நந்தனார் என்ற சொல்லாடல் இலக்கியங்களிலும், கலை நிகழ்ச்சிகளி லும் ஆண்டாண்டு காலமாக காலத்தேவைக்கேற்ப கையாப்பட்டு வரு கின்றது. முதன்முதலாக 9ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாய னாரே தனது சிறுத்தொண்டர் தொகையில் துவங்கிவைத்தார். செம்மையே! திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்ற இந்த ஒருவரிச் சொல்லா டலை 10ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவர் தனது சிறுத் தொண்டர் திருவந்தாதியில், நாவார் புகழ்த் தில்லை அம்பலத்தான் அருள்பெற்று நாளைப்/ போவான் அவனாம் புறந்திருத்தொண்டன் தன் புன் புலை போய்/ மூவாயிரவர் கை கூப்ப முனியனவன் பதிதான் / மாவார் பொழிறிகழ் ஆதனூர் என்பர் இம்மண்டலத்தே! என நான்குவரிப் பாடலாக விரிவு படுத்தினார். மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் நந்தன் என்ற பெயர் இல்லை. திரு நாளைப் போவார் என்றும், அவர் ஊர் ஆதனூர் என்பதும், அவர் கோயிலுக்குள் நுழைய முடியாத கோயிலுக்கு வெளி இருந்து கொண்டு சிவத்தொண்டு செய்கின்ற புன்புலையன் என்பதும், அன்றே சிதம்பரத் தில் மூவாயிரம் பார்ப்பனர் இருந்தனர் என்பதையும் பதிவு செய்கிறார்.

மேற்கண்ட இரண்டு பாடல்களும் சமண, பௌத்த மதங்களை ஒழித்து, சைவமதத்தை நிலை நாட்டியதில், அனைத்து சாதியர்களின் பங்க ளிப்பை உறுதி செய்யும் முகமாக, அனைத்து சாதிகளிலும் நாயன்மார் கள் உருவாக்கப்பட்டனர். இது அன்றைய சமூகத்தேவையாக இருந்தது. 12ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சரான சேக்கிழார் உருவாக்கியது பெரியபுராணம். விரிந்து பரந்து உருவான சோழப் பேரரசை நிலைநிறுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளும் தேவை இருந்தது. மக்களின் மனங்கள் அரசுக்கு ஆதரவாக நிலைநிறுத்தப்பட வேண்டும். சமூகத்தின் கருத்து, ஆதிக்கச்சக்திகளின் கருத்து என்பதற் கேற்ப சமூகத்தின் கருத்தை ஒருமுனைப்படுத்துவதற்கு, திருநாளைப் போவார் என்ற நாயனாரின் கதையை மறு உருவாக்கம் செய்கிறார், சேக்கிழார். 37 பாடல்களும், 148 வரிகளையும் கொண்ட இப்பாடல் நந்த னார் கதையை விவரிக்கின்றது.

நந்தன் என்ற பெயர் பெரிய புராணத்தில் தான் முதன்முதலாக பதிவு செய்யப்படுகிறது. நந்தன் புலைச்சாதியைச் சேர்ந்தவன். இச்சாதியின ரின் சமூகக்கடமையை சேக்கிழார் உறுதிப்படுத்துகிறார். பேரிகை போன்ற வாத்தியங்களுக்கு தோலும், வாரும் கொடுப்பது, வீணை, யாழ் போன்ற இசைக் கருவிகளுக்கு தந்திரி தருவது, அர்ச்சனைக்காக இறந்த மாடுகளிலிருந்து எடுக்கப்படும் கோரோசனையைத் தருவது எனப் பட்டி யலிடுகிறார். இப்படிப்பட்ட குலத்தில் உதித்த நந்தன், தனது சாமிகளை விட்டுவிட்டு, சிவபெருமான்  மீது தீராக்காதல் கொண்டான் என வருணனை செய்கிறார். சாதிப்பிரிவினையும், அவர்களுக்கான கடமை யும் இறுக்கம் கொள்த் தொடங்குகிறது. அதற்கான சமூகத்தேவை இருந்தது. எனவேதான் சேக்கிழார் திருநாளைப் போவார் கதையை நந்தனார் கதையாக விரிவாக்கம் செய்து, மக்கள் மனதில் நிலைபெறச் செய்தார். சேக்கிழாரின் பெரிய புராணத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் அவல வாழ்க்கை குறித்து, படிப்போர் நெஞ்சம் உருகும் வகையில் இது சித்தரிக்கப்படவில்லை. உயர்சாதியினரின் ஒடுக்குமுறைகளும் பதிவு செய்யப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில், சோமசுந்தர பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்ற கதாகாலட்சேபத்தில் இவை அனைத்தும் தெளிவாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 1861ல் எழுதப்பட்ட இக்கீர்த்தனை தாழ்த்தப் பட்ட மக்களின் அவலவாழ்வு குறித்தும், ஆதிக்கச்சக்திகளின் ஒடுக்கு முறை குறித்தும் படிப்போர் மனது உருகும் வகையில் சித்தரிக்கப்பட்டுள் து. பாரதியாரின் கீர்த்தனையும் சேக்கிழாரின் கதையை மாற்றிக்காட்ட வில்லை.

