்கையின் பத்திரிக்கையாளர்கள் குழு ஒர் பாலினச்சேர்க்கைப் பெண்களுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது சரி என்று எழுதிய ஒரு பத்திரிக்கையின் செயலைப் பாராட்டியது.

நவம்பர்: இந்திய மனித உரிமை ஆணைக்குழுவும் பிரிவு 377ஐ மாற்றியமைக்குமாறு பரிந்துரைத்தது.

புத்தகங்கள்:

Same sex love in India- ரூத் வனிதா, சலீம் கித்வாய்.

2001

நேப்பாலில் ப்லூ டைமண்ட் சொசைட்டி என்னும் அமைப்பு துவங்கப்படுகிறது.

குஜராத்தியில் முதல் முறையாகப் பாலியல்பு பற்றிய 'லக்ஷ்யா' என்னும் இதழ் வெளிவந்தது.

ஜூலை: லக்னௌ நகரில் நாச் அமைப்பில் பணிபுரிபவர் பிரிவு 377இன் கீழ் கைது செய்யப்பட்டு, நாச் மற்றும் பரொசா ட்ர்ஸ்ட் அமைப்புகளின் அலுவலகங்கள் திடீர் சோதனை செய்யப்படுகின்றன.

டிசம்பர்: நாச் அமைப்பு பிரிவு 377ஐ மாற்றியமைக்க தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்கிறது.

புத்தகங்கள்:

'Queering India'- ரூத் வனிதா.

2002

ஆகஸ்ட்: ஹிஜ்ரா ஹப்பா விழா பெங்கலூரில் நடைபெருகிறது.

மார்ச்: பெங்கலூரில் உள்ள சங்கமா அமைப்பின் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

செப்டம்பர்: கீதலக்ஷ்மி மற்றும் சுமதி என்னும் காதலர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.

அக்டோபர்: கேரளத்தில் ஒர்பாலினச் சேர்க்கைப் பெண்களுக்கான சஹயாத்ரிகா அமைப்பு தொடங்கப்படுகிறது.

டிசம்பர்: ஃபாஷன் டிசைனர் வெண்டெல் ரொட்ரிகுயெஸ் தமது காதலர் ஜெரொமை கொஆவில் மணம் புரிகிறார்.

திரைப்படங்கள்:

'Flying with one wing'- அசோகா ஹந்தகம, இலங்கை.

'Mango Souffle'- மஹேஷ் தத்தானீ.

'Gulabi Aaina'- ஷ்ரிதர் ரங்காயன்

புத்தகங்கள்:

' The man who was a woman and other tales from Hindu lore '- தேவ்தத் பட்னாயக்.

2003

ஆகஸ்ட்: நேபாலில் 'ப்லூ டைமண்ட் சொஸைட்டி' முதல் முறையாக ப்ரைட் அணிவகுப்பு தொடங்கினர்.

அக்டோபர்: பம்பாயில் முதல் சர்வதேச பாலியல்பு பற்றிய திரை விழா நடந்தது.

ஜுன்: கல்கத்தாவில் 'வானவில் அணிவகுப்பு' என்று அழைக்கப்பட்ட ப்ரைட் அணிவகுப்பு நடைபெற்றது.

திசம்பர்: சென்னையில் மாற்றுப் பாலியல் கொண்ட மக்களின் குழுவான விறி தொடங்கப்பட்டது.

புத்தகங்கள்:

The trouble with islam'- இர்ஷாத் மான்ஜி.

'the boyfriend' - ராஜா ராவ்

2004

ஜுன்: 'ஈக்குவல் க்ரௌண்ட்' என்னும் அமைப்பு இலங்கையில் தொடங்கப்படுகிறது.

ஜூலை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு ரிட் மனு விஷயத்தில் பதிலளித்த நீதிபதிகள் அரவானிகளுக்குக் குடும்ப அட்டைகளும் மற்ற அடையாள அட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர்.

ஆகஸ்ட்: 'கிர்ல்ஃப்ரெண்ட்' என்னும் ஒர் பாலினச் சேர்க்கைப் பெண்கள் பற்றிய திரைப்படத்தைக் காட்டிய திரைஅரங்குகள் மீது தாக்குதல்.

செப்டம்பர்: தில்லி உயர் நீதி மன்றம் நாஸ் வழக்கை ரத்து செய்கிறது. அதே ஆண்டு உச்ச நீதி மன்றத்தின் அழுத்தத்தால் மீண்டும் உயர் நீதி மன்றத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. 'வாய்சஸ் அகென்ஸ்ட் 377' என்னும் பல அமைப்புகள் கூடிய குழுவும் இவ்வழக்கில் பங்கெடுக்கத் தொடங்கியது.

திரைப்படங்கள்:

சன்சாரம்: லிஜி புல்லப்பல்லி, மலையாளம்.

'a touch of pink' - இயன் இக்பால் ரஷித்.

'yours emotionally'- ஷ்ரிதர் ரங்காயன்.

'happy hookers' - ஆஷிஷ் சௌனி.

புத்தகங்கள்:

'Madras on rainy days' - சமீனா அலி.

'Swimming in the monsoon sea'- ஷ்யாம் செல்வதுரை

'Babyji' - ஆபா தாரெஷ்வர்.

2005

ஜனவரி: ப்லூ டைமண்ட் சொசைடி வார இதழ் வெளியிட தொடங்கியது.

மார்ச்: ஓரினச்சேர்க்கை ஆளான ஒரு நீச்சல்ஆட்டக்காரர் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர் பற்றிய ஒரு கதை 'மை ப்ரதர் நிகில்' என்கிற படமாக எடுத்து வெளியிடப்பட்டது.

