கிரிக்கெட் போர்டு தேர்தல் நடத்த நாட்டின் நீதிமன்றங்கள் அக்கறையோடு தலையிடுகின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காய்ச்சியேந்தல், நாட்டார்மங்கலம், கிராமங்களில் இந்திய ஜனநாயகம் தோற்றுக் கொண்டேயிருக்க, சாதி வெறியே ஜெயிக்கிறது.

யாருக்கும் மசியாத சாதிவெறி நம் எல்லோரையும் அவமதித்துக் கொண்டேயிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் அவமானம் துடைக்க...?

வெண்மணி நாளில் - மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பட்டினிப் போர் நடத்தியுள்ளது. படைப்பாளிகளும் பண்பாட்டுப் போராளிகளும் போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது.

Pin It