இக்காலச்சூழலில், ஆங்கிலேயர் ஆட்சி வேர்பிடித்திருந்தது. பாதிரிமார்களின் மதப்பிரச்சாரம், அதை ஒட்டி, தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றம் இதனால் இந்து மதத்திற்குள் ஏற்பட்ட பிரதிபலிப்பு ஆகியன இப்படிப்பட்ட பதிவை பாரதியார் உருவாக்க காரணங்ககிப் போயின. 1917ஆம் ஆண்டு ஆ.கோபாலசாமி அய்யங்கார்  மற்றும் ஆராவமுத அய்யங்கார் என இருவர் நந்தன் என்ற புதினத்தை எழுதினார்கள். இக் காலத்தில் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம், இந்து முன்னேற்ற மேம் பாட்டு சங்கம், சென்னை இந்து சமூகச் சீர்திருத்த சங்கம், இன்னும் சில சிறு அமைப்புகள் தோன்றி, இந்து உயர்சாதியினரும், சமூக சீர்திருத்த இயக்கங்களும் தீண்டாமைச் சிக்கல் குறித்து விவாதித்து வந்தன.  விவேகானந்தரும், பாரதியும் தீண்டாமைக்கு எதிராக முழங்கி வந்தனர். இக்காலகட்டத்தில் உருவான இப்புதினத்தில், மேற்கண்ட கருத்துகள் எதிரொலித்தன. என்றாலும், சோமசுந்தர பாரதியாரின் கீர்த்தனையிலி ருந்து நந்தன் பாத்திரம் மாற்றம் செய்யப்படவில்லை. அக்காலத்தில் இயங்கிவந்த  தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களின் பாதிப்பு நந்தன் பாத்திரப் படைப்பில் எதிரொலிக்கவில்லை. எனினும் தீண்டாமை ஒழிப்பு, சாதி சமத்துவம், பிராமணர்களுக்கும் கீழ்சாதி மக்களுக்கும் இடையே நில விய உறவுகள், முரண்பாடுகள் குறித்து பேசப்படுகிறது.