ஜூலை: இலங்கையில் முதல் ப்ரைட் ஊர்வலம் நடைபெற்றது.

திரைப்படங்கள்:

'மை ப்ரதர் நிகில்'- ஒனிர் சென்.

' ஷப்னம் மௌசி'- யகெஷ் பரத்வாஜ்.

புத்தகங்கள்:

'Because I have a voice' - அர்விந்த் நராயன் மற்றும் கௌதம் பான்.

'Impossible desires: queer diasporas and south asian public cultures'- காயத்ரி கொபினாத்.

'Love is rite: same sex marriage in India and the west' - ரூத் வனிதா.

2006

சென்னையில் மிகப்பெரிய அணிவகுப்பு ஒன்றை அரவானிகள் மேற்கொண்டனர். இதன் பின் தங்களது கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்தனர்.

எழுத்தாளர் விக்ரம் செத் எழுதி பல முக்கிய நபர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் இந்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

ஜனவரி: நான்கு ஓரினச்சேர்க்கை ஆண்கள் லக்னௌ நகரில் கைது செய்யப்படுகின்றனர்.

மார்ச்: ஓர்பாலினச் சேர்க்கை ஆண்கள் சமூக வளர்ச்சி மையம் சென்னையில் தொடங்கப்படுகிறது.

ஏப்ரல்: மாற்றுப்பாலின சமூகத்தார் மீதான வன்முறை பற்றித் தலாய் லாமா வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் சமூக நலத்துறையின்கீழ் அரவானி நலவாரியம் செயல்படத் தொடங்கியது.

2007-2008

பல நகரங்களில் ப்ரைட் ஊர்வலங்கள் நிகழத் தொடங்கின.

ஆவணப்படங்களும் பிரபல சினிமாப் படங்களும் ஓர்பாலினச் சேர்க்கையினரைக் கொண்டு எடுக்கப்பட்டன.

பெங்கலூரு, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் திரைப்பட விழாக்களும் கருத்தரங்குகளும் நிகழ்த்தப்பட்டன.

பல வகை ஊடகங்களில் பாலியல்பு பற்றிய சர்ச்சைகள் சிறந்த முறையில் வெளிப்படத் தொடங்கின.

சென்னையில் ஜூன் மாதம் சக்தி மையம் தொடங்கப்பட்டது.

மே 2008இல் சென்னையில் ஓர்பாலினச் சேர்க்கை பெண்கள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக நடந்து வரும் இக்கொடூரம் குறித்து மாற்றுப் பாலியலாளர்கள் மற்றும் பெண்ணியலாளர்கள் இது குறித்துப் பொதுவெளியில் பேசினர்.

2009

மார்ச் மாதம் தமிழக அரசு அரவானிகளுக்குப் பால் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்யப்படும் என்று அறிவித்தது.

ஜூலை 2: தில்லி உயர் நீதி மன்றம் 18 வயதிற்கு மேற்பட்டோர் தனிப்பட்ட இடங்களில் ஓர்பாலின உடலுறவு வைத்துக்கொள்ளல் சட்டப்படி குற்றமன்று என்றும், இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகன்/குடிமகளுக்கும் ஒரே உரிமைகள் உண்டு என்றும் தீர்ப்பளித்தது.

இன்றும் இவ்வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்து வருகிறது.

"பொதுவான ஒழுக்க நெறி விதிகள் என்பது. அரசியலமைப்புச் சட்ட ஒழுக்க நெறிகளினின்றும் வேறுபட்டது. இந்த நெறிகள் சூழ்நிலைகள் சார்ந்து மாறக்கூடியவை. நாட்டின் நலன் என்பது பற்றி முடிவு செய்ய ஆய்வுக்குள்ளாகும் ஒழுக்க நெறியானது அரசியலமைப்புச் சட்டத்தினுடையதாக இருக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருக்கா நெறி விதைகளாக இருக்க முடியாது." (பத்தி 79)

"ஒழுக்க நெறி சார்ந்த மனக் கொதிப்புகள் எவ்வளவு பரவலாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளான சுயகௌரவம் மற்றும் தனிச் செயல்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ அவை போதுமான அடிப்படைக் காரணமாக இருக்க முடியாது. எனவே பொது ஒழுக்க விதிகள், பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட தாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த ஒழுக்க நெறி விதிகள் தாம் கூடுதலாக மதிக்கபப்ட வேண்டும்." (பத்தி 86)

"தனிப்பட்ட குடிமகன் யாராக இருந்தாலும் அவரை மட்டுமே சார்ந்த தனிமைச் செயல்பாடுகளை பொது ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் சரிப்படுத்துவதற்காக அவரது வாழ்க்கையில் தலையிடுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு வசங்கவில்லை. 18 வயதிற்கு மேலான இரு தனி நபர்கள் பரஸ்பர ஒப்புதலோடு தனிப்பட்ட முறையில் ஈடுபடும் பாலுறவுகளில் கடுமையான தீங்கு ஏற்படுவதற்கான சரியான ஆதாரம் ஏதும் இல்லாத சமயத்தில் அரசாங்கம் தலையிட முடியாது. இவாறு செய்வது தன்னிச்சையானதும் காரண காரியங்களை மீறியதும் ஆகும். (பத்தி 92).

நாஸ் பவுண்டேஷனுக்கும் இந்திய யூனியனுக்கும் இடையிலான வழக்கில் ஜூலை 2, 2009 அன்று வெளியான தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து: தமிழாக்கம்: டி. ஐ. ரவீந்திரன்

Pin It