இந்திய மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

வளர்ச்சியடைந்த நாடுகளுக்ககுச் சாதகமான உலகமயமாக்கல் நமது மருத்துவக் கல்வியிலும் மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவக் கருவிகள் செய்யும் நிறுவனங்கள், தனியார் நலக்காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை அடங்கிய மருத்துவத் தொழில்துறைக் கூட்டமைப்பின் வர்த்தக நலன்களுக்கேற்ப நமது மருத்துவக் கொள்கைகளிலும், மருத்துவத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் மாற்றங்கள் செய்யப் படுகின்றன. உலக வங்கியின் நிர்ப் பந்தம் மூலம் இவை நிறைவேற்றப் படுகின்றன.

மருத்துவத்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படுகிறது. மருத்துவமும், மருத்துவக் கல்வியும் வியாபாரமாக் கப்படுகிறது. இதனால் ஏழைகளுக்கு இவை எட்டாக் கனியாகி விட்டன. கல்வி, குடிநீர்வழங்கல், துப்புரவுப் பணி செய்தல், ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்தும் தனியார் மயமாகி, வியாபார மயமாகி வருகிறது. இந்த அவலத்தைப் போக்கிட வளர்முக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும்.

சேவைத் துறையில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்காக உலக வர்த்தகக் கழகம் (WTO)மூலம் போடப்பட்ட (Genetal Agreement on Trade in Services GATS) ஒப்பந்தத்தில் இருந்து மருத்துவம், கல்வி போன்ற முக்கிய சேவைத் துறைகளுக்கு விதிவிலக்கு பெறவேண்டும். வளர்ச் சியடைந்த நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். அவற்றின் நலன்களுக்கேற்ற உலக மயமாக்கலுக்கு மாற்றாக சர்வதேச அளவிலும், பிராந்திய அளவிலும் புதிய பொருளாதார முறைமை உருவாக்கபட வேண்டும்.. வளர்முக நாடுகளுக் கிடையே மருத்துவம், கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் பரஸ்பர உதவியும் கூடுதல் ஒத்துழைப்பும், ஒருங்கி ணைப்பும் ஏற்படுத்த வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்ப டுத்தவேண்டும்.

இந்நோக்கிற்காக உலக சமா தானத்திற்கான நோபல் பரிசை 1985 ல் பெற்ற அணுப்போர் தடுப்பிற்கான சர்வதேச டாக்டர்கள் இணைந்த சமாதானம் மற்றும் முன்னேற்றத் திற்கான இந்திய டாக்டர்கள் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் பேரவையும் இணைந்து  நல்வாழ்வுத்துறையில் மருத்துவக்கல்வியில் உலக மயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த கருத்தரங்கை 05.06.2010 சனியன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடத்தினஅக் கருத்தரங்கில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

1. கிராமப்புற மக்களையும் மாணவர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் வகையில் கிராமப்புற மருத்துவர்கள் என்ற மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை கிராமப்புற மக்க ளுக்காக தொடங்கிட முயன்று வருகி றது. இத்திட்டம் தரமான மருத்துவ சிகிச்சையை பெறுவதில் கிராமப்புற மக்க ளுக்கும், நகர்புற மக்களுக்கும் இடை யில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்ப டுத்திவிடும். இந்தக் கிராமப்புற மருத்து வர்கள் முதுநிலை மருத்துவம் பயில முடியாது, கிராமப் புறங்களைத் தவிர வேறு பகுதிகளில் மருத்துவப்பணி செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இந்த மருத்துவப் படி ப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எதிர் காலத்தை பாதிக்கும். உயர்கல்வி பயில்வதற்கும், எங்குவேண்டு மென்றாலும் பணி புரிவதற்கும் அரசியல் சட்டம் வழங் கியுள்ள உரிமைக்கு எதிரானது இத்திட்டம். தமிழகம் உட்பட 11 மாநிலங்களிலும் 5 யூனியன் பிரதே சங் களிலும் அனைத்து  ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்து வர்கள் உள்ளனர். இவர்களுக்கு அப்பால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர் கள் வேலை வாய்ப்பிற்காக காத் திருக்கின்றனர். இந்நிலையில் இத் திட்டம், எம். பி . பி .எஸ் படிப்பை படித்த டாக்டர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும். இதனால்த்£ன். நாடு முழுவதும் உள்ள மருத்துவர் சங்கங்களும், மருத்துவ மாணவர்கள் அமைப்புகளும் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றன. எனவே, அரசு இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.

2. முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் ஐம்பது விழுக்காட்டை கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர் களுக்கு ஐம்பது விழுக்காடு ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும், கிராமப் புறங்களில் பணியாற்றும் மருத்துவர் களுக்கு பாதுகாப்பான தங்கும் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும், மருத்துவர்களையும் இதர மருத்துவப் பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையிலும், கட்டாய சேவை என்ற பெயரிலும் நியமிப்பதை கைவிட வேண்டும், நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த மருத்துவர்கள் உட்பட அனைத்து தற்காலிக மருத் துவப் பணி யாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். மருத்து வத்துறையில் உள்ள காலிப்பணி யிடங்கள் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். பயிற்சி மருத்துவர்களுக் கும், அனைத்து அரசு மருத்துவர்க ளுக்கும் எட்டு மணி நேரம் மட்டும் வேலை என்பதை உத்தர வாதப் படுத்த வேண்டும்

3. தேசிய நலவாழ்வு மசோதா 2009 ஐ உரிய திருத்தங்களுடன் நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஜி.டி.பி.யில் 6 விழுக்காடு அளவிற்கு நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிட வேண்டும். போலி மருந்துகள், காலாவதியான மருந் துகள், தடை செய்யப்பட்ட மருந்து கள் மற்றும் அறிவியல் பூர்வமற்ற தவறான கூட்டு மருந்துகள் போன் றவை விற்கப்ப டுவதையும், காலாதி யான உண வுப்பொருட்கள் விற்கப்ப டுவதையும் தடுத்திட வேண்டும். போலி டாக்டர் களை ஒழித்தி டவும் அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சைகள் கிடைத்திடவும் நட வடிக்கை எடுத்திட வேண்டும்

4. குறைந்த விலையில் ஜென்ரிக் மருந்துகளை மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் மக்கள் மருந் தகங்களை தொடங்கிட மத்திய ரசாயன மற்றும் உரத்துறை முடிவு செய்துள்ளதை இக் கருத் தரங்கம் வரவேற்கிறது. இம்மருந்த கங்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவ னங்கள் மூலம் மருந்துகள் வழங் கப்படும் எனக் கூறப் படுவதும் வரவேற்புக்குறியது. ஆனால் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள் தொடங் கும் முடிவை கைவிடவேண்டும். அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் உள் மற்றும் வெளி நோயாளிகள் இல வசமாக அனைத்து மருந்து களையும் பெறும் உரிமையை இது பாதித்துவிடும் என்பதால் மத்திய மாநில அரசு மருத் துவ மனைகளில் இம்மருந்தகங்கள் தொடங்கப் படுவதை யும் கைவிட வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு தரமான இலவச மருந்து களை வழங்க  வேண்டும் என்ற அரசின் பொறுப்பை தட்டிக் கழித்திடக் கூடாது.

5. முதுநிலை மருத்துவக் கல்லூரி களுக்கு அனுமதி வழங்குவத ற்கான இறுதி கால வரம்பை ஜுலை 15 வரை நீட்டிக்கவேண்டும். சென்னை கே கே நகர்  ஈ எஸ் ஐ மருத்துவனையில் முது நிலை  மருந்துவக் கல்லூரி இவ் வாண்டே  தொடங்கப்பட அனுமதி வழங்கிட வேண்டும்அரசு மருத்துவர் களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வும், சிறப்புத் தேர்வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளி வரவில்லை இதனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அரசு பணியில் இருந்தும் இவர் களால்அரசு ஒதுக்கீ ட்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர முடிய வில்லை வரும் கல்வி ஆண்டிலாவது இவர்கள் அரசு ஒதுக்கீட்டில்முதுநிலை மருத்துவப் படிபபில் சேரும் வகையில் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். முதுநிலை மருத் துவக்கல்வி மாணவர் சேர்க்கை நுழை வுத்தேர்வு விடைத்தாள் கார்பன் நகல் தேர்வு எழுதியவருக்கு வழங்க வேண் டும். ஆன்லைன் கவுன்சலிங் வேண்டும். ஏதேனும் ஒரு துறைக்கு வெயிட்டிங் லிஸ்ட் போடலாம் என்பதை மாற்றி பொது வெயிட்டிங் லிஸ்ட் போடும் முறையைக்  கொண்டு வர வேண்டும்

Pin It