ஒரு மூத்த கிழவன் மூலம் சாதி முரண்பாடும், வர்க்க முரண்பாடும் எவ்விதம் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கிறது என்பதை நூலாசிரியர்கள் உரையாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள். 1930களில் வெளிவந்த புதுமைப்பித்தனின் புதிய நந்தன் என்ற சிறு கதை வெகுவாகப் பேசப்பட்டது. அக்காலங்களில் நடைபெற்று வந்த தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், காந்தி தலைமையிலான விடுதலை இயக்கம் ஆகியன இச்சிறுகதையில் பதிவுசெய்யப்படுகிறது. நந்தன் சரித்திரத்தில் வரும் பாத்திரங்கள் இதில் இல்லை. எல்லோரும் புதிய கதைமாந்தர்கள். ஆனால் ஆதனூர் இருக்கிறது. புலைச்சேரி அப்படியே  இருக்கிறது. நந்தன், பறைச்சேரியில் விடைபெற்றுக் கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ, கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான் பழைய கள்ளுக்கடைதான் என்று புதுமைப் பித்தன் குறிப்பிடுகிறார். இதில் மூன்று கதாபாத்திரங்கள் முக்கியமா னவை. கருப்பன் ஒரு கிழட்டு நடைப்பிணம். அவன் மகன் பாவாடை சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து செயலாற்றுகின்றான். வைதீக சிரௌதிகளின் மகன் ராமன் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுகின்றான். இந்த மூவரும்  ஓடும் ரயிலில் ஒன்றாக அடிபட்டு இறந்துபோக, மூவரின் இரத்தமும் ஒன்றாகக் கலந்து ஓடுகிறது. ஆசிரியர் இதில் யாரை நந்தன் என்பது? புதிய ஒளியை இருவர் கண்டனர், இருவிதமாகக் கண்டனர் இறந்த பிறகாவது சாத்தியமா? பிறகு ஆதனூரில்? என்று பதிவு செய்கி றார். விடுதலை இயக்கத்தலைவர் காந்தி சனாதனத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதாலும் சீர்திருத்த இயக்கம் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைப் பிரதிபலிப்பதாலும், இரண்டு இயக்கங்களும் சேரி மக்களைக் கவரவில்லை  என்பதை புதியநந்தன் கதை சொல்லிச் செல்கிறது. 1949ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தன் சரித்திரம் நல்ல  தம்பி என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றது. நாடு விடுதலை அடைந்து விட்டதால் அனைவருக்கும் கல்வி தந்துவிட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. தில்லையம்பலத்திற்குப் பதில் சென்னைக் கல்லூரி, கிந்தனின் படிக்க விரும்பும் சிந்தனையை ஆசிரியர் இகழ, அதை மீறிப் பட்டணம் சென்று படித்து பள்ளி ஆய்வா ராக மீண்டும் அவன் ஊருக்கே வருகிறான். விலகிப் போடா கிட்ட வராதே! என்று விரட்டிய பள்ளி ஆசிரியர், கட்டித் தழுவுவதாக கதை சொல்லப்பட்டி ருக்கிறது. கோபாலகிருஷ்ண பாரதியார் கையாண்ட அதே முறையை என்.எஸ்.கிருஷ்ணனும் கையாளுகிறார். நந்தனாரில் இறைபக்தி முதன்மை பெற, கிந்தனாரில் தீண்டாமை முதலிடம் பெறுகிறது.

நந்தன் கதை என்னும் பழங்கதையை மாற்றி நாடு விடுதலை பெற்ற பின்னர் தாழ்த்தப்பட்ட சாதியினரை மேம்படுத்த கல்வி வழி செய்யும் என்ற புதிய கருத்தைக் கலைவாணர் பதிவு செய்தார். 1968 டிசம்பர் 25  அன்று வெண்மணி கிராமத்தில் நடைபெற்ற வன் முறையின் தாக்கம், இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை என்ற மேடை நாடகம் உருவாகக் காரணமாக இருந்தது. இந்நாடகம் நந்தன் கதையை சாதி முரண்பாடாகக் காணாமல் வர்க்க முரண்பாடாக காண முயன்று  தோல்வி அடைகிறது. சமய உணர்வை முதன்மையாகக் கொள்மல் அழகியல் உணர்வை அதாவது கள்ளுண்ணாமை, தூய்மை, அழகுணர்வு என்பவற்றை முதன்மைப்படுத்துகிறது. இதன் வாயிலாக சிவவழிபாட்டில் ஈடுபடச் செய்ய முயல்கிறது. ஆதிக்கச்சக்தி களுக்கு எதிராக விழித்து எழுந்துவிடுவார்களோ என அஞ்சி  முதலியார், உடையார், வேதியர் என அனைத்து ஆதிக்கச்சாதிகளும் இணைந்து சூழ்ச்சி செய்து நந்தனை தனிப்படுத்தி ஒழித்துக்கட்டுவதாக நாடகம் புனையப்பட்டுள்து. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் பார்ப்பான் என்ற விக் கத்தைத் தருகிறார். சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே வர்ணம் மீறாமல் தொழிலை தொடர்ந்து செய்யலாம் என்பதாக நந்தனைப் பேச வைத்து, தனது வர்க்கப்பார்வை குறித்த போதாமையை வெளிப்படுத்து கிறார். அக்காலகட்டத்தில் தம்முள் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலார்கள் போராட்டம் நடத்தி வந்தது குறித்து பதிவு செய்யாமல், அவர்களை எளிதில் ஏமாறுபவர்ககக் காட்டியது காலத்தேவையை பூர்த்தி செய்யவில்லை.

சாதிக்கொடுமைகள் நிலவிய ஈழத்தில் பெருநில உடைமையாராகவும், அரசு அதிகாரிககவும் வேர் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளை யில், 1960களில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலைய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. உயர்சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பைத் தணிக்கும் முயற்சியாக ஈழக்கவிஞர் முருகையனின் கோபுர வாசல் என்ற  கவிதையில்  நாடகவாயிலாக நந்தன் கதை பேசப்பட்டது.  நந்தன் தீக்குளிக்காது  தனது  ஆன்மீகஒளியில் அருட்கனலில்  தூய்மை பெற்று இறைவனைச் சேர்ந்தான் என முடிவை மாற்றிப் பதிவு செய்திருந் தார். இதை வெறும் சமயப் பிரச்சனையாக குறுக்கியதால் பலரின் கவனத்தைப் பெறவில்லை. இதேபோன்று  எம்.சி.செயப்பிரகாசம் அவர்களின் நந்தனார் ஆராய்ச்சிக் கதை என்ற வில்லுப்பாட்டு, யமுனை முத்தைய்யா அவர்களின் நந்தனார் புரட்சி என்ற கதாகாலட்சேபம்,  டி. செல்வராஜ்  எழுதிய நந்தன் என்ற  நாடகம், தமிழன்பன்  படைத்துள் அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் என்ற புதுக்கவிதை என நந்தன் கதை மீண்டும் மீண்டும் இலக்கியப் படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு வருவதைக் காணலாம். இறுதியாக 2007ஆம் ஆண்டு நந்தன் கதை சோலை சுந்தரப்பெருமா ளின் மரக்கால் என்ற புதினத்தில் இடம்பெற்றது. கதாபாத்திரங்கள் மூலம்  வர்க்க முரண்பாடுகள் விவாதிக்கப்படுகிறது என்பதும், போதும் ஆண்டே, நிறுத்துங்க  என அனைத்து நீசப்புலையர்களும் ஒரேகுரலில் ஓங்கி ஒலித்ததும், தஞ்சை விவசாய தொழிலார்கள் போராட்டங்களில் அடித்தால் திருப்பி அடி என்ற முழக்கம் நினைவுபடுத்தப்படுவதும் மற்ற படைப்புகளில் இல்லாத ஒன்றாகும்.

உலகமயப் பொருதாரமும், அதன் தாக்கமும் புலப்பெயர்வும் தாழ்த்தப்பட்டவர்களின் சமீபகால எழுச்சியும் அமைப்புரீதியாக அவர்கள் அணிதிரண்டு இருப்பதும் என்ற இக்காலத்தேவையை இப்புதினம் நிறைவு செய்யவில்லை. மேலும், இந்திரா பார்த்தசாரதி போன்றே சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே வர்ணத்தை மீறாமல் தொழில் செய்யலாம் என்பதாக நந்தன் பேசுவது நந்தன் கதை மீட்டுருவாக்கம் செய்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றே தோணுகிறது. மேற்கண்ட இலக்கியப்பதிவுகள் அனைத்தும் நந்தன் என்ற ஒரு நீசப் புலையன், வேதியரின் பண்ணையடிமை, சிவதரிசனத்திற்காக, தில்லையம்பதியில் ஆலயப்பிரவேசம் செய்து, வேதியர்கல் எரியூட்டப்பட்டான் என்பதே நந்தன் கதையின் அடிக்கருத்தாகும். நந்தன் ஒரு அடிமை என்ற கருத்து தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரச் சாரம் செய்யப்ட்டு மக்களின் மனங்களில் மட்டுமல்ல, பதிவு செய்யப்பட்ட இலக்கியங்களிலும், நிகழ்த்துக் கலைவடிவங்களிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்பதை இதுவரையில் பார்த்தோம். ஆனால் இதற்கு எதிரான ஒரு கருத்தும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் மனங்களில் மட்டுமல்ல சில வாய்மொழி வரலாறுகளிலும், ஆய்வுரைகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் நாம் காணவேண்டும். அது நந்தன் ஒரு மன்னன் என்ற கருத்தேயாகும். மன்னன் என்ற கருத்து அமுக்கப்பட்டு அடிமை என்ற கருத்தே இன்று வரை மேலோங்கி வந்துள்து. எனவே இது குறித்து பரிசீலிப்பது பல புதிய விவாதங்களுக்கும்  ஆய்வுகளுக்கும் நம்மை இட்டுச்செல்லும் எனக் கொள் இடமுண்டு. எனவே நந்தன் ஒரு அடிமை என்ற கருத் துக்கு எதிரான, நந்தன் ஒரு மன்னன் என்ற கருத்து  அடித்த மக்களின் மனதில் நீங்காமல் நீடித்து வருகிறது என்பது  குறித்து இனி பார்க்கலாம்.

பழங்கதைகள் அடிக்கடி இலக்கியங்களில் இடம் பெறுவதற்கான காரணங்கள் குறித்து ஜெர்மானிய உவியலாளர் டாக்டர் யூங் பின்வரு மாறு கூறுகிறார். மனித இனத்தவர்கள், ஆதிகாலத்தில் பெற்ற அனு பவங்கள், அழியாத நினைவுககப் பரம்பரை பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு,அவர்களுடைய அடிமனதில் இடம் பெற்று விடுகின் றன. இந்நினைவுகளே தற்கால மனிதனை அவனுடைய ஆதிகாலத்து டன் இணைத்துவிடுகின்றன. சில கருத்துப்படிமங்கக, பழங்கதை கக, தொன்மப்படிமங்கள் எனப்படும் உருவக மாந்தராக திரும்பத் திரும்ப மக்களின் பேச்சிலும் கலையிலும் எழுத்திலும் தோன்றுவது இந்த அடிமன நினைவுகளின் வெளிப்பாடேயாகும்.

சில குறிப்பிட்ட தொன்மப் படிமங்கள் கருத்துப்படிமங்கள், பழங்கதைகள் ஆகியவற்றுடன் இணைத்துப்பார்த்து தற்கால படைப்புகளின் சக்தியையும், முக்கியத்து வத்தையும் விக்க முடியும்  என்ற நீண்ட விக்கம் தருகிறார். முதல் கதை : சோழப்பகுதியை ஆண்ட பறையர்குல வம்சாவளியைச் சேர்ந்த நந்தன் என்னும் மன்னன், மணம் புரிந்துகொள்ளும் பொருட்டு வெள்ர் சாதியில் பெண் கேட்டான். கோபமுற்ற வெள்ர்கள் நந்தனையும் அவன் சார்ந்த வகுப்பினரையும் கொன்றுவிடத் திட்டமிட்டனர்.  நந்தன் ஒரு மன்னன் என்பதால் நேரடியாக வெல்ல முடியாமல், கொல்வதற் காக ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இதற்காக நந்தனிடம் பேசிய வெள் ர்கள் இருசாதியாரும் ஒன்றுகூடிப் பேசி, திருமணம் ஒப்பந்தம்  செய்ய லாம் என்றும் அதற்காக நந்தன் தன் வகுப்பினர் யாவரையும் அழைத்து வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். முன்கூட்டியே கம்மார் களுக்கு உரிய பொருளைத் தந்து பொறிப்பந்தல் ஒன்றை அமைக்கச் சொன்னார்கள் வெள்ர்கள். குறிப்பிட்ட அந்நாளும் வந்தது. தன் வகுப்பினரோடு வந்த நந்தன் பந்தலின் கீழ் கூட்டமாக அமர்ந்தான். வெள்ர்கள் எதிரே அமைக்கப்பட்டிருந்த மற்றொரு பந்தலின் கீழ் அமர்ந்தனர். உரிய சமயத்தில் நந்தன் அமர்ந்திருந்த பொறிப்பந்தலின் பாரத்தையெல்லாம் தாங்கியிருந்த மையத்தூணை தட்டிவிட்டு கவிழ்த் தார்கள். அசலான பந்தல்போலச் செய்யப்பட்ட பொறிப்பந்தலின் கீழ் அகப்பட்டு நந்தனும் அவனது வகுப்பினரும் இறந்தார்கள். தப்பியோடிய ஒன்றிரண்டு பறையர்களையும் சுற்றி நின்ற வேர்கள் கொன்றனர். 1798ஆம் ஆண்டில் காலின் மெக்கன்சியின் உத்தரவின் பேரில், தஞ்சை வேதநாயக சாஸ்திரி என்னும் புலவர் வலங்கைச்சரித்திரம்  என்னும் நூலைத் தொகுத்துள்ர். அன்றுதஞ்சை வட்டார மக்களிடம் வாய்மொழி வரலாறாக உலவி வந்த இக்கதையைத் தொகுத்துள்ர். மேலும் பறையர் குலத்தலைவன் மல்லியப்பெருமாள் வம்சாவழியில் வந்த ஒருத்திக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்தவன் நந்தன் என ரத்த உறவையும் காட்டுகிறார். மேலும் கும்பகோணத்திற்கும் பட்டீஸ்வரத்திற் கும் இடையே பழைய கட்டிடம் இருப்பதாகவும், அதை நந்தன் மாளிகை என மக்கள் கூறுவதாகவும் வேதநாயக சாஸ்திரி பதிவு செய்துள்ர். மேலும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியமம் அ. முத்தப்பசெட்டியார் எழுதிய ஜெயம் கொண்டார் விக்கம்  என்னும் நூல் நந்திக் கலம்பகத் தின் பாட்டுடைத்தலைவனான நந்தி என்னும் இம்மன்னன் அருந்ததியப் பெண்ணுக்கு பிறந்தவன் என்று  கூறுகிறது.

இரண்டாம் கதை : அயோத்திதாசர் 1910முதல் தமிழன் இதழில் தொடராகவும், தனித்த கட்டுரைகளிலும் நந்தனை பௌத்த மன்னனாக விவரித்து எழுதினார். புன நாட்டிற்கு கிழக்கே வாதவூரென்னும் தேசத்தை ஆண்டுவந்த மன்னன் நந்தன். இந்நிலையில் சாதிபேதமுள் வேஷ பிராமணர்கள் பல தேச மன்னர்களையும் ஏமாற்றி பின்னாள் நந்தனை வந்து காண்கின்றனர். அவர்கள் சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லியும் ஏய்த்தனர். ஆனால் பௌத்த குருக்கள் மூலம் இதன் உண்மையை அறிய விரும்பினான் நந்தன். உண்மையை அறிந்த அஸ்வகோஷர் உள்ளிட்ட பௌத்த குருக்கல் ஆர்ய மிலேச்சர்களின் பொய்வேடம் அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின்னும் வேஷ பிராமணர்கள் நந்தனை நோக்கி நாங்கள் வழிபடும் சிவ ஆலயம் உங்கள்நாட்டிலும் பூர்வீகமாக உள்து. எனவே, நாங்கள் சொல்வது உண்மை என்று பொய் கூறினர். தனக்குத் தெரியாமல் நடந்திருக்கமுடியாத இக்கூற்றைக் கேட்டு வியப்படைந்த நந்தன் உண்மையறியச் சென்றான். நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரைகாத தூரத்தில் பழைய கட்டிடம் போல் செய்யப்பட்ட மண்டபத்தின் உள்ளே சென்றபோது அங்குள் பொறியில் சிக்கி தூண்கள் சரிந்து கொல்லப்பட்டான். வேஷ பிராமணர்களோ, சுவாமிக்குப் பிரியம் வந்து நந்தனை விழுங்கிவிட்டதாகச் செய்தி பரப்பினர். பக்கத்து நாட்டு அரசனைத் தூண்டிவிட்டு நந்தனின் நாட்டைக் கைப்பற்றி அந்நாட்டிலிருந்து மக்களைத் துரத்திவிட்டனர். இது அயோத்தி தாசர் எழுதும் வரலாறு. வேதநாயக சாஸ்திரி கதையுடன் அயோத்தி தாசரின் கதை இணைகிறது. மேலாக நந்தனை ஒரு பௌத்த அரசனாக அயோத்திதாசர் சித்தரிக்கிறார். இத்துடன் முத்தப்ப செட்டியார் நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் நந்தன்தான் என ஜெயம்கொண்டார் வழக்கம் என்ற நூலில் பதிவு செய்துள்தையும் கவனம் கொள்வேண்டும். எனவே நந்திக் கலம்பம் கூறும் கதை குறித்துப்பார்க்கலாம்.

மூன்றாம் கதை : பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் (846869) நல்ல தமிழ் அபி மானி. இவனுக்கும் இவனது மாற்றாந்தாய் பெற்ற பிள்ளைகளுக்கு மிடையே அரியணைப் போட்டியிருந்தது. வேறுவழிகளில் நந்தியை வெல்ல முடியாத அவனது தம்பிமார் அவனது தமிழ்ப்பற்றை வைத்தே அவனைத்  தீர்த்துக்கட்ட முனைந்தனர். அவன் மீது அறம் வைத்துப்பாடி நந்திக் கலம்பம் எனும் ஓர் அற்புத இலக்கியத்தை படைத்தார்கள். அதில் சில பாடல்களை ஒரு தாசியிடம் தம்பி ஒருவன் முனிவர் வேடத்தில் போய்ச் சொல்ல, அவள் அதைப் பாடிக்கொண்டிருக்கும்போது நந்தி யின் வீரர்கள் அதைக் கேட்க, மன்னவன் அந்த தாசி மூலம் அந்த முனி வரை அழைத்துவரச் செய்து அனைத்துப்பாடல்களையும் பாடச் சொல்ல, அவரோ ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பச்சை ஓலைப்பந்தல் போடப்படவேண்டும் என்றும் பாடல் முடிந்ததும் அது தீப்பற்றி எரியும் என்றும் கடைசிப்பாடலைப் பாடவேண்டுமென்றால் கேட்கிறவர் சிதை யில் படுத்துக்கொண்டு கேட்கவேண்டுமென்றும் அதைப் பாடி முடித்த தும் அந்த சிதையும் எரியுமென்றும், அதற்குச் சம்மதமா என்று கேட்க, தமிழ்மீது கொண்ட மோகத்தால் இதற்கு ஒப்புக்கொண்டு சிதையிலேறி உயிரை நீத்தான். வேதநாயக சாஸ்திரி சேகரித்த கதையும் அயோத்திதாசர் பதிவு செய்த கதையும் நந்திக்கலம்பகக் கதையும் மக்கல் பேசப்பட்டு வந்த தொன்மக்கதைகளே. வாய்மொழிவரலாறு என்பது நாட்டார் வழக்காற்றி யல் துறையில் சிறந்த சான்றாவணமாகக் கொள்ப்படுகிறது. உண்மை யிலிருந்து துவங்குகின்ற இந்த வரலாறு காலப்பெருவெளியில் பல மாற்றங்களையும் புனைவுகளையும் உள்டக்கிப் பயணிக்கிறது. இந்த மூன்று கதைகளும் ஒரே சம்பவத்திலிருந்து துவங்கி மூன்று கதை ககப் பரிணமித்துள்ன. சுந்தரமூர்த்தி நாயனாரும் நம்பியாண்டார் நம்பியும் பதிவு செய்திருந்த திருநாளைப்போவார் என்பவர் நந்தன் அல்ல. தில்லையம்பலத்தில் நுழைந்து, எரியூட்டப்பட்டவன் வேறொரு ஆதனூர் புலையன். இவனது பெயர் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. இது 6ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம்.

9ஆம் நூற்றாண்டில் பட்டீஸ்வரத்திற்கு மேற்கே பாபநாசத்திற்கு கிழக்கே திருவலஞ்சுழிக்கு தெற்கே ஓரிடத்தில் கோட்டை கட்டி நந்தன் என்னும் மன்னன் அரசாண்டான் ( ஆய்வு: சுந்தர்காளி ) பறையர் வசம்சாவளிக்கும் சோழஅரசருக்கும் பிறந்தவன். பௌத்தமதத்தைத் தழுவியவன். (வடநாட்டிலும் நந்தர்கள் சாதிக்கலப் பில் பிறந்தவர்களே) பக்தி இயக்கத்தில் சமண, பௌத்த மதங்களை அழித்து சைவம் அரசமதமாக நிலைபெற்றவுடன் சோழப் பேரரசாக உருமாறத் தொடங்கியது. வேர்களும், பார்ப்பனர்களும் மேல் நிலை பெறப்பெற கலப்பில் பிறந்த பறையன் அரசனாக இருப்பதை ஏற்றுக்கொள் அரசும் மதமும் அனுமதிக்கவில்லை. நந்தன், நந்தி என்ற பெயர்கள் பௌத்த, சமணர்களுடையது. சைவ சோழப் பேரரசில், பௌத்தன் அரசனாக இருப்பதை ஏற்றுக்கொள் இயலாது. எனவே, பார்ப்பனர்களும் வேர்களும் இணைந்து சூழ்ச்சி செய்து நந்தி வர்மனை (நந்தன்) கொலை செய்துவிடுகின்றனர். இம்மன்னனைப் புகழ்ந்து  நந்திக் கலம்பகம் என்ற இலக்கியம் பெயர் தெரியாத புலவரால் எழுதப்பட்டுள்து. இதன்பின் 11ஆம் நூற்றாண்டில் வந்த நம்பியாண்டார் நம்பி தனது திரு வந்தாதியில் நந்தன் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆதனூர் மற்றும் தில்லை மூவாயிரவர் குறித்துப் பதிவு செய்கிறார். 12ம் நூற்றாண்டில் வேரான சேக்கிழார் நந்தன் கொலை வழக்கிலுள் வேர் களை விடுவிக்க கதையைப் புதிதாக எழுதத் தொடங்குகிறார். பார்ப்பனர் களுக்கும் பறையர்களுக்குமான வரலாற்றுப் பகையைப் பயன்படுத்தி, அவர்களிடையேயான முரண்பாடாகச் சித்தரிக்கின்றார். மேலும் மக்கள் தங்களிடையே புழங்கிவந்த கதைகளில் வேர்கள் குறித்துப் பேசுவது தெரிகிறது(வேதநாயகசாஸ்திரி). எனவே மக்கள் மனங் களிருந்து இதை அகற்ற எண்ணி நந்தன் (நந்திவர்மன்) என்ற பெயரை, பெயரறியப்படாத ஆதனூர் புலையனுக்குச் சூட்டி, திருநாளைப் போவார் கதையை நந்தன் கதையாக உருமாற்றம் செய்து, பெரிய புராணத்தில் காப்பியமாகப் பதிவு செய்கிறார். எனினும் மக்கள் தங்கள் வாய்மொழி வரலாறை, 18ஆம் நூற்றாண்டுவரை கடத்தி வந்துள்னர். இக் கதையை இரண்டாகப் பிரித்து, நந்தனை வேர்கள் கொன்றனர் என்றும் (வேதநாயக சாஸ்திரி), பிராமணர்கள் கொன்றனர் என்றும் (அயோத்திதாசர்) பேசி வந்துள்னர். எனினும் சேக்கிழாரின் பெரிய புராணக்கதையே தமிழ்நாடு முழுவதும் மேலெழும்பி நின்றது. ஆதிக்கச் சக்திகளின் கருத்தே சமூகத்தின் கருத்தாக நிலைபெற்றது.

நந்திக் கலம்பகக் கதையும், அன்றைய ஆதிக்கச்சக்திகல் இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு நந்திக் கலம்பகத்தில் மாண்ட கதை நாடறியும். சுந்தரஞ்சேர் தென்குத்தூர்ச் சோமேசா என சோமேசர் முதுமொழி வெண்பா தெரிவிக்கிறது. பறையன் மன்னனாக இருந்தான் என்பதை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய சேக்கிழார் எடுத்த முயற்சியே நந்தன் கதை. மேலும் பௌத்தம் சார்ந்தவன் என்பதும் அவரின் இம்முயற்சிக்கு வலு சேர்த்துள்து. நந்தனை நாயன்மாராக்கி, அவனின் உண்மை வாழ்க்கையை வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது சைவ மதத்திற்குக் கைவந்த கலையாகும். இரண்டு வேறுபட்ட சம்பவங்களை ஒன்றாக்கி புதிய ஒன்றாகப் படைத்து உலவவிடுவதும் சைவமதத்தின் குணமேயாகும். குறிஞ்சித்தெய்வமான முருகனை வடநாட்டு ஸ்கந்தனு டன் இணைத்து வள்ளி, தெய்வயானையுடன் சேர்த்து  மக்களை ஏற்றுக்கொள் வைத்தது போலத்தான் இதுவும்.

ஆதிதிராவிடர்களின் பூர்வீக சரித்திரம்  என்ற நூலை எழுதிய டி. கோபால் செட்டியார் பறையர்கள் ஒருகாலத்தில் தென்னிந்தியாவில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கயிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை என்கிறார். அ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி யில், தமிழ்நாட்டு புராதனக்குடிகள். ஒருகாலத்தில் பலமுள் கூட்டத்தினர் இவர்கள். பிராமணர்கள் எங்களை ஒத்தவர்கள் என்பர். பூனூல் உண்டு. ஒருவர் இடத்திற்கு மற்றவர் வரக்கூடாது என்பர். இவைகளை நோக்கும் பொழுது பார்ப்பனர் வருகைக்கு முன்பு அந்த இடத்தில் பறையர்கள் இருந்துள்னர் என்பதும் இவர்களிடையே தீராப்பகை உண்டு எனவும் அறிகிறோம். பறையனுக்கு இளையவன் பார்ப்பான் என்ற பழமொழி யும் நிலவி வருகிறது.  தன்னால் தோற்கடிக்கப்பட்ட வேத எதிர்ப்பு மரபிலிருந்து நந்தனின் வரலாற்றை எடுத்து அவனின் சித்திரத்தைக் குலைத்து இழிவுபடுத்தி எழுதிப் பரப்பியிருக்கிறது வைதீகம் என்ற புரிதலையே, நந்தன் குறித்த பனுவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது கிடைத்த தரவுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற முடிவாகும். முடிவும் நிரந்தரமல்ல ஆய்வுக்குரியதே.

Pin It